Friday, May 25, 2012

குமுறி குமுறி அழுத கதாநாயகன் யார்? ரகசியம் அம்பலம்

குமுறி குமுறி அழுத கதாநாயகன் யார்? ரகசியம் அம்பலம் அப்படிங்கிற. தலைப்பைப் படிச்சவுடனே வேகமாக வந்த உங்களுக்கு நன்றி....!

'கடல்' பட ஹீரோ கௌதம் குமுறி, குமுறி அழுது படக்குழுவையே கலங்கடித்துவிட்டாராம். இந்தப் படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? நம்ம மணிரத்னம் சார்தான்.

கௌதம்- சிறுவயது படம்
குறிப்பு: இப்போ இருக்கிற படத்தைப் போடவேண்டாம் என கேட்டுக்கொண்டதால் சிறுவயது படம் இடம்பெற்றிருக்கிறது.
யார் இந்த நாயகன்?
நவரச நாயகன் கார்த்திக் மகன் கௌதம் தான். மணிரத்னத்தின் கடல் படம் மூலம் ஹ� ��ரோவாகிறார் திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு என்ற கிராமத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

கௌதமின் கச்சிதமான நடிப்பு:
ஊர் மக்களின் உள்ளங்களில் வாழ்பவன். படத்தில் நாயகன் அனாதை நாயகனை எடுத்து வளர்த்த பொன்வண்ணன் ஒரு நாள் அவர் அனாதை என்ற உண்மையை உடைக்கிறார். இதைக் கேட்ட நாயகன் குமுறி, குமுறி அழ வேண்டும் என்பது போல காட்சி.

காட்சியை நாயகனிடம் � �ணிரத்னம் விவரிக்க, இயக்குனர் எதிர்பார்த்த மாதிரியே காரித்திக்கின் மகன் அழுது உருகிவிட்டாராம். இவரின் நடிப்பைப் பார்த்த படக்குழுவும் கண்ணீர் விட்டு அழுதுவிட்டதாம்.

அவர் நடிப்பை பார்த்து அசந்த படக்குழுவினர் புதுமுகமாக இருந்தாலும் நாயகனை மனதாரப் பாராட்டினார்களாம். நவரச நாயகனின் மகன் ஆயிற்றே..! இது கூட செய்யாமல் இருந்தால் எப்படி? அதுவும் மணிரத்னத்தின் இயக்க த்தில் என்றால் கௌதம் நடிப்பைப் பற்றி சொல்லவா வேண்டும்.
கடல் பட நடிகர்கள்:
தெலுங்கில் நம்பர் ஒன்னாக இருக்கும் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் அரவிந்த் சாமி திரையுலகில் மறுபிரவேசம் செய்கிறார். முக்கிய வேடத்தில் ஆக்ஷன்கிங் அர்ஜுன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குமுறி, குமுறி அழவேண்டிய அளவுக்கு இவருக்கு ஒன்னும் வசதி குறைச� �சல் இல்லீங்க. எல்லாம் நடிப்புக்காகத்தான். அப்படியே கீழே இருக்கிற செய்தியையும் படிச்சுட்டு முடிஞ்சா கமெண்ட் பண்ணுங்க.. எனக்கு வாயெல்லாம் 'நம நம'ன்னு இருக்கு. யாரும் என்கிட்ட வாய் கொடுக்கமாட்டேங்கிறாங்க.. நீங்களாவது கமெண்ட் பண்ணுங்க.. பதில் எல்லாமே அதிரடியாதான் இருக்கும்....இனி பதிவோட செய்தி...
http://cinema-news7.blogspot.com

வழக்கு எண் 18/9 சூப்பர் விமர்சனம்

வணக்கம் நண்பர்களே..! மீண்டும் உங்கள் குள்ளு கோகுல்..! நாம எதைச் சொன்னாலும் நாசூக்கா சொன்னா அது எல்லாரோட மனசுலயும் ஈஷியா பதிஞ்சுடும். அதே மெத்தேட்தான் இந்த படத்துக்கும். பாலாஜி சக்திவேலோட அருமையான படைப்புதான் வழக்கு எண் 18/9 .

படம் வெளியாகி 10 நாட்கள் ஆன பிறகு தான் எந்த படத்தையும் பார்ப்பேன் . நிறைய சினிமா வலைப்பதிவாளர்களை பார்த்து ஏன் இவ்வளவு சினிமா பைத்தியமா(Cinema mad) உள ்ளார்கள் என்று கூட நினைப்பதும் உண்டு.


நேற்று தான் வழக்கு எண் 18/9 படம் பார்த்தேன். நிறைய பேரால் ஏற்றுக் கொள்ளபட்டு பாராட்டும் படம் என பல விமர்சனங்களை கண்டு விட்டுதான் போனேன். இது படம் அல்ல.. யாதர்த்த சமூகத்திற்கான ஒரு அ� �ுமையான பாடம்.. என பிரமிக்க வைத்து விட்டது. இந்த படத்தை பற்றி நிச்சயம் ஏதாவது என் கருத்துகளை எழுத வேண்டும் இல்லை வலைப்பதிவு எழுதுவது வேஸ்ட் என்று தியேட்டரை விட்டு வெளியே வரும்போது
எண்ணிக்கொண்டு வந்தேன்.

படத்தில் நடிக்கும் கேரக்டர்களை தேர்வு செய்ததிலேயே டைரக்டர் பாலாஜி சக்திவேல் வெற்றி பெற்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

படத்தில் மொத்தமாக பார்த� �தால் 6 அல்லது 7 கேரக்டர்களை வைத்து அனைத்து ரசிகனையும் இரண்டரை மணிநேரம் எந்த முனகலும் இல்லாமல் படம் பார்க்க வைத்தது மிகப் பெரிய வெற்றி. கீழ்தட்டு மக்களின் உண்மையான வாழ்வை தன் கண் முன்னே நிறுத்துகிறது சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள மேல்தட்டு மக்களுக்கு கிராமத்தில் மண் அள்ளும் செங்கல் செய்யும் தொழிலாளர்கள் பலர் தங்கள் வாழ்வை கந்துவட்டிக்கு

தங்களது முழு வாழ� ��வையே அடகு வைக்கிறார்கள என்பது சினிமாவில் பார்த்தாவது தெரிந்து கொள்வார்கள். சமூகத்தின் பணம் உள்ளவர்களுக்கு உள்ள சட்டமும் இல்லாதவனுக்கு உள்ள சட்டமும் மாறுபட்டவை தான் என ஒட்டு மொத்த மக்களின் வேதனையையும் பிரதிபலிக்கிறது இந்த படம்.

கூத்து கலைஞனாக(Dance artist) வரும் அந்த சிறு பையனின் நடிப்பு பிரமிப்பாக உள்ளது. இந்த சிறு பையனுக்கு வாழ்வு அளித்த டைரக்டர் பாலாஜி சக்த� ��வேல் அவர்களுக்கு மிக்க நன்றி!

பணம் இல்லாதவன் இந்த சமூகத்தில் ஊமையாகி போகின்றான் என்ற யாதர்த்தை வேலைக்காரியாக வரும் பெண் கேரக்டர்(Heroine) உணர்த்துகிறது. வட நாட்டிற்கு சிறுவர்களை விற்கும் கும்பல் கொத்தடிமைகள் என தினசரி நாளிதழ்களில் நாம் படிக்கும் ஒருவரி செய்தியாக இருக்கும் ஒவ்வொருவரின் பின்னாலும் வேலுவைப் போல் பல துன்பங்களை கடந்து வருகிறார்கள் என்பது யாரும் � �ண்டுகொள்ளாத செய்திதான். மயங்கி கிடக்கும் பையனை வேடிக்கையாலும் விமர்சனங்களாலும் மட்டுமே நடுத்தர, மேல்தர மக்களால் பார்க்க முடியும். கீழ்தட்டு மக்கள்தான் இவர்களுக்கான ஆதரவு என்பதை படம் பிடித்து காட்டுவது யதார்த்தம்.


பிளாட்பார மக்களும் மனிதர்களே என அவர்களிம் ஒரு பரிதாபத்தையாவது கொண்டு வந்துள்ளது இந்த படம். வேலு கேரக்டர் உண்மையாக அவன் வாழ்வில் நடத்தற்போல் ஒரு நடிப்பு. பள்ளிகூடம் செல்லும் மாணவனுக்கு பணம், செல்போன் போன்றவைகள் எங்கே கொண்டு செல்லும் என்று கூறியிருப்பது சரியான சவுக்கடி. இதை எந்த மேல்தட்டு மக்களும் கவனிக்க போவதில்லை. இதுதான் நடப்பு யதார்த்தம்.

போலீஸ்கரரி ன் நடிப்பு அருமை விசாரிப்பதிலும், கண்டுபிடிப்பதிலும் தமிழ்நாட்டு போலீஸ்காரர்கள்(Tamilnadu Police) சரியாக தான் இருப்பார்கள் அதற்கு அப்புறம் தான் பேரம் நடைபெறுகிறது. என்று யாதர்த்தை தைரியமாக சொல்லி இருப்பது பாரட்டுக்குரியவை. கிளைமாக்ஸ் சினிமாத்தனம் தான்.

வேலுவை போல எத்தனையே குற்றம் செய்யாத அப்பாவிகள் பல வழக்குளில் மேல்தட்டு மக்களை காப்பாற்றுகிறார்கள் என்பது அனைவரு� �் அறிந்தது. இல்லாதவனை எவன் கேட்கப்போகிறான். படம் முடிந்து அனைவரும் எழுந்து மனதிற்குள் கைதட்டியதை உணர முடிந்தது. கடைசியாக அந்த முகத்தை காட்டும் கதாநாயகி சமூகத்தை குறிக்கிறது. ஒருமுகம் அழகாகவும் மற்றொரு முகம் கொடுமையாகவும் உள்ள சமூகம்
அனைவரும் பார்க்க வேண்டிய நம் சமூகத்தின் காவியம்
http://cin ema-news7.blogspot.com

தனுஷின் மரியான் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் ஆரம்பமாகியது

3 (மூனு) படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படம் குறித்து பல்வேறு செய்திகள் வந்தன. அவர் இந்திப் படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. வெற்றிமாறன் படம்தான் அடுத்து என செய்திகள் வந்தன.

இந்த நிலையில், சத்தமின்றி அவரது அடுத்த படம் தொடங்கிவிட்டது. இந்தப் படத்துக்கு மரியான் என்று தலைப்பிட்டுள்ளனர்.

பரத்பாலா இயக்கும் இந்தப் படத்துக்கு A.R. Rahman இசை யமைக்கிறார். தனுஷ் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை தருவது இது முதல்முறை. ஏற்கெனவே இரண்டு பாடல்களை முடித்துக் கொடுத்துவிட்டாராம் ரஹ்மான்.


தென் ஆப்ரிக்காவில் இதுவரை எந்த தமிழ்ப் படமும் படமாக்கப்படாத இடங்களில் மரியான் படத்தின் shooting நடந்து வருகிறது.

கோடை விடுமுறை என்பதால்படப்பிடிப்புக்கு தன்னுடன் மனைவி ஐஸ்வர்யா, மகன்கள் யாத்ரா, லிங்காவையும் அழைத்துச� �� சென்றுள்ளார் தனுஷ்.

இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்த பிறகு, இந்தியில் 3 படத்தை வெளியிடவிருக்கிறார் தனுஷ்!
http://cinema-news7.blogspot.com