Friday, June 29, 2012

மன்மதன் 2-ல் திரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்பட 6 நாயகிகள்!



சிம்பு நடிக்கும் மன்மதன் 2 படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்பட 6 பேர் நடிக்கின்றனர்.
சிம்பு, ஜோதிகா நடித்த மன்மதன் படம் 2004-ல் வெளியானது. ஏஜே முருகன் என்பவரை இயக்குநராக அறிவித்து,
ப ின்னர் அவரை டம்மியாக்கிவிட்டு சிம்புவின் பெயரை பிரதானப்படுத்தினார்கள். இப்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறாராம் சிம்பு.
தலைப்பு 'மன்மதன் 2'. சிம்பு இப்போது நடித்துக் கொண்டிருக்கும் வாலு, வேட்டை மன்னன், போடா போடி படங்கள் முடிந்ததும் 'மன்மதன்2' படப்பிடிப்பு துவங்குகிறது.
இப்படத்தில் சிம்பு ஜோடியாக 6 கதாநாயகிகள் நடிக்கின்றனர்.
திரிஷா, அனுஷ்கா, தமன� �னா, இலியானா உள்ளிட்டோர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களுடன் மன்மதனில் நடித்த சிந்து துலானி, மந்த்ரா பேடி ஆகியோரும் நடிக்கக் கூடும் என்கிறார்கள். மேலும் சில நடிகைகளுடன் பேசி வருகிறார்களாம்!

தங்கையை நினைத்து பயப்படுகிறேன்



மணிரத்னம் படம் மூலம் என் தங்கை நடிகையாக அறிமுகமாவதால் எனக்கு கொஞ்சம் நடுக்கமாகத்தான் இருக்கிறது என்றார் கார்த்திகா.
என் தங்கை துளசி 10ம் வகுப்பு படிக்கிறார். இப்போது மணிரத்னம் இயக்கத்தில் கடல் படத்தில் ஹீரோயினா� � அறிமுகமாகிறார்.
இப்படம் இந்த வருடத்துக்கான சிறந்த நடிகை பட்டத்தை அவருக்கு பெற்றுத்தரும் என
நினைக்கிறேன்.
இதேபோல் 10வகுப்பு தேர்விலும் அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன். மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகையின் கனவு.
அந்த வாய்ப்பு தேடி வரும்போது யார் தான் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்? அதுவும் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். தற்போது சென்� �ையில் இருக்கும் துளசி நடிப்பு பயிற்சி பெற்று வருகிறார்.
ஏற்கனவே நடனம், நாடகம், நடிப்பில் பயிற்சி பெற்றிருந்தாலும் வசன உச்சரிப்பில் பயிற்சி அவசியம் தேவைப்பட்டது. மணிரத்னம், சுஹாசினி இருவரும் தங்கள் மகள்போல் துளசியை கவனித்துக் கொள்கிறார்கள்.
எனவே படம் வெற்றி பெறுமா, இல்லையா? என்பது பற்றியும், துளசியைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. அதே நேரம், பெரிய படத்தில ் நடிப்பதால் அவள் எப்படி நடிப்பாளோ என எனக்கு நடுக்கமாக உள்ளது.
நான் நடிக்க வரும்போது எந்த பயிற்சியும் பெறவில்லை. எனது அம்மாவும் நடிப்பு பற்றி அப்போது சொல்லித்தரவில்லை. என்னுடைய இயற்கையான பாவனைகளுடன் இருக்க வேண்டும் என்றே அவர் விரும்பினார். அதில் வெற்றி பெற்றேன் அதேவெற்றி துளசிக்கும் அமைய வேண்டும்.

'பாப்பா தள்ளிப் போய் விளையாடு!' - சூர்யா ரசிகர்களை நக்கலடித்த முருகதாஸ்



ட்விட்டரில் இப்போது சூடு பறப்பது விஜய் - சூர்யா ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மோதல்தான்.
விஜய் நடிக்க முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி (பெயர் மாறலாம்!!)யும், சூர்யா நடிக்க கேவி ஆனந்த் இயக்கும் மாற்றானும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகின்றன.

ஒரு தீவிர சூர்யா ரசிகர் முருகதாஸுக்கும் கேவி ஆனந்துக்கும் இப்படி ட்வீட் செய்திருந்தார்:
"இந்த ஆண்டு மாற்றான் ஆண்டு. மற்றவர்கள் ஒதுங்கி நில்லுங்க. மாற்றான் = க்ளாஸ் + மாஸ்!"
இதைக் கண்டு கடுப்பாகிவிட்டார் ஏ ஆர் முருகதாஸ். இத்தனைக்கும் இவர் சூர்யாவின் ஆஸ்தான இயக்குநர் வேறு!
பதிலுக்கு அவர அனுப்பிய ட்வீட் இது:
"பாப்பா.. தள்ளிப் போய் விளையாடு!"
இந்த ட்விட்டர் போரை கவனித்து வந்த நடிகர் பிரேம்ஜி இடையில் புகுந்து 'சூப்பர் ரிப்ளை தலைவா' என முருகதாஸுக்கு ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார்.

'மெகா' துப்பாக்கியை நிறுத்திய கள்ளத் துப்பாக்கி!



விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல... விஜய்யே கூட இந்த அதிர்ச்சியை எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். ஒரு சின்ன படம், தடாலடியாக தனது பெரிய பட்ஜெட் படத்தைத் தடுத்துவிடும் என்பதை!
தலைப்பில் இருந்த ஒற்றுமை மட்டுமல்ல... அந்த தலைப்ப ின் டிசைன் கூட ஈயடிச்சான் காப்பி மாதிரி ஆகிவிட்டதுதான் இந்த தடைக்கு முக்கிய காரணம்.
கள்ளத்துப்பாக்கியின் கதை...

3 ஆண்டுகளுக்கு முன்பே கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பை பதிவு செய்து படப்பிடிப்பையும் தொடங்கியவர் சி ரவிதேவன் மற்றும் முருகேசன். இந்தப் படத்தை இயக்குபவர் லோகியாஸ்.
நடிகர் கமல் ஹாஸனிடம் உதவியாளராக இருந்தவர்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ரவிதேவன்.
படத்தையே, பத்மஸ்ரீ கமல்ஹாஸன் ஆசீர்வாதத்துடன்' என்றுதான் ஆரம்பித்தார். கமல் அட்வைஸ்படி ஒத்திகையெல்லாம் பார்த்துதான் படப்பிடிப்பைத் தொடங்கினாராம்.
படம் குறித்த விளம்பரங்கள், செய்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன கடந்த இரு ஆண்டுகளாக. இந்தத் தலைப்பை 2009-லேயே அவர்கள் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதனைப் புதுப்பித்து வந்த ுள்ளனர்.
இந்த நிலையில், நண்பன் படத்துக்குப் பிறகு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு துப்பாக்கி என்று தலைப்பிட்டனர். இந்தத் தலைப்பை இந்த ஆண்டுதான் விஜய் மற்றும் முருகதாஸ் முடிவு செய்து அறிவித்தனர்.
இந்த செய்தி வெளியானதுமே தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தனர் ரவிதேவனும் அவரது குழுவினரும். ஆனால் அப்போது சங்கத்தில் பொறுப்பில் இருந்த எஸ் ஏ சந்திரசேகரனும் துப்பாக்கி தயாரிப்பாளர் தாணுவும் இந்தப் புகாரை கண்டுகொள்ளவில்லையாம்.
அதன் பிறகு தங்களின் நலம் விரும்பிகளிடம் விஷயத்தைச் சொல்லி, அவர்கள் அறிவுரைப்படிதான் வழக்குப் போட்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து கள்ளத்துப்பாக்கி தயாரிப்பாளர் ரவிதேவன் நம்மிடம் கூறுகையில், "நாங்கள் ஆரம்பத்திலிருந்தே துப்பாக்கி படத் தலைப்புக்கு எதிர்ப்பு காட்டி வந்� �ோம். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. இவர்களால் என்ன செய்ய முடியும் என்ற அலட்சியம் அவர்களுக்கு.

நாங்க ஒட்டின போஸ்டர்கள் மீதே அவர்கள் துப்பாக்கி போஸ்டரையெல்லாம் ஒட்டி இம்சை குடுத்தாங்க. எங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தார்கள்.
அதன் பிறகுதான் சட்டத்தின் துணையை நாடினோம். இரண்டு தலைப்புகள், அதன் டிசைன்களைப் பார்த்த நீதிபதி எங்கள் பக்கம் நியாயமிரு� ��்ததை ஒப்புக் கொண்டு தடை விதித்துள்ளார். எங்கள் படம் காப்பாற்றப்பட்டுள்ளது," என்றார்.
அதுமட்டுமா... எவ்ளோ பெரிய பப்ளிசிட்டி.. படத்துல சரக்கு கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருந்தா நல்ல வியாபாரம்தான்!

மன்மதன் பார்ட்-2 ; சிம்பு ஜோடியாக அனுஷ்கா...?!



மன்மதன் வெற்றியை தொடர்ந்து சிம்பு இயக்க இருக்கும், மன்மதன் பார்ட்-2வில் கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவின் திரைக்கதையில், அவர் ஹீரோவாக நடித்த படம் மன்தமன். இப்படத்தில் சிம்பு ஜோட� ��யாக ஜோ‌திகா நடித்து இருந்தார். கடந்த 2004ம் ஆண்டு வெளிவந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது.
மன்மதன் படத்தின் இறுதிகாட்சியிலேயே, அதன் 2ம் பாகமாக தொடரும் என்பதை சிம்பாலிக்காக சொல்லியிருந்தார் சிம்பு. ஒருபக்கம் தன்னுடைய வேட்டை மன்னன், போடா போடி, வாலு படங்களில் பிஸியாக இருந்தாலும், மற்றொரு பக்கம் மன்மதன் 2-க்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் சிம்பு. இம்முறை பட த்தில் ஹீரோவாக நடிப்பதுடன் டைரக்ஷ்ன் ‌பொறுப்பையும் அவரே ஏற்றுள்ளார்.

மன்மதன்-2வில் ஜோதிகா ரோலில் யார் நடிப்பார் என்று கோலிவுட்டில் பரவலாக ‌கேள்வி எழுந்த நிலையில், இப்போது அந்தரோலில் அனுஷ்கா நடிப்பார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. ஏற்கனவே சிம்புவும்-அனுஷ்காவும் வானம் படத்தில் நடித்து இருந்தனர். அதன்பிறகு இப்போது மீண்டும் இப்படத்தில் இணையவுள்ளதாக கூறப்ப� �ுகிறது. மேலும் இப்படத்தில் சந்தானமும் நடிக்கவுள்ளார்.

மெலிந்து போன பூசணி ஹன்சி..!சிம்பு கிண்டல் ..!



மும்பை அழகியான ஹன்சிகா மோத்வானிக்கு தமிழ் தெரியாது. அவரை, `வாலு' படப்பிடிப்பு குழுவினர் செல்ல மாக, ``குண்டு பூசணிக்காய்'' என்று கிண்டல் செய்து வந்தார்கள். அதன் அர்த்தம் புரியாமல், மற்றவர்களுடன் சேர்ந்து ஹன்சிகாவும் சி ரித்து வந்தார்.


ஒரு கட்டத்தில், ``குண்டு பூசணிக்காய்'' என்பதன் அர்த்தம் புரிந்து கொண்டதும், ``நான் மெலிந்து காட்டு கிறேன், பாருங்கள்'' என்று படப்பிடிப்பு குழுவினர் மத்தியில் ஹன்சிகா சவால் விட்டார். அவர் சொன்னது போலவே ஒரே மாதத்தில், 6 கிலோ மெலிந்து விட்டார்!

``இப்ப சொல்லுங்க, நான் குண்டு பூசணிக்காயா?'' என்று ஹன்சிகா கேட்டதும், ``மெலிந்து போன பூசணிக்காய்'' என் று படத்தின் கதாநாயகன் சிலம்பரசன் சிரித்தபடி, கிண்டல் செய்தார்!