Thursday, July 5, 2012

ஸ்ரீதேவியின் மும்பை வீட்டில் குடியேறும் பிரபுதேவா




பிரபுதேவா நடிகை ஸ்ரீதேவியின் மும்பையில் கிரீன் ஏக்கர்ஸ் வீட்டில் விரைவில் குடியேறவிருக்கிறார்.
பிரவுதேவா போக்கிரி படத்தை இந்தியில் சல்மான் கானை வைத்து வாண்டட் என்ற பெயரில் ரீமேக் செய்தார். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி சல்மானுக ்கு புத்துயிர் கொடுத்தது.
இதையடுத்து கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ரவுடி ரத்தோர் என்ற பெயரில் ரீமேக் செய்தார். அட அதுவும் கண்டமேனிக்கு ஓடி கோடிக் கணக்கில் வசூலை அள்ளி புதிய சாதனை படைத்தது.
இதனால் பிரபுதேவாவுக்கு பாலிவுட்டில் பயங்கர கிராக்கியாகிவிட்டது. பிரபுதேவா ரீமேக் செய்தால் அந்த படம் கண்டிப்பா ஹிட்டாகிவிடும் என� �று பாலிவுட்டில் உள்ளவர்கள் நம்பும் அளவுக்கு ஆகிவிட்டது. இதையடுத்து நமக்கு தான் இங்கு இவ்வளவு கிராக்கி உள்ளதே நாம் ஏன் மும்பையில் தங்கிவிடக் கூடாது என்று நினைத்து பிரபுதேவா மும்பையில் வீடு தேடி அலைந்தார்.
இந்த செய்தி காத்துவாக்கில ஸ்ரீதேவியின் காதில் விழுந்தது. உடனே அவரும், அவருடைய கணவர் போனி கபூரும் பிரபுதேவாவை தொடர்பு கொண்டு வீடு தேடுகிறீர்களாமே, வேண்டும் � �ன்றால் எங்க கிரீன் ஏக்கர்ஸ் வீட்டில் வந்து தங்கிக்கலாமே என்று தெரிவித்துள்ளனர். ரொம்ப நல்லதாப் போச்சுன்னு நினைத்த பிரபுதேவாவும் விரைவில் ஸ்ரீதேவியி்ன் வீட்டில் குடியேறுகிறார்.

பேஸ்புக், டுவிட்டரில் தனது பெயரில் மோசடி: தமன்னா அதிர்ச்சி!




சிறுவர்கள் முதல் பெரியர்கள் வரை ஆண், பெண் வித்தியாசம் இன்றி பேஸ்புக், டுவிட்டரை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் அதில் பல மோசடிகள் நடந்து வருவதாக தினமும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. குறிப்பாக நடிகைகளின் பெயரிலேயே அதிகளவு மோசடி� ��ள் நடக்கின்றன.

நடிகைகளின் படங்கள் மற்றும் செய்திகளை அவற்றில் போட்டு வைத்து ரசிகர்களுடன் தொடர்பு வைத்துள்ளனர்.
ஏற்கனவே நயன்தாரா, திரிஷா, ஸ்ரேயா போன்றோர் பெயர்களில் இதுபோல மோசடிகள் நடந்துள்ளதாக போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பவர் தமன்னா. இவரது பெயரிலும் பேஸ்புக், டுவிட்டரில் மோசடி நடக்கிறது.
அவ� ��் நடிக்கும் பட விவரங்கள், படப்பிடிப்பு நிகழ்ச்சி நிரல்கள், ஸ்டில்கள் போன்றவை அவற்றில் போடப்பட்டு உள்ளன. அது தமன்னாவின் பேஸ்புக் என ரசிகர்கள் ஏமாந்து தொடர்பு வைத்துள்ளனர்.
இது பற்றி அறிந்த தமன்னா அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், பேஸ்புக், டுவிட்டரில் நான் இல்லை. என் பெயரில் மோசடி நடக்கிறது. ரசிகர்கள் அதை நம்பி ; ஏமாற வேண்டாம் என்று தெரிவித� �துள்ளார்.

முகமூடி இசையை வெளியிடுகிறார் இளையதளபதி




மிஷ்கின் இயக்கும் முகமூடி திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா, வரும் 20 ம் திகதியன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ளது.
முகமூடியின் இசையை இளையதளபதி விஜய் கலந்து கொண்டு வெளியிடுகின்றார்.
அதுமட்டுமின்றி இசை வெளியீட்டு நிகழ்ச்சி� �ில் 500 பேரை அனுமதிக்க முடிவு செய்துள்ளனர்.
அவர்கள் போட்டி மூலம் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
இதற்கான போட்டியும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
யுடிவி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஜுவா முதன் முறையாக சூப்பர் ஹீரோ வேடம் ஏற்று நடித்துள்ளார். நரேன் வில்லனாகவும் பூஜா ஹெக்டே நாயகியாகவும் நடித்துள்ளனர்.
முகமூடி தன்னுடைய கனவுப்படமென்று இயக்குனர் மிஷ்கி� ��் இதற்குமுன்பு நடந்த பேட்டிகளில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தியை அடுத்து சூர்யாவுடன் டூயட் பாடும் பிரணீதா




சூர்யாவை வைத்து கௌதம் மேனன் எடுக்கும் துப்பறியும் ஆனந்தன் படத்தின் கதாநாயகி பிரணீதா என்று தெரிய வந்துள்ளது.
கௌதம் மேனன் சூர்யாவை வைத்து துப்புறியும் ஆனந்தன் என்ற ஆக்ஷன் படத்தை எடுக்கவிருக்கிறார். இதில் சூர்யா 40களில் உள்ள கெட்டப்பில் � �ொமான்ட்டிக் டிடெடக்டிவாக வருகிறார்.
அவருக்கு ஜோடியாக சகுனி படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த பிரணீதா தான் நடிக்கவிருக்கிறாராம்.
விஜயை வைத்து கௌதம் மேனன் எடுக்கும் யோஹான் முடிந்த பிறகு துப்பறியும் ஆனந்தன் படப்பிடிப்பு துவங்குகிறது. இந்த படம் வரும் 2013ம் ஆண்டு துவக்கத்தில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.
சகுனி படத்தை அடுத்து நடித்தால் பெரிய ஹீரோக்� �ளுடன் மட்டும் தான் நடிப்பேன் என்று பிரணீதா கன்டிஷன் போட்டதாக கோலிவுட்டில் பேச்சாகக் கிடந்தது. அவர் கன்டிஷன் போட்ட மாதிரி பெரிய ஹீரோவான சூர்யாவுடன் தான் ஜோடி சேர்ந்துள்ளார்.
பிரணீதாவுக்கு வாழ்வு தான்...