Saturday, June 30, 2012

பில்லா 2 - பிரமாண்ட விழாவில் புதிய ட்ரைலர் - வருவாரா அஜீத்?



அஜீத் நடிக்கும் பில்லா 2 படம் ஜூலை 13-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்துக்கு இரண்டாவது ட்ரைலர் வெளியிடுகிறார்கள்.
ஆடியோ வெளியீட்டைக் கூட சத்தமின்றி முடித்துவிட்ட பில்லா 2 தயாரிப்பாளர்கள், சென்சார் பிரச்சினை, பட வ� �ளியீட்டில் நேர்ந்த தாமதம் போன்றவற்றால் படத்தின் மீது விழுந்துள்ள
எதிர்மறை அபிப்பிராயத்தைக் கருத்தில் கொண்டு, இந்த ட்ரைலர் வெளியீட்டை பிரமாண்டமாக நடத்துகிறார்கள்.
வரும் ஜூலை 2-ம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலக அரங்கில் இந்த ட்ரைலர் வெளியீட்டு விழா நடக்கிறது.
இந்த விழாவிலாவது அஜீத் கலந்து கொள்வாரா என்ற கேள்விக்கு தயாரிப்பாளர்களால் கூட பதில� � சொல்ல முடியவில்லை. இந்த மாதிரி விழாக்களில் பங்கேற்பதை 'சார்' விரும்பமாட்டார்... பிரஸ்ஸை மீட் பண்ணுவதையும் இப்போதைக்கு தவிர்க்கவே முயற்சிப்பார், என அஜீத்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
விட்டா படப்பிடிப்புக்கு வரலாமா வேணாமான்னு யோசிப்பாரு போலிருக்கே...!

யார் படத்துக்கும் நெருக்கடி வேணாம்... கோச்சடையானை தள்ளி வச்சுக்கலாம்! - ரஜினி




போட்டி மிக்க இந்த சினிமா உலகில், யாருக்கும் தன் படத்தால் நெருக்கடி வேண்டாம் என்ற நினைக்கும் ஹீரோவைக் காட்ட முடியுமா...
ஏன் முடியாது... இதோ சூப்பர் ஸ்டார் ரஜினி!
தீபாவளிக்கு கோச்சடையானை வெளியிடவிருப்பதாக பல நாட்களுக்கு முன்பே தயாரிப்பாள ர்கள் அறிவித்துவிட்டது
நினைவிருக்கலாம். சூப்பர் ஸ்டாரும் இதை உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் இப்போது சில தினங்கள் தள்ளி படத்தை ரிலீஸ் செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.
காரணம்?
தீபாவளிக்கு ஷாரூக்கான் - கரீனா நடித்த 'யே கஹான் ஆ காயே ஹம்' படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். ஷாரூக்கான் பாலிவுட்டில் பெரிய நடிகராக இருந� ��தாலும், இப்போது ஒரே நேரத்தில் ரஜினி - ஷாரூக் படங்கள் வெளியானால் தியேட்டர் கிடைப்பது சிரமமாகிவிடும்.
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் ரஜினி படம் என்பதால், மும்பையில் மட்டும் 150க்கும் மேற்பட்ட அரங்குகள் - மால்களில் கோச்சடையானை வெளியிட திட்டமிட்டிருந்தனர்.
இதனால் ஷாரூக் படத்துக்கு தியேட்டர் கிடைப்பது சிரமம். மேலும் அதே தினத்தில் அஜய் தேவ்கன் நடித்த படமும் வெளியாகிறது. கோச்சடையானால் இந்தப் படங்களுக்கு மும்பையில் நெருக்கடி வேண்டாம் என்ற ரஜினி, 'படத்தை சில தினங்கள் தள்ளி வெளியிடலாம். யாருக்கும் பாதிப்பு வேண்டாம்' என்று கூறிவிட்டாராம்.

பேசிய சம்பளம் கொடுக்காததால் வெளிநாட்டில் ஆட மறுத்த அமலா பால்!



அமலா பால் எங்கு போனாலும் கூடவே ஏதாவது வில்லங்கத்தில் சிக்கிக் கொள்வதது சகஜமாகிவிட்டது.
இந்த முறை வெளிநாட்டில் வைத்து விவகாரம் கிளம்பியுள்ளது. சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியொன்றில் நடனமான அமலா பால� �க்கு பெரும் சம்பளம் பேசி அழைத்துச் சென்றார்களாம்.

பெரிய நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்ட அமலாவை, விழா துவங்கியதும் நடனமாட அழைத்தனர். ஆனால் வர மறுத்துவி்ட்டாராம். காரணம், கேட்டதற்கு, பேசின சம்பளத்தைக் கொடுக்காமல் எப்படி வர முடியும் என்று கேட்டுள்ளார்.
முழு தொகையும் செட்டில் பண்ணால்தான் நடனம் ஆடுவேன்.. இல்லாவிட்டால் மேடைக்கே வரமாட்டேன் என கறாராகச� � சொல்லிவிட்டாராம்.
விழா அமைப்பாளர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, அமலாபால் ரகளை செய்தது உண்மைதான். ஆனால் அது சம்பள பாக்கிக்காக அல்ல, விமான டிக்கெட் பிரச்சினைக்காக என்றனர்.
இந்த விஷயத்தில் அமலா பால் என்றல்ல... எந்த நடிகைகளையும் குறை சொல்ல முடியாது. சில ஏற்பாட்டாளர்கள், இப்படி வெளிநாட்டுக்கு கூட்டி வந்து, விழா முடிந்ததும் அம்போ என்று விட்டுவிட்டுப் பறந்துவிடுவார ்கள். எனவே இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைப்பவர்கள் முழுத் தொகையையும் முன்கூட்டியே கொடுத்தால்தான் நடிகைகள் வருவார்கள். இதுதான் கோடம்பாக்க வழக்கம். எனவே தவறு விழாக்குழுவினர் மீதுதான் என்றனர், இந்த விவகாரத்தின்போது உடனிருந்த சில கலைஞர்கள்.