Friday, July 6, 2012

முகமூடிக்காக மிகவும் கஷ்டப்பட்டேன்: ஜீவா




முகமூடி ஒரு சூப்பர் ஹீரோ பார்முலா படம். இந்த படத்தில் நான் கஷ்டப்பட்டு நடித்தேன் என ஜீவா கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, நான் நடித்துக் கொண்டிருக்கும் முகமூடி ஒரு சூப்பர் ஹீரோ பார்மூலா படம். தமிழில் முதல் தடவையாக இது மாதிரியான படம் வருகி� �து.
இதில் நான் அணியும் காஸ்ட்யூம் சிலிக்கான் கலந்து செய்யப்பட்டது.
ஹாங்காங்கில் உள்ள பெரிய சர்க்கஸ் கம்பெனியொன்று இதனை வடிவமைத்து கொடுத்தது.
இந்த உடையின் 11 கிலோ. தினமும் இதை போட்டுக் கொண்டு நடிக்கவும், சண்டை போடவும் செய்தேன். பதினாறு நாட்கள் தொடர்ந்து இதனை அணிந்து கொண்டு நடித்ததால் காலிலும் கழுத்திலும் கட்டி ஏற்பட்டது. முகம் சிவப்பானது.
டைரக்டர் ம� �ஸ்கின் அரவணைப்பு இருந்ததால் சிரமத்தை பொறுத்துக் கொண்டேன். ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்கள் இதில் பணியாற்றியுள்ளனர், படம் சிறப்பாக வந்துள்ளது.
தொடர்ந்து நீதானே என் பொன் வசந்தம், என்றென்றும் புன்னகை, டேவிட் மற்றும் ரவி கே.சந்திரன் இயக்கும் படங்களில் நடிக்கிறேன்.
என்றென்றும் புன்னகையில் திரிஷா ஜோடியாக நடிக்கிறார். நீதானே என் பொன் வசந்தம் முடியும் தருவாயில் உள்ளது.
டேவிட் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடிக்கிறேன். எனது படங்களுக்கு ஆந்திராவில் வரவேற்பு இருப்பதால் தெலுங்கிலும் வெளியிடுகிறோம்.
குழந்தைகளுக்கான 3டி படமொன்றில் நடிக்க ஆர்வம் உள்ளது. கோ, முகமூடி, டேவிட் போன்றவை இரு கதாநாயகர்கள் கதை. இதுபோல் பிற கதாநாயகர்களுடன் தொடர்ந்து இணைந்து நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இளைய தளபதியின் கார் மோகம்




திரையுலக நடிகர்களுக்கு பொதுவாக சொகுசு கார்கள் மீது மோகம் இருக்கும். இதில் நடிகர் விஜய் சற்று வித்தியாசமானவராக திகழ்கின்றார்.
சொகுசு கார்கள், மற்றபடி புதிய கார்கள் என தன் கைக்கு எது கிடைத்தாலும் அதை ஒருமுறை ஓட்டி மகிழ்கிறார் இளைய தளபதி.< br />தனது நண்பர்கள் யாரேனும் புதிதாக கார்கள் வாங்கியிருப்பதாக விஜய்யிடம் சொன்னால், உடனே அவரை காருடன் வீட்டிற்கு வரச்சொல்லி விஜய் ஓட்டி மகிழ்கின்றார்.

அந்த வகையில் கொமெடி நடிகர் புரோட்டா சூரி, தான் புதிய கார் ஒன்றை வாங்கியிருக்கும் சந்தோஷத்தை விஜய்யிடம் பகிர்ந்தார்.
உடனே காரை வீட்டிற்கு கொண்டு வரச்சொல்லியிருக்கிறார் விஜய். சூரி வீட்டிற்கு வந்ததும் த� �் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறிது நேரம் காரை ஓட்டிப் பார்த்து மகிழ்ந்துள்ளார்.
பின்பு சூரிக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து கார் வாங்கியதற்காக வாழ்த்து சொல்லி வழியனுப்பி வைத்திருக்கிறார் இளைய தளபதி.

முடிவுக்கு வந்து ஹீரோயின் பஞ்சாயத்து... மதகஜராஜாவில் விஷால் ஜோடி அஞ்சலி- வரலட்சுமி!




ஹன்ஸிகா நடிக்கிறார்... கார்த்திகா நடிக்கிறார்... என்றெல்லாம் பேசப்பட்டு கடைசியில் யார் ஹீரோயின் என்றே தெரியாமலிருந்த விஷாலின் மதகஜராஜா படத்தில், இப்போது நாயகிகளாக நடிக்கின்றனர் அஞ்சலியும் வரலட்சுமியும்!
இதுகுறித்து இன்று அதிகாரப்பூர� �வமாக அறிவித்துள்ளனர் தயாரிப்பாளர்கள் தரப்பில்.
விஷால் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
அவருக்கு ஜோடிதான் அஞ்சலியும் வரலட்சுமியும்.
ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், சந்தானம், நிதின் சத்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
காமெடி, ஆக்ஷன் என சுந்தர் சியின் வழக்கமான முத்திரையுடன் வரும் அதிரடிப் படம் இது.
இந்தப் படத்துக்காக � ��ெரும் செலவில் செட் போடப்பட்டு பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.
இந்தப் பாடல் காட்சியில் விஷாலுடன் குத்தாட்டம் போட்டவர் சதா!