Tuesday, July 3, 2012

மச்சான்ஸ் நான் ஸ்லிம்மா மாறப் போறேன்! - நமீதா



சில்க் வேடத்துக்கு என்னைவிட்டா ஆள் கிடையாது. டர்ட்டி பிக்சருக்கு நான் ரெடி... இன்னும் ஸ்லிம்மா மாறப் போறேன்! - நமீதா

தி டர்ட்டி பிக்சர் தமிழ் ரீமேக்கில் நடிப்பீர்களா என்று பலரும் என்னைக்கேட்கிறார்கள்... இதோ என் பத� ��ல்.. நடிப்பேன் நடிப்பேன் நடிப்பேன். ஏன் தெரியுமா.. சில்க் ஸ்மிதாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். என்னை விட்டால் அவரைப் போல நடிக்க ஆளே இல்லை,
என்றார் தமிழகத்தில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரே நடிகை என்ற பெருமைக்குரிய நமீதா.

நிறைய நிகழ்ச்சிகள், விளம்பரப் படங்கள், தெலுங்கு, கன்னடப் படங்களில் படுபிஸியாக இருந்தாலும், தமிழில் ஒரு அசத்தலான கதை கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் நமீதாவுக்கு உள்ளது.

இந்த நேரத்தில்தான் எங்கே போனாலும், தி டர்ட்டி பிக்சர் தமிழ் ரீமேக்கில் நீங்கள் நடிக்கவில்லையா... நடிப்பீர்களா... உங்களை அணுகினார்களா? என்றெல்லாம் அவரை கேட்டுத் துளைக்கிறார்களாம்.

சரி.. அதற்கு நமீதா பதில் என்ன?

நடிப்பேன் நடிப்பேன் நடிப்பேன்.... என்னிடம் கேட்டால் கண்டிப்பாக அந்தப் படத்துக்கு கால்ஷீட் தருவேன். இந்தியில் அந்தப் ப� �த்தைப் பார்த்தேன். ஒரு விஷயம் சொல்லட்டுமா... சில்க் ஸ்மிதா வேடத்துக்கு என்னைவிட பொருத்தமான நடிகை இருக்க முடியுமா தெரியவில்லை. அந்த கேரக்டரை அந்த அளவு விரும்புகிறேன்.

இப்போது உடம்பை இன்னும் ஃபிட்டாக்கிக் கொள்ளும் முயற்சியில் தீவிரமாக உள்ளேன். சில நாட்கள் கழித்து என்னைப் பார்ப்பவர்கள் நிச்சயம் ஆச்சர்யப்படுவார்கள்," என்றார்.

தென்னிந்திய நடிகைகளில் உங்களு� ��்குத்தான் அதிக ரசிகர்களாமே... உண்மையா?

இருக்கலாம். ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. மச்சான்ஸ் எப்பவும் என்பக்கம்தான் இருப்பாங்க. தெலுங்கு, கன்னடம் என்று வேறு மொழிகளில் நடித்தாலும், தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு நான் எப்பவுமே ஸ்பெஷல். அவங்க எனக்கு கொடுத்துள்ள இடம் உயர்வானது.

ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற 'பில்லா 2' வசனம் ..!




அஜீத் நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா 2' படத்தின் FIRST LOOK வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்து. இதனால் அஜீத் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

13ம் தேதி படம் வெளியாகுமா என்ற சந்தேக செய்திகள் உலா வந்தன. படத்தின் தயாரிப்பாளர் சுனிர் கேட்ட ர்பால் "படத்தின் டிரெய்லர் இரவு 7 மணியளவில் YOUTUBE இணையத்தில் வெளியாகும்" என்று அறிவித்தார்.


மாலை 4 மணியளவில் "சென்னையில் இருந்து மும்பைக்கு விமானத்தில் செல்வதால் டிரெய்லர் கொஞ்சம் தாமதம் ஆகலாம்" என்று தெரிவித்தார்.

7 : 45 மணியளவில் 'பில்லா 2' டிரெய்லர் இணையத்தில் வெளியானது. இன்று காலை வரை சுமார் 1,50,000 அதிகமானோர் டிரெய்லரை பார்த்து ரசித்திருக்கிறார்கள்.

� ��டத்தின் புதிய டிரெய்லரின் வசனங்கள் அஜீத் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. "என்னோட நண்பனா இருக்கிறதுக்கு எந்த தகுதியும் வேண்டாம், ஆனா எதிரியா இருக்கிறதுக்கு தகுதி வேணும்" என்ற வசனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

சிம்பு LOVE ANTHEM...!போட்டியாக தனுஷ் ஆல்பம் ..!




'3' படம் வெளிவந்த பிறகு தனுஷை அவரது டிவிட்டர் இணையத்தில் கூட காண முடிவதில்லை.

வெற்றிமாறன் படத்தில் ஒப்பந்தமானவுடன் "க்ளவுட் நைன் மூவிஸ் தயாரிப்பில் வெற்றி படத்தில் நடிக்க இரு� �்கிறேன். எனது அடுத்த படங்கள் மரியான், ராஜன்ஹா அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் படம்" என்று ஏப்ரல் 18ம் தேதி அறிவித்தவர் இன்று வரை டிவிட்டர் இணையம் பக்கம் வருவதில்லை.


காரணம் என்னவாக இருக்கும் என்று தனுஷிற்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்ததில், தனுஷ் தனியாக ஆல்பம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறாராம்.

மும்பையில் இதற்கான பணியில் மும� �முரமாக இருக்கும் தனுஷ் ஆல்பத்தின் முழுபொறுப்பையும் ஏற்று இருக்கிறாராம். பாடல்கள், இசை அனைத்தும் இவரே.

வெற்றிமாறனையும் அடிக்கடி மும்பைக்கு வாங்களேன் என்று கூப்பிட்டு தனது ஆல்பம் பணிகளை போட்டுக்காட்டி, அவர் ஏதாவது திருத்தம் சொன்னால் உடனே மாற்றி அமைக்கிறாராம்.

இந்த ஆல்பம் கூடிய விரைவில் வெளிவர இருக்கிறதாம்.

சிம்பு கூட LOVE ANTHEM ஆல்பத்தின் இறுதிகட்ட பணிகள� �ல் ஈடுபட்டு கொண்டே இருக்கிறார். இருவரும் துபாயில் நீண்ட நேரம் SIIMA விருதுகள் வழங்கும் விழாவில் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

சிம்பு உருவாக்கிய நயன்தாராவின் காதல் கதை..!



சிம்புவின் மன்மதன் படம் ஹிட்டானது. அதன் இரண்டாம் பாகத்தை 'மன்மதன்-2' என்ற பெயரில் எடுக்கிறார். இதற்கான கதையை அவரே உருவாக்கி உள்ளார்.

இந்த படத்தில் திரிஷா, அனுஷ்கா, இலியானா, தமன்னா உள்பட 6 கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

இ ந்த படம் நயன்தாராவின் காதல் கதை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சிம்புவும் நயன்தாராவும் ஏற்கனவே காதலித்தனர். பிறகு அவர்கள் காதலில் முறிவு ஏற்பட்டது. இருவரும் பிரிந்து விட்டனர். அப்போது ஒருவரையொருவர் குற்றம் சாட்டி அறிக்கை விட்டனர்.

பின்னர் நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் காதல் மலர்ந்தது. திருமணத்துக்கும் தயாரானார்கள். தற்போது அவர்களுக்குள்ளும் தகராறு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இந்த கதையை மன்மதன்-2 படத்தில் சிம்பு வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

ஆறாவது விரலோடு அதிர்ஷ்டம் போச்சு? அலட்டிக்கொள்ளாத நயன்தாரா




பெண்களுக்கு இடது கையில் ஆறு விரல் இருந்தால் அவர்கள்தான் இந்த உலகத்தின்மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி என்கிறது ஜோதிடம். அப்படி கோடியில் ஒருவருக்குதான் அமையும் என்று மேலும் பீலா விடுகிறது அந்த ஆராய்ச்சி. அப்படி ஒரு அதிர்ஷ்டக்காரியாக பிறந்தவர் தான் நயன்தாராவும்.

நடிக்க வருவதற்கு முந்தைய வாரம் வரைக்கும் இந்த விரலை பொத்தி பொத்தி பொக்கிஷமாக கருதி வந்த நயன்தாரா,
தனது புகழ் வெளிச்சத்துக்கு முதல் நரபலி கொடுத்தது அந்த அழகான அதிர்ஷ்ட விரலைதான். ஒரு வேளை அது இன்னும் அவரது கையில் ஒட்டிக் கொண்டு இருந்திருந்தால் சிம்புவுடனும், பிரபுதேவாவுடனும் பழகுவதற்கு முன்பே அவர்களை நன்றாக பிராண்டி வைத்து இரண்ட� �� காதல் தோல்விகளிருந்து காப்பாற்றியிருக்குமோ என்னவோ?

அதுபோகட்டும்... இப்போது நயன்தாரா தனது பேச்சை அடக்கிக் கொண்டார். அல்லது சுருக்கிக் கொண்டார். ஆனால் பிரபுதேவா இப்போதுதான் மெல்ல பேச ஆரம்பித்திருக்கிறார். 'எனது பிள்ளைகளுக்கு முன் காதல் எம்மாத்திரம்? அதனால்தான் அந்த காதலை கைகழுவ துணிந்தேன்' என்று அவர் வெளிப்படையாக பேசியிருக்கிறார். பிரபுதேவாவின் இந்த பதில் க ுறித்து நயன்தாராவை தொடர்பு கொண்ட மூத்த நிருபர் ஒருவருக்கு செம ரெஸ்பான்ஸ் அங்கிருந்து.

'எதையாவது கேட்டு வாயப் புடுங்காதீங்க. நோ கருத்து' என்று கூறிவிட்டார் நயன்.

த்ரிஷா - லட்சுமி ராய்... ஓய்ந்தது சண்டை; துபாயில் ஜாலி பார்ட்டி!




மங்காத்தா படத்தில் ஆரம்பித்தது அந்த சண்டை. லட்சுமிராயும், த்ரிஷாவும் நடித்த அந்தப் படத்தில், த்ரிஷா ஒப்புக்குதான் ஹீரோயின். கலக்கியது லட்சுமி ராய்தான்.
இதில் த்ரிஷாவுக்கு ஏக மனவருத்தம். காரணம், இந்த இரு வேடங்களையும் முதலில் த்ரிஷாவிடம� � சொல்லி, விரும்பிய வேடத்தில் நடிக்குமாறு சாய்ஸ் கொடுத்திருந்தாராம் வெங்கட் பிரபு.
அதில் த்ரிஷா வேண்டாம் என்ற வேடத்தில் லட்சுமிராய் கலக்கிவிட்டார் என்று செய்திகள் வெளியானதன் விளைவு, லட்சுமி ராய் பற்றி த்ரிஷா வெளிப்படையாக கமெண்ட் அடித்தார்.
பதிலுக்கு லட்சுமி ராய் போட்டுத் தாக்க, கடந்த ஓராண்டு காலமாக நீடித்தது இருவருக்கும் பனிப்போர். இருவரும் விழாக்க� ��ில் சந்திப்பதைக் கூட தவிர்த்தனர்.
இப்போது இருவரும் சண்டைக்கு பை சொல்லி, நட்புக்கு ஹாய் சொல்லியுள்ளனர்.
சமீபத்தில் நடந்த துபாய் விருது வழங்கும் விழாவில் லட்சுமி ராயும் த்ரிஷாவும் அருகருகே அமரும் வாய்ப்பு. விழாவுக்குப் பின்னர், நட்சத்திர ஓட்டலில் விடிய விடிய நடந்த பார்ட்டியின்போது, இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொண்டார்களாம்.
தொடர்ந்து, இருவரும் கட்டிப் பி டித்துக் கொண்டு, நெருங்கிய தோழிகளாகிவிட்டார்களாம். விருந்து முடியும் வரை பிரியாமலிருந்தவர்கள், பிரியா விடைபெற்று வீடு திரும்பியதாக நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்!