Tuesday, July 31, 2012

முதலில், உடம்பை குறைங்க...!'' .





மும்பையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த கதாநாயகிக்கு கொஞ்சம் சதைப்பிடிப்பான உடல்வாகு தான். படத்துக்கு படம் அவருடைய சம்பளம் ஏறுவது போல், உடல் எடையும் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் அவரை சந்தித்த ஒரு பட அதிபர், "சம்பளத்தை மட்டு� ��் ஏத்துறீங்க. உடம்பை கவனிக்க மாட்டேன்கிறீர்களே...முதலில் உடம்பை குறைங்க'' என்று அறிவுரை சொன்னாராம். "ஓகே...ஓகே...பார்க்கலாம்'' என்றாராம் அந்த நடிகை!





பில்லா 2 ஐத் தூக்கிவிட்டு நான் ஈ - பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை!







"சென்னை புறநகரில் உள்ளது காசி திரையரங்கம் (இது கோடம்பாக்க பாக்ஸ் ஆபீஸ் வரையறை). ஒரு படம் குறித்த மக்களின் நாடித் துடிப்பைத் தெரிந்து கொள்ள சரியான இடம் இதுதான்.
இந்தத் திரையரங்கில் ஜூலை 6-ம் தேதி வெளியானது நான் ஈ. செமத்தியான கூட்டம்.
தொடர்ந்து நான்கு காட்சிகளும் ஹவுஸ் புல்லாகவே ஓடிக் கொண்டிருந்த படத்தை, அடுத்த ஆறு நாட்களில் தூக்கிவிட்டார்கள்... காரணம், அஜீத்தின் பில்லா 2.
இந்தப் படத்தா ஜூலை 13-ம் தேதி திரையிட்டார்கள். ஆனால் 12-ம் தேதி இரவுக் காட்சிகூட நான் ஈ ஹவுஸ்புல்லாக ஓடியது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு கூட்டம் குவிந்தும் நான் ஈயைத் தூக்க வேண்டியிருக்கிறதே என்ற வருத்தத்தோடுதான் பில்லா வைத் திரையிட்டார்களாம்.
பில்லா 2-ன் வசூல் நிலவரம் என்ன என்பது கோடம்பாக்கத்துக்கே தெரிந்த கதைதானே.
இப்போது காசி தியேட்டர் பக்கம் போனவர்களுக்கு ஒரு சின்ன சர்ப்ரைஸ்! பில்லாவைத் தூக்கிவிட்டு மீண்டும் நான் ஈயைத் திரையிட்டுள்ளனர். மறு திரையிடலுக்கும் ஈ-க்கு பெரிய பேனர் வைத்து அமர்க்களப்படுத்தியுள்ளனர். வெளியிட்ட நாளிலிருந்தே நல்ல கூட்டம்!
காசி தியேட்டர் என்றல் ல... தமிழகத்தின் பல ஊர்களிலும் பில்லாவுக்கு பதில் நான் ஈ மீண்டும் திரையிடப்பட்டிருப்பதுதான் விசேஷம்!





அவரைதான் கட்டிக்குவேன்:அடம் பிடிக்கும் அஞ்சலி







திடீரென்று அஞ்சலிக்கும் 'லவ்' வந்துவிட்டது. நான் அவரைதான் கட்டிக்குவேன்என்று அடம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறாராம் அவர். இதனால் கதி கலங்கிப் போயிருக்கிறது சொந்த வீடு.

இதே கதிகலக்கம் இன்னொரு வீட்டிலும்! ஏன்? அஞ்சலி காதலிப்பதே அந்த � ��ீட்டு ஐயாவைதானே? அரசியலில் ஓரிடத்தை பிடித்துவிட வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கும் மனைவி, தன் புருஷனின் இந்த புரட்டு வேலையை ஏதோ ஜாலிக்கு இருக்கும் என்று முதலில் சட்டை செய்யாமலிருந்திருக்கிறார்.


இப்போது விஷயம் முற்றி விஷம் போலேறிவிட்டது. சமாளிக்க முடியாமல் திருதிருவாகி திரிகிறாராம். லம்ப்பாக சில 'சி' க்களை தள்ளியாவது 'சி' யை மீட்க முடியுமா என்று பா� ��ுங்கம்மா...
.






Monday, July 30, 2012

ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடம்: 4 படங்கள் போட்டி







தமிழில் ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நான்கு படங்கள் தயாராகின்றன. இவற்றில் எந்த படத்தை முதலில் ரிலீஸ் செய்வது என்பதில் போட்டா போட்டி நிலவுகிறது.

சூர்யா 'மாற்றான்' படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடிக்கிறார்.
நாயகி காஜல் அகர்வால். கே.வி.ஆனந்த் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. பாடல் சி.டி. வெளியீட்டு விழாவை வருகிற 9-ந்தேதி சிங்கப்பூரில் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளார். இவ்விழாவில் பங்கேற்க சூர்யா, காஜல் அகர்வால் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் சிங்கப்பூர் செல்ல உள்ளனர்.

'சாருலதா' என்ற படத்தில் பிரியாமணி ஒட்டிப்பிறந்த இரட்டையராக வருகிறா ர். பொன்.குமரன் இயக்குகிறார். அடுத்த மாதம் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது.

'இருவன்' என்ற பெயரில் இன்னொரு ஒட்டிப்பிறந்த இரட்டையர் படம் தயாராகி உள்ளது. முருகானந்தம் இயக்கி உள்ளார். உடல் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் உண்மை கதை என்று விளம்பரப்படுத்தி உள்ளனர்.

மலையாளத்தில் 1997-ல் 'இரட்டதல' என்ற பெயரில் ரிலீசான ஒட்டிப்பிறந்த இரட்டையர் படத்தை தமிழில் ட ப்பிங் செய்து வெளியிடவும் ஏற்பாடு நடக்கிறது.
.





மனைவியாக இருக்க விருப்பமில்லை’ - சினேகா அதிரடி!






கடந்த ஞாயிற்றுக்கிழமை(29.07.12) "சென்னை சர்வதேச ஃபேஷன் வார விழா" சென்னையில் நடந்தது. மாடலிங் துறையைச் சேர்ந்த பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். சினிமா நட்சத்திரங்களான சினேகா, பிரசன்னா, கார்த்திகா நாயர், அஜ்மல், மக� �், லட்சுமிராய் ஆகியோரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

சினேகாவும் பிரசன்னாவும் சென்ற வருடமே இவ்விழாவில் கலந்துகொண்டு ஜோடியாக நடந்துவந்தனர்.
ஆனால் அவர்கள் இருவருக்கும் அப்போது காதல் இருந்தது யாருக்கும் தெரியாது. புதுமணத்தம்பதிகளான சினேகாவும்-பிரசன்னாவும் ஆடி மாதமென்பதால் பிரிந்திருப்பது அனைவரும் அறிந்ததே.

இருவரும் பிரிந்திருக்கும் இந்த சமய� ��்தில் சினேகா "எனக்கு பிரசன்னாவுடன் மனைவியாக இருக்க விருப்பமில்லை" என்று கூறியிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

ஃபேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சினேகாவின் கேள்விகளும்  பதில்களும் :-

"போன வருடமும் நீங்கள் பிரசன்னாவுடன் ஜோடியாக நடந்து வந்தீர்கள். இப்போது கணவன் மனைவியாக நடந்து வரும்போது எவ்வாறு உணர்கிறீர்கள்?"

போன வருஷம் நாங்க இந்த நி கழ்ச்சியில் நடந்து வரும் போது காதலிச்சிகிட்டு இருந்ததே யாருக்கும் தெரியாது. போன வருஷம் காதலர்கள்; இந்த வருஷம் கணவன் மனைவியா நடந்துவர்றோம்.

"பிரசன்னாவோட மனைவியா எப்படி உணர்கிறீர்கள்?"

பிரசன்னாவோட மனைவியா இருக்க எனக்கு விருப்பமில்லை. பிரசன்னாவோட மனைவியா இருக்குறதவிட, காதலியா இருக்கதான் ஆசைப்படுகிறேன்.

"கார்த்தி நடிக்கும் 'பிரியாணி' படத்துல நீங்க இ� ��ெண்டு பேரும் ஜோடியா சிறப்பு தோற்றத்துல நடிக்கிறதா பேசிக்கிறாங்களே?"

அதுபற்றி இன்னும் முடிவாகல. பேசிகிட்டு இருக்கோம். முடிவு எடுத்ததும் கண்டிப்பா சொல்றேன்





ரணமான பில்லா 2...! குடைந்து எடுத்த ''ஈ ''






பில்லா 2 வெளியானதால் நான் ஈ படத்தை மல்டி பிளிக்ஸ்கள் சிறிய திரையரங்குக்கு மாற்றின. தனி திரையரங்குகள் படத்தையே மாற்றின. ஆனால் இரண்டாவது வாரத்திலேயே காட்சிகள் மாறத் தொடங்கின.

பில்லா 2 ஒரே வாரத்தில் ஓரங்கட்டப� �பட்டதால் மீண்டும் நான்ஈ-க்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள் திரையரங்குஉ‌ரிமையாளர்கள்.


தமிழகம் முழுவதும் 180 தியேட்டர்களில் நான் ஈ ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வாரத்திலிருந்து பல மல்டி பிளிக்ஸ்கள் சிறிய திரையரங்கிலிருந்து பெ‌ரிய திரையரங்குக்கு நான் ஈ-யை மாற்றியுள்ளன.

அதேபோல் தனி திரையரங்குகள் மீண்டும் நான் ஈ-யை திர� �யிட்டுள்ளன. வெளியான போது இருந்ததைவிட இப்போதுதான் இந்த தெலுங்கு டப்பிங்குக்கு அதிக வரவேற்பு. இதுவொரு படிப்பினை. சின்ன ஈ தானே என்று எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.





'பிறந்த நாள் விருந்தெல்லாம் ஓகே.. மனைவி எங்கேப்பா?'







ஆனாலும் புதுசாக, அநியாயத்துக்கு செயற்கையாக நட்பை விளம்பரப்படுத்தி வரும் ஜோடி என்றால் அது தனுஷும் சிம்புவும்தான்!
நாம் இப்படிக் குறிப்பிடுவதற்குக் காரணம், இந்த இருவரும் கடந்த காலங்களில் எவ்வளவு முடியுமோ அந்த அளவு ஒருவரையொருவர் க� �வலமாக விமர்சித்துக் கொண்டிருந்தார்கள்.
அதற்கு அவரவர் ரசிகர்களையும் பயன்படுத்தத் தவறியதில்லை. குறிப்பாக கொலவெறி பாட்டு வெளியான சமயத்தில் பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களில் சிம்புவின் கமெண்டுகள், அது பற்றி தனுஷ் தந்த பதில்களைப் படித்தவர்களுக்கு நினைவிருக்கலாம்.
இப்போதோ, நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க... எங்களைப் போல நண்பர்கள் உண்டா என்றெல்ல� �ம் பேட்டி கொடுத்து வருகிறார்கள். கூடவே இதெல்லாம் மீடியா வேலை என்று வேறு பிட்டைப் போட்டிருக்கிறார்கள்.
இருக்கட்டும்.
28ம் திகதி தனுஷுக்குப் பிறந்த நாள். பிறந்த நாளையொட்டி அன்று இரவு ஏகப்பட்ட நட்சத்திரங்களை அழைத்து மெகா தண்ணி பார்ட்டி கொடுத்திருக்கிறார் தனுஷ். அதில் சிம்புவும் ஆஜர். கூடவே அவர்கள் வயது 'தோழிகள்' ராதிகா போன்றவர்களும் தவறாமல் ஆஜராகியிருந்தனர். தம� �்னா, பிரேம்ஜி என பார்ட்டிகளுக்கென்றே பிறந்தவர்களும் வந்திருந்தனர்.
சேவல் வடிவில் (ஆடுகளம் ஹீரோல்ல...) கேக்கெல்லாம் வெட்டி கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்த பிறந்த நாள் விழா விருந்தில், தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இல்லை!!





தனுஷ் பிறந்த நாள் ஸ்பெஷல் : .







எதிர்பாராமல் புறப்பட்டு வந்து இதயங்களை பிடித்தவர் தனுஷ். நேஷனல் அவார்டு இவ்வளவு இளம் வயதில் என்பது இதுவே முதல் தடவை என்கிறார்கள். தனுஷ் பற்றி கொறிக்க கொஞ்சம் தகவல்கள்:

தேனி சொந்த ஊராக இருந்தாலும் சார் பிறந்து வளர்ந்தது எல்லாம் ச� ��ன்னைதான். சாதாரண ஸ்கூலில் படித்து, சாதாரணமான ஆவ்ரேஜ் ஸ்டூடண்ட் ஆக இருந்து +2 முடித்தவர். அதற்கு மேல் அய்யாவிற்கு படிப்பு ஏறவில்லை.


அக்கா டாக்டர் படிப்பு, அண்ணன் இன்ஜினியரிங் என முடித்திருந்தாலும் தனக்கு படிப்பு ஏறவில்லை என்பதில் தனுஷ்சிற்கு கொஞ்சம் வருத்தமே. ஆனால் பிள்ளைகளை பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

அப்ப ா, அம்மா வைத்த பெயர் வெங்கட் பிரபு. இன்னமும் அம்மா தனுஷ்சை அழைப்பது செல்லமாக பிரபு என்றுதான் அக்காக்கள் செல்லமாக கூப்பிடுவது 'குட்டி' என.

பைக் பிரியர். ஹெல்மெட் போட்டுக்கொண்டு நடமாட்டம் இல்லாத சாலையில் அதிவேகத்தில் பறந்து கொஞ்சம் தூரம் போவது அவரது பொழுதுபோக்கு.

குழந்தைகளை மீடியா போர்வையிலிருந்து பாதுகாத்தே வைத்திருக்கிறார் தனுஷ். எங்கே வெளியே கிளம்பின ாலும் குழந்தைகள் வீட்டில் இருக்க விட்டுத்தான் போவது வழக்கம்.

கடவுள் பக்தர். தீவிரமான ஆன்மீகவாதி. தினமும் காலையில் பூஜை புனஸ்காரம் முடித்துவிட்டுத்தான் அடுத்த வேலை.

வீடு, அலுவலகம் என எங்கே ரசிகர்களை பார்த்தாலும் போட்டோ எடுத்துக்கொள்ள ஆவலோடு முன்வருவார். பள்ளிக்கூட மாணவர்கள் என்றால் 'போங்கய்யா, படிக்கப்போங்க' என விரட்டுவார்.

அரசியல் ஆர்வம் மூச்! எதுவ ுமே கிடையாது. ஆனால் என்ன நடக்கிறது என விரல்நுனியில் வைத்திருப்பார். எந்தச் சமயத்தில் யாருடன் பேசினாலும் அரசியல் பற்றி மூச்சு விட மாட்டார்.

நெருங்கிய பத்திரிக்கையாளர்களுக்கு கூட அலைபேசி நம்பரை தரமாட்டார். ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி என்றுதான் எண்ணைப் பெற முடியும். மீடியாவை தேவைப்படும்போது மட்டும் மதிக்கிற குணம்.

மனைவி, ஐஸ்வர்யா டைரக்ஷனில் இறங்கியபோது 'வெரிகுட்' சொன்னது தனுஷ்தான். மனைவிக்காக டிஸ்கஷன் முதற்கொண்டு, தயாரிப்பு நிர்வாகம் வரைக்கும் இறங்கி வேலை பார்ப்பார் தனுஷ்.

இரண்டு குழந்தைகளுமே தாத்தா ரஜினியின் செல்லம்தான். எந்த நேரமாக இருந்தாலும் திடீர் திடீரென வந்து பேரனை கொஞ்சிவிட்டு போவார் ரஜினி. ராத்திரிகளில் கூட குழந்தைகள் தாத்தாவை கேட்டு அழுதால் ஆஜராவார் ரஜினி.

தனுஷ் அம்மா செல்லம். எவ்வளவு வேலை இருந்தாலும் அம்மாவோடு தினமும் பேசிவிடுவார். ஊரில் இருந்தால் ஞாயிறுக்கிழமை அண்ணன், அக்காவோடு சேர்ந்து சாப்பிட்டு அட்டகாசமாக சிரித்து மகிழ்வார்கள். அந்த மீட்டிங்கில் சினிமாவைப் பற்றி பேசுவது கிடையாது.

குறைவாக சாப்பிடுவார். ப்யூர் வெஜிடேரியன். நான்&வெஜிடேரியன் அயிட்டங்களை திரும்பிக்கூட பார்க்க மாட்டார். இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு புருவங்களை உயர்த்தி � �த்து இட்லி சாப்பிட்ட மாதிரி பிரமிப்பார்.

தனிமை விரும்பி. அதிகமான நண்பர்கள் கிடையாது. நடிகர்களிலும் பெரிதாக நண்பர்கள் கிடையாது. வெற்றிமாறன் உள்ளிட்ட ஒரு சில டைரக்டர்களிடம் கொஞ்சம் வெளிப்படையாக பழகுவார்.

இப்போதுதான் பார்ட்டிக்கு அடிக்கடி போகிறார். ஆனால் அங்கேயும் 'அடக்கமாக' இருப்பதுதான் அவர் வழக்கம்.

உடை விஷயத்தில் அக்கறை இல்லாமல் இருந்தவரை அடியோட� � மாற்றியது மனைவி ஐஸ்வர்யாதான். இப்போது அய்யா கோட் சூட் என பின்னி எடுப்பதின் ரகசியமும் அதுதான். எப்போதும் அவருடைய டிசைனர் ஐஸ்வர்யாதான்.

தங்க நகைகளை விரும்ப மாட்டார். ஆர்வமும் கிடையாது. இப்போது சின்னதாக ஒரு நெளி மோதிரம் மின்னிக் கொண்டு இருக்கிறது யார் போட்டதோ!

கிசுகிசு என வந்தால் அதற்கு பதில் சொல்கிற வழக்கமே தனுஷ்சிடம் கிடையாது. ஸ்ருதியோடு இணைத்து பேசுகிறா ர்களே எனக் கேட்டால் அப்படியா, சும்மா பேசுறாங்க சார்! என அப்பாவியாக சொல்லிவிட்டு கேள்வியை முடித்துவிட்டு நெக்ஸ்ட் சார்' என்பார்.

தன்னைப்பற்றிய பேட்டிகள் வந்தாலும், அதை அடையாளம் கண்டு 'தேங்க்ஸ் சார்' சொல்கிற பழக்கம் ஆரம்பத்தில் மட்டும் இருந்தது. இப்போது எங்கே பார்த்தாலும் 'எப்படி இருக்கீங்க' என ஒரு வார்த்தையோடு புன்னகை இலவசம்.

இவ்வளவு இளம் வயதில் நேஷனல் � ��வார்டு வாங்கியது இவர்தான் என தகவல்கள் சொல்கின்றன.

'கொலவெறி' பாட்டின் மூலம் உலக அளவிற்கு பிரபலம் ஆனார் தனுஷ். ஏராளமான நடிகர்களை காதில் புகை விட வைத்தார் தனுஷ்.

தனுஷ்க்கு பில்லியர்ட்ஸ்தான் உயிர். வீட்டிலேயே அதற்கான கோர்ட் வைத்திருக்கிறார். அதில் பெரிய அனுபவம் பெற்றவர். கிரிக்கெட்டுக்கும் அடிமை.

ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சரியான நேரத்தில் வந்து சேர்வார். ர ொம்ப கலகலப்பாக இருக்காமல், கேரக்டருக்கு தகுந்த மாதிரி இருந்துகொண்டு புத்தகங்கள் படித்துக் கொண்டு இருப்பார்.

நிறைய பாடல்கள் எழுதி வைப்பது அவரது பொழுது போக்கு. அப்படி எழுதியவற்றை படித்த பிறகுதான் செல்வராகவன் அவரை, பாடல் எழுத வைக்கவும், பாடகராகவும், அனுமதித்தார்.

கார்களின் காதலன். அவரேதான் பெரும்பாலும் டிரைவ் செய்வார். எந்தக் கார் இறக்குமதி ஆனாலும் அதைப்ப� ��்றி தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவார்.





Thursday, July 26, 2012

பக்கத்து வீட்டுக்காரர்கள் இம்சை-சொந்த வீட்டிலிருந்து வாடகை வீட்டுக்குப் போகும் ரஞ்சிதா!







சென்னை: நடிகை ரஞ்சிதாவுக்கு நடிகர் சங்கம் எதிரில் சொந்தமாக வீடு உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது இந்த வீடு.
நித்யானந்தான் - ரஞ்சிதா செக்ஸ் வீடியோக்கள் வெளியானதும் இந்த குடியிருப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பத்திரிகைய ாளர்கள், போலீசார் போன்றோர் அந்த வீட்டுக்கு சென்று வந்த வண்ணம் இருந்தார்கள்.

இதையடுத்து ரஞ்சிதா சில மாதங்களாக அந்த வீட்டுக்கு வராமல் இருந்தார். அமெரிக்கா சென்று விட்டதாக கூறப்பட்டது. தற்போது நித்யானந்தாவுடன்தான் இருப்பதாக வெளியான படம் போலியானது என்று அறிவித்து மீண்டும் வெளி உலகுக்கு தலைகாட்டி வருகிறார்.
நித்யானந்தாவுடன் இணைந்து ஆன்மீக நிகழ்ச்சிக ளில் மீண்டும் பங்கேற்று வருகிறார். ரஞ்சிதா வசித்த வீட்டை ரோட்டில் வருவோர் போவோர் வேடிக்கை பார்த்தபடி செல்வதால் சக குடியிருப்புவாசிகள் தேவையின்றி சண்டைக்கு நிற்கிறார்களாம்.
ரஞ்சிதா குடும்பத்தினருடன் அடிக்கடி சிலர் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டை காலி செய்துவிட ரஞ்சிதா முடிவுவெடுத்துள்ளாராம். சாலிகிராமத்தில் வாடகைக்கு வீடு பார்த்து வ ருகிறாராம்.
வேடிக்கைப் பார்ப்பதை மட்டுமே தொழிலாகக் கொண்ட இந்த பக்கத்து வீட்டுக்காரர்களுக்காக, சொந்த வீட்டை விட்டு வாடகை வீட்டுக்குப் போகிறார் ரஞ்சிதா!





Wednesday, July 25, 2012

இணையத்தில் போட்டி..!தாண்டவம்' : ஆட விருப்பமா? .







விக்ரம் நடிப்பில் வெளிவர இருக்கும் 'தாண்டவம்' படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெற இருக்கிறது.

விக்ரம், அனுஷ்கா, ஏமி ஜாக்சன், சந்தானம், ஜகபதி பாபு மற்றும் பலர் நடித்துள்ள 'தாண்டவம்' படத்தினை விஜய் இயக்கி இருக்கிறார். ந� ��ரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார்.


'முகமூடி' படத்தினைப் போலவே 'தாண்டவம்' படத்தினையும் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறது யுடிவி நிறுவனம்.

'முகமூடி' இசை வெளியீட்டு விழாவை போலவே, இணையத்தில் போட்டிகளை வைத்து ரசிகர்களை யு.டிவி நிறுவனம், அழைக்க இருக்கிறது.

இசை வெளியீட்டு விழாவில் 'தாண்டவம்' படத்தின் பாடல்களுக்கு நடனமாட ர� �ிகர்களுக்கு ஒரு வாய்ப்பினை வழங்கி இருக்கிறது யு.டிவி நிறுவனம்.

டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனம் ஆடியவர்களாக இருந்தால், உடனே உங்களைப் பற்றிய விவரங்களை thaandavam2012@gmail.com என்ற இமெயிலுக்கு தங்களைப் பற்றிய தகவல்களை அனுப்பி வையுங்கள்.

அதில் இருந்து தேர்வாகும் 5 முதல் 6 நபர்களுக்கு 'தாண்டவம்' இசை வெளியீட்டு விழாவில் நடனமாட வாய்ப்பு அளிக்கப்படும்.

இதில ் தேர்வாகும் நபர்கள் ஒரு பிரபல நடன இயக்குனாரால் பயிற்றுவிக்கப்பட்டு, நிகழ்ச்சியில் பிரதானமாக மற்றவர்களுடன் இணைந்து நடனமாடலாம். விக்ரம் உள்ளிட்ட பிரபலங்கள் அந்த நடனத்தை பார்த்து ரசிக்க இருக்கிறார்கள்.





அதுல விஷால், இதுல ஜெயம் ரவி தொடரும் பாலா அமீர் போட்டி






பாலாவுக்கும் அமீருக்கும்தான் எல்லா நேரத்திலும் போட்டி. ஒரு ஆக்ஷன் மின்னலான விஷாலை, திருநங்கை போல அவன் இவன் படத்தில் ஆடவிட்டு அதிர வைத்தவர் பாலா என்றால், ஜெயம் ரவியையும் ஒரு திருநங்கையாக காண்பிக்கப் போகிறார் அமீர். இந்த கெட்டப் ஆதிபகவன் படத்து� �்காகவாம்.

தற்போது ராஜஸ்தானில் காட்டுத்தனமான பைட் ஒன்றை ஷுட் பண்ணிக் கொண்டிருக்கிறார் அமீர். ஒரு திருநங்கை ஆவேசப்பட்டால் எதிரிகளின் கதி என்னவாக இருக்கும் என்பதை அவ்வபோது தினத்தந்தி செய்தியாக படித்திருப்போம்.
இந்தப்படத்தை பொறுத்தவரை அதையெல்லாம் து£க்கி சாப்பிடுகிற மாதிரி ஒரு ஃபைட்டை அமைத்திருக்கிறாராம் ஸ்டன்ட் மாஸ்டர் ராஜசேகர். பருத்திவீரன், ரே� ��ிகுண்டா போன்ற ஃபைட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களுக்கும் இவர்தான் மாஸ்டர்.

ஜெயம் ரவியின் இந்த திருநங்கை கெட்டப் வழக்கமான ஒன்று அல்ல என்கிறார்கள். ஆண் திருநங்கையாக மாறுவதைதான் நமது முந்தைய படங்கள் சொல்லியிருக்கின்றன. பிறப்பில் பெண்ணாகவும் குணத்தால் ஆணாகவும் மாறினால் அவள் எப்படியிருப்பாள்? 99 சதவீதம் ஆண் தோற்றத்திலிருக்கும் திருநங்கை கேரக்டர்தான் ஆ திபகவனில் ஜெயம் ரவியின் கேரக்டராம்.

கேட்கும்போதே முதுகு தண்டு ஜில்லுங்குதே!
.






ஈ தந்த வாழ்வு சமுத்திரக்கனி அழைப்பு






நான் ஈ வந்தாலும் வந்தது. பலாப்பழத்தை மொய்த்துக் கொண்டிருக்கும் ஈக்களைகூட டவுட்டாகவே பார்க்க ஆரம்பித்துவிட்டான் தமிழன். ஒரு ஈ க்கே இத்தனை மவுசு என்றால் அப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிற நானிக்கு எவ்வளவு இருக்கும்?

இதற்கு முன்பே � ��ெப்பம் என்ற படத்தில் அறிமுகமாகி பெரும் சோதனைக்கு ஆளாகியிருந்த நானி, போதும்டா தமிழ். தெலுங்குல இருக்கிற மார்க்கெட்டை தக்க வச்சுகிட்டா போதும் என்ற முடிவுக்கு வந்திருந்தார்.
அதன்பின் தமிழிலிருந்து யாரும் அவரை அழைக்கவும் இல்லை. இப்போது நான் ஈ படத்தின் வெற்றி, மறுபடியும் அவர் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது நம்ம ஊர் டைரக்டர்களை.

'நிமிர்ந்து நில்' படத்தி ல் வலுவான இன்னொரு கேரக்டருக்கு நானியை புக் பண்ணியிருக்கிறார் சமுத்திரக்கனி. தமிழில் மட்டும் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்திருந்தவர்கள், இந்த முறை தெலுங்கிலும் நேரடியாக ரிலீஸ் செய்யப் போகிறார்களாம்.

எல்லாம் நானி தந்த தெம்பு.
.





Tuesday, July 24, 2012

இளைய தளபதி... இளைய தளபதி... -ஏலம் போட்ட மிஷ்கின்







எந்த சினிமா விழாவில் கலந்து கொள்ள வந்தாலும், வந்த இடத்தில் வாந்தியெடுத்துஅழைப்பவரையும் அவமானப்படுத்திவிட்டு போவது பிரபலங்கள் சிலரது வழக்கம். தங்கர்பச்சானை விழாக்களுக்கு அழைக்கும் போதே, 'சார்... சப்ஜெக்ட்டை விட்டுட்டு வேற விஷயத்தை � �ேசிடாதீங்க' என்றே அழைப்பார்கள். அப்படியும் வந்த வேலையை திறம்பட செய்யாமல் நகர்ந்தே இல்லை அவர்.

கடந்த வாரம் நடந்த 'முகமூடி' ஆடியோ வெளியீட்டு விழாவிலும் அப்படியொரு பிரச்சனை. ஆனால் அது பிரபலங்களால் ஏற்பட்டது அல்ல. ரசிகர்களால்! ஆடியோவை வெளியிட வந்திருந்தது இளைய தளபதி விஜய் ஆச்சே? கூடி கும்மாளமடித்துவிட்டார்கள் ரசிகர்கள். யார் பேச எழுந்தாலும் 'இளைய தளபதி... இள ைய தளபதி...' என்று அவர்கள் குரல் கொடுத்துக் கொண்டேயிருக்க, எல்லாருடைய பேச்சிலும் வேகத்தடங்கல்!

விஜய் பேசி முடித்துவிட்டு வெளியே கிளம்புகிற நேரத்தில் அவர் பின்னாலேயேஓடினார்கள் ரசிகர்கள். ஒரே தள்ளுமுள்ளு. விஜய்யை பார்க்கிற ஆர்வத்தில் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த படத்தின் ஹீரோ ஜீவாவையும் தள்ளிவிட்டு ஓடியதுதான் அன் சகிக்கபுள் சமாச்சாரம். கீழே விழுந்தாலும் � �ீசையில மண் ஒட்டலே என்று சமாளிக்க முடியாதே? கர்புர்ரென்று கத்தித் தீர்த்துவிட்டார்.


ஜீவாவின் கோபம் இது என்றால், விஜய்யின் கோபம் வேறு மாதிரி. கூட்டத்தில் மிஷ்கின் பேச வந்தபோதும் இதே போல ரசிகர்கள் குரல் கொடுக்க, 'யப்பா... உங்களுக்கு இளைய தளபதின்னு சொல்லலணும். அவ்வளவுதானே? இதோ கேட்டுக்கங்க. இளைய தளபதி... இளைய தளபதி... இளைய தளபதி... சொல்லிட்டேன். இனிமேலாவது பேச விடுங்கப ்பா' என்றார் கோபத்தோடு.

தன்னை மேடையில் உட்கார வைத்துக் கொண்டு இப்படியெல்லாம் லந்தடிக்கிறாரே என்று மிஷ்கின் மீது பிற்பாடு பொசபொசவானாராம் விஜய்.





அனுஷ்கா கால்ஷீட்டை வீணடிக்கவில்லை - செல்வராகவன்







சென்னை: இரண்டாம் உலகம் படத்துக்கு அனுஷ்கா கொடுத்த கால்ஷீட்டை வீணடித்துவிட்டதாக தன் மீது வந்துள்ள குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என்று இயக்குநர் செல்வராகவன் கூறியுள்ளார்.
செல்வராகவன் இயக்கும் 'இரண்டாம் உலகம்' படம் ஆர்யா, அனுஷ்காவா ல் தாமதம் ஆவதாக கிசுகிசுக்கள் பரவின.
இருவரும் 'இரண்டாம் உலகம்' படத்துக்கு இவர்கள் ஒதுக்கிய தேதிகளை செல்வராகவன் விரயம் செய்து விட்டதாகவும் தற்போது இருவரும் வேறு படங்களில் நடிப்பதால் தங்களது கால்ஷீட்டை மாற்றி விட்டதாகவும் திட்டமிட்டப்படி படப்பிடிப்பை நடத்த முடியாமல் செல்வராகவன் தவிப்பதாகவும் கூறப்பட்டது.
குறிப்பாக, இந்தக் குழப்பத்தால் கார்த்தி நட� ��க்கும் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் அனுஷ்காவால் நடிக்க முடியவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
'இரண்டாம் உலகம்' படக்குழுவினர் செல்வராகவனுடன் தற்போது ஜார்ஜியாவில் முகாமிட்டுள்ளனர். ஆர்யா, அனுஷ்கா வருகைக்காக அவர்கள் காத்திருப்பதாக செய்தி வெளியானது.
இதுகுறித்து செல்வராகவன் கூறுகையில், "ஆர்யா, அனுஷ்காவால் படப்பிடிப்பு தாமதமாகியுள்ளதாக வெளியான செய்திகள் அப த்தமானவை. ஆர்யாவும், அனுஷ்காவும் இப்படத்தில் நடிக்க நிறைய தேதிகளை ஒதுக்கி கொடுத்துள்ளனர். அவர்கள் ஒதுக்கிய கால்ஷீட்டை நாங்கள் விரயமாக்கவில்லை. திட்டமிட்டப்படி படப்பிடிப்பு நடக்கிறது. அவர்கள் எங்களுடன்தான் உள்ளனர்," என்று தெரிவித்துள்ளார்.





அமெரிக்காவில் அமலா பாலின் அமர்களம் ..!







நடிகை அமலா பால் தனது பெற்றோருடன் அமெரிக்கா சென்று 2 வாரம் ஓய்வெடுத்துள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள அமலாபால் ஒய்வுக்காக அமெரிக்கா சென்றார். 
அங்கு வட அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் நடத்� ��ிய நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அங்கேயே தங்கி இருந்து பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தார். பெற்றோரும் அவருடன் சென்று இருந்தனர். தற்போது அமெரிக்க ஓய்வை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ளார்.

அமெரிக்கா சென்று வந்தது குறித்து அமலாபால் அளித்துள்ள பேட்டியில், அமெரிக்கா சென்றதும், அங்குள்ள எனது உறவினர்களை சந்தித்ததும் இ� �ிய தருணங்களாக அமைந்தது. என் பெற்றோரை நிறைய இடங்களுக்கு அழைத்து சென்றேன். எனது தலை முடியையும் வித்தியாசமாக மாற்றியுள்ளேன், என்று கூறியுள்ளார்.





Monday, July 23, 2012

காம்பினேஷன் புட்டுக்கிச்சு... சூர்யா தந்த திடீர் ஷாக்







மாற்றானும் ஹிட்டாகிவிட்டால் சூர்யாவின் ஒவ்வொரு நரம்பும் எலும்பாகிவிடும்என்று கவலைப்பட ஆரம்பித்திருக்கிறார்கள் இதே கோடம்பாக்கத்தை சேர்ந்த முன்னணி இயக்குனர்கள் சிலர். தங்களுக்கு கால்ஷீட் தரவில்லையே என்ற ஆதங்கத்திலும் ஆத்திரத்த ிலும் அவர்கள் இப்படி பேசி வருவது இயற்கையே.

ஆனால் இப்படியெல்லாம் பேச வைக்கிற அளவுக்கு அந்த வயிற்றெரிச்சலில் மேலும் சில சுள்ளிகளை போட்டு அந்த தீயை வளர்த்துக் கொண்டிருக்கிறாராம் சூர்யா. அதற்கு உதாரணமாக சொல்லப்படும் ஒரு தகவல் இப்போது.

புகழ் பெற்ற கோவிலின் பெயரை தன் நிறுவனத்திற்கு வைத்திருக்கும் அந்த இயக்குனர் சமீபத்தில் சொந்தப்படங்களை எடுத்து வெற� �றியும் பெற்றுவருகிறார். திடீரென்று இவர் இயக்கத்தில் நடிக்க சம்மதித்தாராம் சூர்யா. இதை தொடர்ந்து சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தார் டைரக்டர். எல்லாம் சில வாரங்கள்தான்.

சட்டென்று அவரை அழைத்த சூர்யா, நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் கொடுக்க முடியும்ங்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. ஸாரி... என்று கூறிவிட்டாராம்.

திருப்பதி ஏழுமலையானே, சிலருக்கு நிலையான யோசனையை க� ��டு என்று வேண்டிக் கொண்டிருக்கிறது மொத்த கம்பெனியும்.





குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய சூர்யா: ரசிகர்கள் ரத்ததானம்







நடிகர் சூர்யா இன்று தனது பிறந்த நாளை கெண்டாடினார். அவர் ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடிக்கும் 'மாற்றான்' பட வேலைகளில் கடந்த சில தினங்களாக தீவிரமாக ஈடுபட்டு இருந்தார். பிறந்தநாளையொட்டி அவற்றை தற்காலிகமாக நிறுத்தி விட்டு தியா கராயநகரில் உள்ள வீட்டில் மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.


நடிகர், நடிகைகள் பலர் அவருக்கு வாழ்த்து செய்திகள் அனுப்பி இருந்தனர். சூர்யா பிறந்த நாளையொட்டி ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர். தேனாம்பேட்டை எல்லையம்மன் கோவில் கல்யாண மண்டபத்தில் ரத்ததான முகாம் நடந்தது. திருவான்மியூர் எம்.எம்.ஆர். மதன் தலைமையில் 100 பேர் ரத� �ததானம் செய்தார்கள்.

சூர்யா பிறந்ததின 10-வது ரத்ததான முகாமாக இது நடத்தப்பட்டது. இதுவரை 1000 பேர் ரத்ததானம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ரத்ததான முகாமை திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் பவர் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

ரத்ததான முகாமில் சூர்யா ரசிகர் மன்றத்தை சேர்ந்த ஆர்.கே. சந்திரரேஷ், பி.விவேக், சங்கர், எஸ்.தாமு, வி.கிஷோர், சுனில், ரஞ்சித், உள்ளிட்ட பலர் பங்கேற்ற� �ர். ஏழைகளுக்கு அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது.

பிறந்த நாளையொட்டி சூர்யா அளித்த பேட்டியில் ஒரு வருடமாக 'மாற்றான்' பட வேலைகளில் தீவிரமாக இருந்ததால் குடும்பத்தினருடன் செலவிட முடியவில்லை. பிறந்த நாளையொட்டி இன்று முழுவதும் அவர்களுடன் இருப்பேன் என்றார்.





என் மகன் ஜீவாவின் தீவிர ரசிகன்: விஜய்







முகமூடி இசை வெளியீட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஜய் தனது மகன் சஞ்சய் ஜீவாவின் தீவிர ரசிகன் என்று தெரிவித்தார்.

ஜீவா, பூஜா ஹெக்டே, நாசர், செல்வா, கிரீஷ் கர்னாட் நடிக்க, மிஷ்கின் இயக்கியுள்ள படம் முகமூடி. அந்த படத்தின் இ� �ை வெளியீட்டு விழா கடந்த 20ம் தேதி சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் நடந்தது. விழாவில் விஜய் மற்றும் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இசை சிடியை விஜய் வெளியிட புனித் ராஜ்குமார் பெற்றுக் கொண்டார்.


இந்த விழா நடந்த அரங்கிற்குள் விஜய் நுழைந்தது முதல் மேடையில் அமரும் வரை அவரது ரசிகர்கள் விசில் அடித்தும், கை தட ்டியும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அது ஜீவா நடித்துள்ள படத்தின் இசை வெளியீடு என்பதை அனைவரும் மறந்துவிட்டனர். மேடையில் பேசியவர்கள் கூட ஜீவாவை மறந்துவிட்டு விஜய் பற்றியே பேசினர். உடனே சுதாரி்த்துக் கொண்ட விஜய் பேச வந்தார்.

அப்போது அவர் கூறுகையில், என் மகன் சஞ்சய் ஜீவாவின் தீவிர ரசிகன். எனக்கு ஜீவாவை ஒரு மனிதனாகவும், நடிகராகவும் மிகவும் பிடிக்கும். என் மகனைப் ப� ��ன்று நானும் முகமூடி படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்றார்.

விழாவில் கலந்து கொண்டவர்கள் விஜயைப் புகழ்ந்து பேசினாலும் விழா நாயகன் ஜீவா சிரித்த முகத்தோடு அமைதியாக உட்கார்ந்திருந்தார்.





திரிஷாவைப் பார்க்க 13 படி... ஒவ்வொரு படிக்கும் ரூ. 2 லட்சம்!







திரிஷா பிறந்தபோதே சில்வர் ஸ்பூனுடன் பிறந்தவர். பிறந்தபோதே வசதியாக இருந்த அவர் இப்போது திகட்டும் அளவுக்கு செல்வச் செழிப்புடன் சீமாட்டியாக வாழ்ந்து வருகிறார்.
இவர் தனது வீட்டில் தன் விருப்பத்திற்கேற்ப பல அலங்காரங்களை செய்திருக்க� ��றார்.
அதில் லேட்டஸ்டாக தனது வீட்டுக்குள்ளிருந்து தனது அறைக்குப் போக உள்ள 13 மாடிப்படிகளையும் பெரும் பொருட் செலவில் மார்பிள் கற்களால் தகதகக்க வைத்துள்ளாராம்.
திரிஷாவின் அறை உள்ள மாடிக்குப் போக கீழ் தளத்திலிருந்து 13 படிகளைக் கடக்க வேண்டுமாம். இந்தப் படிகளை விலை உயர்ந்த மார்பிளால் அலங்கரித்துள்ளாராம் திரிஷா. ஒவ்வொரு படிக்கும் ரூ. 2 லட்சம் மதிப்பிலான மார� �பிளைப் போட்டு ஜொலிக்க விட்டுள்ளாராம் திரிஷா.
இதுதவிர இவரது அறையையும் கூட மார்பிள் கற்கள் பளபளப்பாக மாற்றியுள்ளதாம். எல்லாமே திரிஷாவின் விருப்ப்படி ஸ்பெஷலாக வரவழைக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளதாம்.
அறைக்குள் யாருடைய போட்டோவை மாட்டி வைத்திருக்கிறீர்கள் திரிஷா...!!





Sunday, July 22, 2012

அம்பாசிடரில் ரோட்டோர இட்லி கடையில் சாப்பிடும் ரஜினிகாந்த்







போயஸ் கார்டனில் உள்ள ரோட்டோர இட்லி கடையில் அம்பாசிடர் கார் நின்றால் அதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கிறார் என்று அர்த்தம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீடு போயஸ் கார்டனில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த பகு� ��ியில் உள்ள ஒரு ரோட்டோர இட்லி கடையில் இட்லி வாங்கி சாப்பிடுவது ரஜினிகாந்துக்கு மிகவும் பிடிக்கும். அதனால் எப்பொழுதெல்லாம் இட்லி சாப்பிட ஆசை வருகிறதோ அப்போதெல்லாம் அம்பாசிடர் காரில் அந்த கடைக்கு சென்றுவிடுவார்.
சமீபத்தில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றதையடுத்து அந்த இட்லி கடைக்கு செல்வதை நிறுத்தி வைத்திருந்தார். ஆனால் அந்த கடை இட்லியின் ர� �சியை அவரால் மறக்க முடியவில்லை போன்று. அதனால் மீண்டும் அம்பாசிடரில் அந்த கடைக்கு சென்று சாப்பிட ஆரம்பித்துவிட்டார்.
நீங்கள் போயஸ் கார்டன் பக்கமாக போகும்போது ரோட்டோர இட்லி கடை அருகே அம்பாசிடர் கார் நின்றால் அதற்குள் கண்டிப்பாக ரஜினிகாந்த் இருப்பார்.