Monday, July 2, 2012

ஐ... விக்ரம் ஜோடி எமி?

ஷங்கர் இயக்கும் ஐ படத்தில் விக்ரம் ஜோடியாக எமி ஜாக்ஸன் நடிக்கக் கூடும் என தெரிகிறது.இந்தப் படத்தின் நாயகியாக முதலில் ஒப்பந்தமானவர் சமந்தா. ஆனால் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி (தோல் அலர்ஜி) அவர் படத்திலிருந்து விலகிக் கொண்டதாகத் தெரிகிறது. இதற்கு முன் மணிரத்னத்தின் கடல் படத்திலிருந்தும் அவர் விலகிக் கொண்டார்.எனவே சருமப் பிரச்சினைதான் காரணமா அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா என்று கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளது கோடம்பாக்கம்.இந்த நிலையில், சமந்தாவுக்கு பதில் எமி ஜாக்ஸனை ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிகிறது.கதைப்படி இரண்டு ஹீரோயின்கள். இன்னொரு ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிக்கக் கூடும் என்கிறார்கள். ஸ்ருதி ஹாஸன் பெயரும் பரிசீலனையில் உள்ளதாம்.இப்போது ச� ��னாவில் லொகேஷன் பார்க்கப் போயிருக்கும் ஷங்கர், அடுத்த வாரம் திரும்புகிறாராம். ஜூலை 15-ம் தேதி ஷூட்டிங் ஆரம்பம்!

தமிழில் 'டர்ட்டிபிக்சர்': சில்க் ஸ்மிதா வேடத்தில் நமீதா?

பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. இவர் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு தற்கொலை செய்து இறந்தார். சில்க் ஸ்மிதா வாழ்க்கையை இந்தியில் டர்ட்டி பிக்சர் என்ற படமாக எடுத்து வெளியிட்டனர்.இப்படம் வெற்றிகரமாக ஓடி பல கோடிகள் வசூல் ஈட்டியது. இதில் சில்க்ஸ்மிதா வேடத்தில் நடித்த வித்யாபாலன் சிறந்த நடிக� �க்கான தேசிய விருதை பெற்றார். இதையடுத்து தமிழ், மலையாளம், கன்னட மொழிகளிலும் சில்க் ஸ்மிதா வாழ்க்கையை படமாக எடுக்கின்றனர்.மலையாளத்தில் சனாகான் நடிக்கிறார். தெலுங்கில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நமீதா நடிப்பார் என தெரிகிறது. ஏற்கனவே இந்த வேடத்துக்கு திரிஷா, அனுஷ்கா பரிசீலிக்கப்பட்டனர். அவர்களிடம் பேச்சு வார்த்தையும் நடந்தது. ஆனால் சில்க்ஸ்மிதா வேடத்தில் நடிக்க இரு� �ரும் மறுத்து விட்டனர்.இதையடுத்து நமீதாவிடம் பேசி வருகிறார்கள். அவர் இதில் நடிக்க சம்மதித்து உள்ளார். இதுகுறித்து நமீதா கூறும்போது, 'சில்க் ஸ்மிதா 1980 மற்றும் 90களில் திரையுலகில் கவர்ச்சி ராணியாக இருந்தார். இப்போது என்னை ரசிகர்கள் சில்க் என்றே அழைக்கின்றனர். நான் சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகை. அவர் வேடத்தில் நடிப்பதற்காக சம்பளத்தை குறைத்துக் கொள்ள தயார்' என்றார்.

நல்ல அப்பா ..!நயன் முறிவு ஏன்? பதில் அளித்த பிரபு தேவா..!

நயன்தாராவுடன் காதல் முறிவு ஏற்பட்டது ஏன் என்பதற்கு முதல்முறையாக பதில் அளித்தார் பிரபு தேவா. பிரபு தேவா, நயன் தாரா காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். இதனால் பிரபு தேவா, அவரது மனைவி ரமலத் வழக்கு தொடர்ந்து விவாகரத்து பெற்றனர். இதையடுத்து நயன்தாராவை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டார் பிரபுதேவா. இதற்� ��ாக படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட நயன்தாரா, கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினார். இருவரும் ஜோடியாக கோயில்களுக்கு சென்று வழிபட்டனர். இந்நிலையில் பிரபுதேவா போக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டது.மனைவியை பிரிந்த பின் தனது குழந்தைகளிடம் மேலும் அதிகம் பாசம் காட்டத் தொடங்கினார். அவர்களை அவ்வப்போது வெளிநாடுக்கு அழைத்துச் செல்வது, அவர்களுடன் பொழுதை கழ� �ப்பது என்று நல்ல அப்பாவாக இருந்தார். பிரபுதேவாவின் இந்த மாற்றம் நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் திருமண தேதியை விரைவில் முடிவு செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினாராம். நயன்தாராவின் வற்புறுத்தலுக்கு பதில் சொல்லாமல் பிரபுதேவா காலம் கடத்தினார். இதனால் மனஸ்தாபம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் காதலை முறித்துக்கொள்ள முடிவு செய்தனர். இதை உறுதி� �்படுத்தும் வகையில் நயன்தாரா மீண்டும் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார்.அதேநேரம் காதல் முறிவு பற்றி மவுனம் காத்து வந்தார் பிரபு தேவா. சமீபத்தில் ஐதராபாத்தில் ஒரு விழாவில் பங்கேற்க சென்ற அவரிடம் நிருபர்கள் சூழ்ந்துகொண்டு நயன்தாராவுடனான காதல் முறிவு பற்றி கேட்டனர். இதற்கு சில நொடிகள் அமைதியாக இருந¢துவிட்டு பதில் அளித்த பிரபுதேவா, எனக்கு என் குழந்தைகளின் எதிர்கா லம் முக்கியம். அவர்களுக்காக எதையும் இழப்பேன் என்றார். நயன்தாராவுடன் காதல் முறிவு பற்றி இதுவரை மவுனம் காத்து வந்த பிரபுதேவா முதன்முறையாக அதற்கு பதில் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

5 நிமிடத்துக்கு ரூ.25 லட்சம் பில் போட்ட அனுஷ்கா..!

கவுரவ வேடத்தில் நடிக்க ரூ.25 லட்சம் சம்பளம் பெற்றார் அனுஷ்கா. விக்ரம் நடிக்கும் 'தாண்டவம்' படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் அனுஷ்கா. இதற்கிடையில் 'சகுனி' படத்தில் கார்த்தியுடன் கவுரவ வேடத்தில் நடித்தார். படத்தில் 5 நிமிடமே வரும் இக்காட்சிக்காக அனுஷ்கா ரூ.25 லட்சம் சம்பளம் பெற்றதாக கூறப்� ��டுகிறது. நடிகர், நடிகைகள் கவுரவ வேடத்தில் நடிப்பது புதிதல்ல. ஆனால் ஒரு சிலர் சம்பளம் பெற்றுக்கொண்டுதான் நடிக்க வருகிறார்கள். இன்னும் சிலர் நட்புக்காக இலவசமாக நடிக்கின்றனர்.கவுதம் மேனனின் 'விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் 'நடுநிசி நாய்கள் படத்தில் சமந்தா கவுரவ வேடத்தில் நடித்தார். அதேபோல் ஒரு கல் ஒரு கண்ணாடி மற்றும் சகுனியில் ஆண்ட்ரியா கவுரவ தோற்றத்தில் நடித்த� �ர். '5 நிமிட காட்சிக்கு அனுஷ்கா ரூ.25 லட்சம் பெற்றாரா? என அவரது மேனேஜரிடம் கேட்டபோது அதுபற்றி கருத்து சொல்ல மறுத்துவிட்டார்.இதுபற்றி ஒரு இயக்குனர் கூறும்போது, 'தீபிகா படுகோன், கரீனா கபூர் போன்ற பிரபல நடிகைகள் கவுரவ வேடத்தில் நடிப்பது படத்துக்கு கூடுதல் பலத்தை தரும். அதுபோல் பிரபலங்களை நடிக்க கேட்கும்போது அவர்கள் அதிக சம்பளம் கேட்பது சகஜம். அவ்வளவு சம்பளம் கொடுத்து நடிப்பதும் வீண் இல்லை. சில சமயம் இத்தகைய கவுரவ தோற்றங்கள் படத்தின் வெற்றிக்கு உதவுவதுடன் அதில் நடிக்கும் நடிகர், நடிகைக்கும் மார்க்கெட் மதிப்பை கூட்டுகிறது என்றார்.

சிமா விழாவில் 'தெள்ளத்தெளிவாக' ஆட்டம் போட்ட அமலா பால்!

அமலா பாலின் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக என்று டைட்டில் கார்டு போடாத குறையாக, படு கவர்ச்சிகரமான ஆட்டத்தை முதல் முறையாக பப்ளிக்காக அரங்கேற்றி அசத்தியுள்ளார், சமீபத்தில் துபாயில் நடைபெற்ற சிமா 2012 திரைப்பட விருதுகள் விழாவின்போது.மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த இந்த மைனா நடிகை இதுவரை பெரிய அளவில் எங்குமே கவர்ச்சி காட்டியதில்லை. சினிமாவில் கூட 'பொத்துனாப்புல'தான் வந்து போயிருக்கிறார். திரைப்பட விழாக்களுக்குக் கூட பெரிய அளவில் கவர்ச்சிகரமாக அவர் வருவதில்லை. லேசுபாசான கவர்ச்சியைத்தான் கடைப்பிடித்து வருகிறார்.இந்த நிலையில் முதல் முறையாக பப்ளிக்காக ஒரு விழாவில் படு கவர்ச்சிகரமாக ஆட்டம் போட்டு அடடா, நம்ம அமலா பாலா இது என்று அனைவரையும் வாய் பிள� �்க வைத்துள்ளார் இந்த 'தெய்வத்திருமகள்'.துபாயில் நடந்த சிமா 2012 திரைப்பட விழாவில்தான் இப்படி ஒரு கெட்ட ஆட்டம் போட்டுள்ளார் அமலா பால். குத்துப் பாட்டுக்கு கோலாகலமாக ஆடிய அமலா பால், முன்னழகை முக்கால்வாசி காட்டும் விதத்திலான உடையுடன் ஆடியதைப் பார்த்து ஆடியன்ஸெல்லாம் உற்சாகத்தின் உச்சிக்கே போய் விட்டார்களாம்.அவர் மட்டுமா ஹன்சிகா மோத்வானியும் கூட பிரமிக்க வைக்கும் � �கையில் பிரமாதமான கவர்ச்சி ஆட்டம் போட்டார்.இவர்களின் ஆட்டத்திற்கு என்ன காரணமாக கூறப்படுகிறது என்றால், தெலுங்குத் திரையுலகில் வாய்ப்பைப் பிடிக்கும் நோக்கத்தில்தான் இப்படி கவர்ச்சிகரமாக ஆட்டம் போட்டு தெலுங்குத் திரையுலகினரை கவர்ந்துள்ளதாக கூறுகிறார்கள். தெலுங்கில் கவர்ச்சிக்கு தனி 'கட்டிங்' என்பதால் யாருடைய கவர்ச்சி அசரடிக்கிறதோ அவர்களுக்கே 'டப்பு' ஜாஸ்தி எ� �்பதாலும் போட்டி போட்டு பொளந்து கட்டியுள்ளனராம்.இவர்கள் போக பிரியா மணி, ஸ்ருதி ஹாசன், சார்மி, பார்வதி ஓமனக்குட்டன் என பலரும் கலக்கலாக ஆடினர்.ஆனால் அமலா பால் மற்றும் ஹன்சிகா மீதுதான் அத்தனை பேரின் கண்களும் இருந்ததாம்.உங்க கண் யார் மீதோ...?

பில்லா 2 ட்ரைலர் வெளியீட்டு விழா கேன்சல்!

அஜீத் ரசிகர்களால் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட பில்லா 2 ட்ரைலர் வெளியீட்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டது.கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலக அரங்கில் இன்று மாலை நடைபெறுவதாக அறிக்கப்பட்ட இந்த விழாவில் அஜீத் கலந்து கொள்வாரா மாட்டாரா என்ற சந்தேகம் கடைசி வரை இருந்தது. இ� �்னொரு பக்கம் ரஜினி, கமல் ஆகிய பெருந்தலைகளும் விழாவுக்கு வருவதாகக் கூறிவந்தனர்.இந்த நிகழ்ச்சிக்காக பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் விழா ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.ஆனால் இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரோ, விநியோகஸ்தரான ஆஸ்கர் ரவிச்சந்திரனோ எதுவும் தெரிவிக்கவில்லை.இந்த நிகழ்ச்சியின் டிவி ஒளிபரப்பு உரிமை விஷயத்தில் த� �ாரிப்பாளருக்கும் விநியோகஸ்தருக்கும் உடன்பாடு ஏற்படாததுதான் நிகழ்ச்சி ரத்தானதற்கு காரணம் என்கிறார்கள்.வரும் 13-ம் தேதி படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ள சூழலில், விளம்பரப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டிருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.சினிமாவில் இதெல்லாம் சகஜம்தானே...

ராஜஸ்தானில் சுட சுட படமாக உள்ள ஆதிபகவன் பைட்



அமீரின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ஆதிபகவன் திரைப்படத்தின் சண்டை காட்சிக்கள் ராஜஸ்தானில் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயம்ரவி, நீது சந்திரா நடிக்கும் திரைப்படம் ஆதி பகவன். படத்தில் படப்பி� ��ிப்புகள் இறுதிகட்டம் கோவாவில் நடைபெற்றன. தற்போது
சண்டைகாட்சிகள் ராஜஸ்தானில் சுடச்சுட படமாக்கப்பட உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி திரைப்படத்தின் இயக்குநர் அமீர் கூறியதாவது, கோவாவில் கடைசியாக நடந்த ஆதிபகவன் ஷூட்டிங்கே இறுதிகட்டமாக நடந்து முடிவதாக இருந்தது. ஆனால் படத்தில் சண்டை காட்சி ஒன்று இடம்பெறுவது கதைக்கு அவச ியம் என கருதினேன். இதற்கிடையே ஹீரோயின் நீது சந்திரா ஏற்கனவே கிரேக்க படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்ததால் அதில் நடிக்க சைப்ரஸ் சென்றுவிட்டார்.
மேலும் ஜெயம் ரவியும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படத்தின் ஷூட்டிங்கில் நடிக்க சென்றார். இதனால் இருவரது கால்ஷீட் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. வரும் ஜூலை மாதம் 6ம் தேதி ஜெய்சல்மர் மற்றும் ஜெய்ப்பூரில் ஒரு சில சண்டை காட்சிகள� �� படமாக்கப்பட உள்ளது. அத்துடன் ஷூட்டிங் முடிகிறது. ஏற்கனவே பட ரிலீஸுக்கான மற்ற பணிகள் நடந்து வருகிறது. விரைவில் படம் ரிலீஸ் ஆகும். இவ்வாறு அமீர் கூறினார்.

நீச்சல் உடைக்கு “நோ” சொன்ன ஹன்சிகா



தமிழ் படத்தில் நீச்சல் உடையில் நடிக்க மறுத்துள்ளார் ஹன்சிகா மோத்வானி.
இதுபற்றி அவர் கூறியதாவது, விஷால் நடிக்கும் படத்தில் நடிக்க அதிக சம்பளம் கேட்டதால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனதா? என்கிறார்கள். இது வதந் தி.
எனக்கு என்ன தகுதியோ அந்த சம்பளம் தான் பெறுகிறேன். திரைக்கதை தான் எனக்கு முக்கியம். அதன்பிறகுதான் சம்பளம் மற்ற விஷயங்கள்.

என்னிடம் கதை சொல்லும் போது அதை முழுமையாக கேட்கிறேன். பிடித்தால் நடிக்கிறேன். இல்லாவிட்டால் ஏற்பதில்லை.
நான் வெளிப்படையான குணம் கொண்டவள். எதையும் பெரிதாகத்தான் கற்பனை செய்வேன். சிறிதாக எதையும் நினைக்க மாட்டேன். கடைசியில் கடின � ��ழைப்புதான் எனது குறிக்கோளாக இருக்கும்.
சிம்புவின் வேட்டை மன்னன் படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நடிகைகள் நடிக்கிறார்களே அதில் நடிப்பது ஏன்? என்கிறார்கள். நான் எப்போதுமே பாதுகாப்பான இடத்தையே விரும்புகிறேன்.
இதில் நிறைய கதாநாயகிகள் நடித்தாலும் எனது வேடம் முக்கியமானதாக அமைந்துள்ளது. அதில் என்னை தக்க வைத்துக்கொள்ள முடியும். எனவேதான் நடிக்கிறேன்.
இந்தி டெல்லி ப ெல்லி ரீமேக்கான சேட்டை படத்தில் நீச்சல் உடையில் நடிக்கிறீர்களா? என்கிறார்கள். நீச்சல் உடையில் நடிக்கும்படி என்னிடம் இயக்குனர் கூறினார்.
அதற்கு நான் இன்னும் மனதளவில் தயாராகவில்லை. எனவே நடிக்க மறுத்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

ஓடும் ரயிலில் டூப் போடாமல் நடித்தார் அனுஷ்கா: கார்த்தி


அலெக்ஸ் பாண்டியன் படத்திற்காக நாயகி அனுஷ்கா, ஓடும் ரயிலில் டூப் போடாமல் சண்டை போட்டு நடித்துள்ளார் என்று நாயகன் கார்த்தி தெரிவித்தார். நடிகர் கார்த்தி நடித்த சகுனி திரைப்படம் மதுரை தங்கரீகல் தியேட்டரில் திரையிடப்ப ட்டுள்ளது. நேற்று மாலை நடிகர் கார்த்தி, இயக்குனர் ஷங்கர் தயாள் ஆகியோர்
வந்தனர். பின்னர் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு நாயகன் கார்த்தி பதிலளித்தார். கேள்வி: நடிகை அனுஷ்கா உங்கள் அண்ணன் சூர்யாவுடன் நடித்துள்ளார். நீங்கள் ஒரு படத்தில் அவருடன் நடித்து வருகிறீர்கள். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? பதில்: இதில் நினைக்க என்ன இருக்கிறது? அனுஷ்கா ஒரு சிறந்த நடிகை, கடின உழைப்பாளி, நாங்கள் நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் ஓடும் ரெயிலில் ஒரு சண்டைக்காட்சி உள்ளது. அதில் ரெயிலின் மேல் பகுதியில் நாங்கள் ஓட வேண்டும். மிகவும் கஷ்டமாக இருந்த அந்த காட்சிகளில் டூப் போட்டுக்கொள்ளமாட்டேன் என்று கூறி துணிச்சலாக நடித்தார். எந்த பாத்திரத்திலும் துணிச்சலாக நடிக்கக் கூடியவர். அவரது உழைப்புதான் அவரது வெற்றிக்கு காரணம் என்றார். கேள்வ� �: எந்த கதாநாயகியுடன் இணைந்து நடிக்க ஆசை? பதில்: எனக்கு அமலா, ஜெயப்பிரதா ஆகியோரை மிகவும் பிடிக்கும். எனவே அவர்களுடன் இணைந்து நடிக்க ஆசையாக உள்ளது. அது முடியுமா? கேள்வி: உங்களுடன் நடித்த நடிகைகளில் உங்களுக்கு பிடித்தவர் யார்? பதில்: எல்லோரையும் பிடிக்கும். பின்னர் நடிகர் கார்த்தி நிருபர்களிடம் கூறியதாவது: சகுனி படம் 1 1/2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. 3 நாட்களில் சிறுத்தை படத்தின் வசூலை தாண்டியுள்ளது. இந்த படத்தில் நகைச்சுவை சிறப்பாக அமைந்துள்ளது. அரசியல் பின்னணி இல்லாமல் ஒரு அரசியல் கதையை கொமெடியாக இயக்குனர் கூறியுள்ளார். யாரையும் வருத்தப்பட வைக்கும் நோக்கத்தில் எந்த காட்சியும் அமைக்கவில்லை. பருத்திவீரன் படத்தில் நடித்தபோதே எனக்கு மதுரை மிகவும் பழக்கமாகி விட்டது. அது எப்போதும் என் மனதில் நிற ்கும் படம். சந்தானம் சாதாரணமாக பேசுவதே கொமெடியாக இருக்கும். படத்தில் அது இன்னும் சிறப்பாக வந்துள்ளது. நடிகர் சியான் விக்ரம் எனது படங்களை பார்த்துவிட்டு உடனடியாக பாராட்டு தெரிவிப்பார். இந்த படத்தையும் பார்த்துவிட்டு அடுத்த தலைமுறை நடிகர்களில் முன்னணியில் இருப்பதாக கூறினார். குடும்பத்துடன் பார்க்கும் வகையில் ஒரு அரசியல் கதையை கொமெடியாக சொல்லி இருப்பதுதான் இந் த படத்தின் வெற்றிக்கு காரணம் என்றார்.