Monday, July 9, 2012

ஃபெட்னா 2012: எஸ்ரா, அமலா பால், சிவகார்த்திகேயனால் களைகட்டிய தமிழ் திருவிழா!



பால்டிமோர்: அமெரிக்கா கனடாவிலிருந்து இரண்டாயிரம் தமிழர்கள் ஒன்று கூடி வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் வெள்ளி விழாவை மு.வரதராசனார் நூற்றாண்டு விழாவாக சிறப்பாக கொண்டாடினர்.
பால்டிமோர் சிம்போனி அரங்கத்தில் மின ி தமிழகத்தையே பார்க்க முடிந்தது.

தமிழகத்திலிருந்து எஸ்.ராமகிருஷ்ணன், மறைமலை இலக்குவனார், தமிழச்சி தங்கபாண்டியன், திரை நட்சத்திரங்கள் பரத், அமலா பால், சிவ கார்த்திகேயன், பிண்ணனி பாடகி சித்ரா, சின்னத்திரை ப்ரியதர்ஷினி, மதுரை முத்து, இந்திய கம்யூனிஸ்ட் நல்லகண்ணு, சகாயம் ஐஏஎஸ் ஆகிய பிரபலங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் மூன்று தினங்களாக நடைபெற்றது.
சிறப்ப� �� விருந்தினராக மேரிலாண்ட் மாகாண அட்டார்னி ஜெனரல் டக் கான்ஸ்லர் கலந்து கொண்டார். இவர் மேரிலாண்டின் அடுத்த கவர்னர் (முதல்வர்) ஆகும் வாய்ப்புள்ளவர் என்பது குறிப்பிடத் தக்கது.
மேரிலாண்ட் மெஜாரிட்டி லீடர் குமார் பார்கவே, மாண்ட்கோமரி கவுண்டி தலைவர் இக் லெக்கெட், மலேசிய துணை முதல்வர் பினாங்கு ராமசாமி, இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
வெள்ளிவிழா ஒருங்கிணைப்பாளர் பாலகன் ஆறுமுகசாமி மற்றும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை தலைவர் டாக்டர் தண்டபாணி வரவேற்றுப் பேசினர்.
ராஜன் நடராஜன்
தமிழகத்திலிருந்து அமெரிக்கா சென்று உயர்ந்த அரசியல் பதவி பெற்ற முதல் தமிழரான, மேரிலாண்ட் மாகாண திட்ட மற்றும் வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் (அமைச்சர்) ராஜன் நடராஜன், கவர்னர் மார� ��டின் ஓ'மலே அவர்களின் மாநாட்டு பிரகடனத்தை அறிவித்தார்.
கவர்னர் குறிப்பிடுகையில் தமிழ்ச் சமுதாயத்தின் அறிவுத்திறனையும் கடின உழைப்பையும் பாராட்டியிருந்தார். தமிழர் உள்ளிட்ட பல்வேறு இன மக்களின் பங்களிப்பு அமெரிக்காவின் முக்கிய அங்கமாகிவிட்டது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மெஜாரிட்டி லீடர் குமார் பார்கவே, பேரவையின் வெள்ளி விழா மாநாட்டில் கலந்து கொள்வது தனக� ��கு கிடைத்த கௌரவம் என்று குறிப்பிட்டார். மேலும் மேரிலாண்டில் தமிழ்ச் சமுதாயத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றார்.
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் பேசுகையில், "இலங்கையில் தமிழர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளுக்காக, அடக்குமுறையை கண்டித்து உலக நாடுகள் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும்" என்றார்.
ருத்திரகுமாரன்
'லட்சக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை கொ� �்று குவித்ததன் மூலம், உலகெங்கும் உள்ள ஐம்பது மில்லியன் தமிழர்களையும் போராளிகளாக இலங்கை அரசு மாற்றிவிட்டது. உலகெங்கும் உள்ள தமிழர்களின் உரிமைக்காக 'நாடுகடந்த தமீழீழ அரசாங்கம்' போராடும் என அதன் பிரதமர் ருத்திரகுமாரன் தெரிவித்தார்.
இலக்கிய நேரம்
மு.வரதராசனார் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் தமிழறிஞர் மறைமலை இலக்குவனார் சிறப்புரை ஆற்றினார்.
'இதயங்கள் இ ணையட்டும்' என்ற தலைப்பில் அமெரிக்கத்தமிழர்கள் படைத்த கவிதைகளை, கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் திறனாய்வு செய்ய கவியரங்கம் நடைபெற்றது.
நடிகர் சிவகார்த்திகேயன் தலைமையேற்று, 'நேற்று இன்று நாளை' என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சியை நடத்தினார்.
டி.கே.எஸ். கலைவாணன் மற்றும் குழுவினரின் தமிழிசை அரங்கம் என்ற பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடந்தது.
நாற்பதுக்கும் மேற்பட்ட அமெ� �ிக்கத்தமிழர்கள் பங்கேற்ற இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு தமிழ் இலக்கிய கேள்விகளுக்கு எந்த தடுமாற்றமும் இல்லாமல் சரளமான பதில்களால், பார்வையாளார்களை அதிசயப்படுத்தினர்.
'Spelling Bee' என்ற ஆங்கில வார்த்தை விளையாட்டுக்கு நிகராக தமிழ்த்தேனீ என்ற சிறப்பு வினாடி வினாவும் நடைபெற்றது.
அமெரிக்காவில் உள்ள தமிழ்ப்பள்ளிகளை ஒருங்கிணைத்து ஒரே பாடத் திட்டத்� ��ின் கீழ் கொண்டு வரும் பணியை அமெரிக்க தமிழ்க் கல்வி கழகம் எவ்வாறு செய்து வருகிறது என்பதை செந்தில் சேரன், சிவானந்தன் ஆகியோர் எடுத்துரைத்தார்கள்.
வாசிங்டன் தமிழ்ச்சங்கம், பனைநில தமிழ்ச் சங்கம், சிலம்ப அரசி நகர தமிழ்ச்சங்கம், அட்லாண்டா பெரு நகர தமிழ்ச் சங்கம், நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம், பாஸ்டன் தமிழ்ச் சங்கம், நியூயார்க் தமிழ்ச் சங்கம், கரோலைனா தமிழ்ச் சங்கம� �, டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கம் மற்றும் கனேடிய தமிழர் பேரவை சார்பாக, இசை, நடனம், நாடகங்கள் இடம் பெற்றன.
எஸ் ராமகிருஷ்ணனின் கதை நேரம்
எழுத்தாளார் எஸ். ராமகிருஷ்ணன் பல்வேறு கதைகளைக்கூறி, நாம் சொல்லும் வார்த்தைகள் எவ்வளவு முக்கியம் வாய்ந்தவைகள் என்று விவரித்தார். யாரிடமாவது எதையாவது கேட்கும் போது 'ஒன்னும் இல்லை' என்ற பதில்கள் எரிச்சலை உண்டாக்கும். ஆனால், மருத்த� �� பரிசோதனைகள் முடிந்து டாக்டர் 'ஒன்னும் இல்லை' என்று சொல்லும் போது ரொம்பவும் மகிழ்ச்சியடைகிறோம். அன்றாட வாழ்வில் வார்த்தைகளை சரியாக கையாழும் போது, ஒருவருக்கு ஏற்றத்தை தரும் என்பதை ஒரு பிச்சைக்காரர் கதை மூலம் சொன்ன போது பார்வையாளர்கள் மெய்சிலிர்த்தனர்.
சாதாரண மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் எழுத்தாளார்களுக்கும் வார்த்தைகளை சரியாக கையாழ்வது மிகவும் முக்கியமான வ ிஷயம் என்று எஸ். ராமகிருஷ்ணன் விளக்கமாகக் கூறினார்.
வேலு நாச்சியார்
சென்னை ஸ்ரீராம் சர்மா குழுவினரின் வேலு நாச்சியார் நாட்டிய நாடகம் நடந்தது. மணிமேகலை சர்மா, ஓ.ஏ.கே.சுந்தர், சின்னத்திரை ப்ரியதர்ஷினி, ஜான் ஜாக்சன் ஆகியோருடன் பெருவாரியான அமெரிக்கத் தமிழர்களும் பங்கேற்றனர்.
மதுரை முத்துவும் மல்லிகையும்
ஒரு பக்கம் மதுரை முத்து அவ்வப்போது தோன்றி அரங்கத்தை சி� �ிப்பொலியால் ஆர்ப்பரிக்க செய்தார். இன்னொரு பக்கம் பாரம்பரிய உடையுடன் தமிழ்ப்பெண்கள் நிஜமான மதுரை மல்லிகைப்பூவை சரம் சரமாக தலையில் சூடிக்கொண்டு, அழகுக்கு அழகு சேர்த்து பால்டிமோர் நகரை மதுரையாக்கி விட்டார்கள்.
நடிகர்கள் பரத், அமலா பால், சிவகார்த்திகேயன் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நேர்முக நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. பரத் தாடியுடன் வித்த� �யாசமான தோற்றத்தில் வந்திருந்தார். துபாய் நிகழ்ச்சியை போலில்லாமல், நாகரீகமான உடையில் அமலா பால் இருந்தார்.
எளிமை, நேர்மைக்கு பாராட்டு
நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட எளிமையான அரசியல்வாதியான இந்திய கம்யூனிஸ்ட் முக்கிய தலைவர் நல்லகண்ணு மற்றும் நேர்மைக்கு பெயர் பெற்ற மாவட்ட கலெக்டர் சகாயம் ஐஏஎஸ் ஆகிய இருவரும் தான் விழாவின் நாயகர்கள் ஆக அலங்கரித்தார்கள். திரை நட்ச� �த்திரங்களை விட இவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள அதிகம் பேர் முண்டியடித்துக் கொண்டிருந்தனர் என்றால் அவர்களின் எளிமைக்கும் நேர்மைக்கும், பார்வையாளர்கள் கொடுத்த முக்கியத்துவம் புரிகிறதல்லவா?
மனுதாரர்கள், அரசு அதிகாரிகளிடம் வலியுத்தி அவர்களை எவ்வாறு தமிழில் கையெழுத்து போட வைக்கிறார் என்பதை பல சுவாராஸ்யமான தகவலகளுடன் பகிர்ந்து கொண்டார்.
சின்னக்குயில� � சித்ரா
விழாவின் முக்கிய பகுதியாக பிண்ணனி பாடகி சித்ரா பங்கேற்ற ஐங்கரன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. குழலூதும் கண்ணனுக்கு என்று ஆரம்பித்த் அவரது குயிலோசை நள்ளிரவு தாண்டினாலும் கட்டுக்கடங்காத கூட்டத்தினரின் கரவோசையுடன் தொடர்ந்தது.
மாநாட்டிற்காக உழைத்த வாசிங்டன் வட்டார தமிழ்சங்கத்தை சார்ந்த 120 குடும்ப உறுப்பினர்களையும் மேடைக்கு வரவழைத்து நன்றி � �ெலுத்தியது நெகிழ்ச்சியாக இருந்தது.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விஜய் பரிசு - விருந்து!




பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் பதக்கம் வழங்கி கவுரவித்தார்.
சென்னையில் உள்ள அவரது ஜேஎஸ் திருமண மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடந்த இந்த விழாவில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி, சால்வை அணிவித்தார். அதோபோல தமிழ்ப் பாடத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களையும் கவுரவித்தார்.
மாவட்ட அளவில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவ மாணவிகளுக்கு தனது இயக்கத்தின் நிர்வாகிகள் இதே போல பரிசுகள் வழங்கி உதவ� ��வார்கள் என்றும் அவர் அறிவித்தார்.
பின்னர், வந்திருந்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் விருந்தளித்த விஜய், அவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஆனந்த், செயலாளர் ரவிராஜா, மக்கள் தொடர்பாளர் பிடி செல்வகுமார் உள்பட பலரும் பங்கேற்றனர்.

திருப்பதியில் அஜீத் - பில்லா 2 வெற்றிக்காக வேண்டுதல்!




ரஜினியைப் பின்பற்றுவது என்று முடிவு செய்தாகிவிட்டது. படம் நடிப்பதில் ஆரம்பித்து, பேட்டி கொடுப்பது, விருது வாங்குவது என அனைத்திலுமே ரஜினி பாணிக்குத் திரும்பிவிட்டார் போலிருக்கிறது அஜீத்.
அடுத்து சாமி கும்பிடுவதிலும் அவர் பாதையிலேயே ந டக்க ஆரம்பித்துள்ளார்.

ரஜினி தன் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் அல்லது வெளியான பின்னரும் திருப்பதிக்குப் போய் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இப்போது அஜீத்தும் அந்த வழக்கத்தை பின்பற்ற ஆரம்பித்துள்ளார். சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார். பார்வதி ஓமனகுட்டன் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்� ��ை பெற்றது.
பில்லா-2 படம் வருகிற 13-ந்தேதி ரிலீசாகிறது. தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு நாளை துவங்குகிறது.
இந்த நிலையில் படம் வெற்றிபெற திருப்பதி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார் அஜீத். அவருடன் உறவினர்கள் சென்றிருந்தனர்.
அஜீத் வந்திருப்பது தெரிந்ததும் வழக்கம்போல, சாமியை விட்டுவிட்டு, அஜீத் பின்னால் பெரும் கூட்டம் ஒன்று சுற்ற ஆரம்பித்தது. பின்னர் தரிசனம் ம� ��டித்துவிட்டு கிளம்பினார் அஜீத்.

கட்டிப்பிடித்து கிஸ்ஸடித்து நட்பை விளம்பரப்படுத்திக் கொண்ட நயன் - திரிஷா!




அவர் வாய்ப்பை இவர் பறித்தார்... இவர் வாய்ப்பை அவர் தட்டிவிட்டார்... அவருடைய ஆளை இவர் கரெக்ட் பண்ணிட்டார்.... இவருடைய லவ்வரை அவர் லவட்டிக் கொண்டார்....
-நயன்தாரா மற்றும் த்ரிஷா பற்றி மீடியாவில் தொடர்ந்து வந்த செய்தி மற்றும் கிசுகிசுக்கள் இவை.
அதற்கேற்ற மாதிரிதான் இருவரும் நடந்து கொண்டனர். தத்தமக்கு வேண்டப்பட்ட நிருபர் & நிருபிகளை ரகசியமாக அழைத்து இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் போட்டுக் கொடுத்ததெல்லாம் நடந்தது!
அட ஏதாவது விழாக்களில் கூட இருவரும் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்ப்பதையே தவிர்த்தார்கள்.
ஆனால் நேற்று முன்தினம் நடந்த தனியார் அவார்ட் ஷோவில் இருவரும் அப்படி இழைந்தார்கள். திட� ��ரென்று இருவரும் 'நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க' என்ற ரேஞ்சுக்கு கட்டிப் பிடித்து கூடிக் குலாவினார்கள்.
விழா முடிந்ததும் வழக்கமாக நடக்கும் சரக்கு பார்ட்டியில் வழிந்த சரக்குகளை விட 'செம ஹாட் மச்சி' எனும் அளவுக்கு இவர்களின் ஷோ நடந்ததாம்.
இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டு, ஒருவருக்கொருவர் முத்தமழை பொழிய, 'த பார்றா கூத்தை' என்று வேடிக்கைப் பார்த்தார்களா� �் சக கலைஞர்கள்.
நயன்தாரா - த்ரிஷா சண்டை முட்டிக் கொண்டது விஜய் நடித்து சிறகொடிந்து போன குருவியிலிருந்துதான் என்பது கோலிவுட்டை அக்குவேறாகப் பிரித்து மேயும் வாசகர்களுக்கு தெரியும்தானே!

அடர்ந்த காடு... அதற்குள் அனுஷ்காவும் ஆர்யாவும்! .




'பத்து நாள் குளிக்காமல் இருந்தாலும் பரவால்லப்பா' என்கிற தைரியம் தேவைப்படுகிறவர்கள் பாலாவின் படத்தில் ஒரு துண்டு சீனிலாவது நடித்திருந்தால்போதும். 

அந்த தில் தானாக வந்து சே� ��்ந்துவிடும். அப்படி 'நான் கடவுள்' படத்தின் மூலம் காலத்தால் அழிக்க முடியாத, கடலாலும் செரிக்க முடியாத அனுபவத்தை சேகரித்து வைத்திருக்கும் ஆர்யா,
ஒரு படத்தில் பழங்குடிவாசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். (ச்சும்மா கொஞ்ச நேரத்துக்குதானாம்)

கருப்பு மையும் இடுப்பை சுற்றி இலை சமாச்சாரங்களும் இருந்தால் பழங்குடி பையன் ரெடி என்பதெல்லாம் அந்த காலம். இப்போது ச� ��ன்ன சின்ன வேடங்களுக்கு கூட நடிகர்களை கசக்கி பிழிய கற்றுக் கொண்டு விட்டார்கள் இயக்குனர்கள். அதிலும் செல்வராகவனிடம் பாட்சா பலிக்குமா?

தனது இரண்டாம் உலகம் யூனிட்டை அழைத்துக் கொண்டு ஜார்ஜியா காட்டுப்பகுதிக்கு போயிருக்கிறாராம். அங்குதான் ஆர்யாவுக்கு கருப்பு மையை பூசி, கண்ணோரம் டெரரை ஏற்றியிருக்கிறார். சிங்கம், புலி, சீறி வரும் பாம்புகள் திரியும் காட்டுக்குள் படப்பிடிப்பு நடக்கிறதாம்.

ஆர்யாவை விடுங்கள்... இந்த யூனிட்டோடு போய் காட்டுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார் அனுஷ்கா. அவருக்கும் கருப்பு மை, இடுப்பை சுற்றி இறகும் தழையும் என்று டெரர் கிளப்பி வருகிறாராம் செல்வா.
.

கமல் மன்மத லீலை..!ரஜினி தில்லு முல்லு ரீமேக் ஆகிறது. .




பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி, கமல் நடித்துள்ள 2 படங்கள் ரீமேக் ஆகிறது. ரஜினி நடித்த படம் 'தில்லு முல்லுÕ. கமல் நடித்த படம் 'மன்மத லீலை. இந்த இரண்டு படங்களையும் ரீமேக் செய்கிறார் தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி. இதுபற்றி அவர் கூறும்போது, � �கமல் நடித்த மன்மத லீலை, ரஜினி நடித்த தில்லு முல்லு இரண்டும் ஹிட் படங்கள். அந்த காலகட்டத்தில் இரண்டும் டிரெண்ட் செட் படங்களாக அமைந்தன. இப்படங்களை ரீமேக் செய்ய உள்ளேன்.

அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இரண்டு படங்களின் கதை கருவும் எந்த காலகட்டத்துக்கும் பொருந்தும். அதன் கருவை மட்டும் வைத்துக்கொண்டு புதிய காட்சிகளுடன் இப்படம் உருவாகும். இப்படத்தில் நடிக்கும் அத ிர்ஷ்டகார நடிகர்கள் யார் என்று இன்னும் முடிவு செய்யவில்லை. பிரபல இயக்குனர்களிடம் படத்தை இயக்குவதுபற்றி பேச்சு நடக்கிறது என்றார்.

 ஹீரோ கமல் அழகான பெண்களை பார்த்ததும் சபலம் அடையும் குணம் கொண்டவர். பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்ட நஷ்டங்களை கூறும் கதைதான் மன்மத லீலை. இந்தியில் வெளியான கோல் மால் படமே தில்லு முல்லு என்ற பெயரி ல் உருவானது. தொழில் அதிபர் ஒருவரின் அன்பை சம்பாதிக்கும் ஹீரோ ரஜினி ஒரு கட்டத்தில் அவரிடமே பொய¢ சொல்லி நடிக்கும் நிலை உருவாகிறது. இதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பது கதை.
.

நடிகை காம்னாவை 40 நிமிடம் காரில் துரத்திய வாலிபர்கள்..!



நடிகை காம்னாவை நள்ளிரவில் 40 நிமிட நேரம் காரில் துரத்திய வாலிபர்களை போலீசார் ஈவ்டீசிங் வழக்கில் கைது செய்தனர். தமிழில் 'இதயத் திருடன், மச்சக்காரன் உள்ளிட்ட ப� ��ங்களில் நடித்தவர் காம்னா. கடந்த வெள்ளிக்கிழமை மும்பையில் உள்ள ஒரு தியேட்டரில் நைட்ஷோ பார்த்துவிட்டு நள்ளிரவு 1.30 மணி அளவில் போரிவிலி பகுதியிலிருந்து அந்தேரியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் புறப்பட்டார். அவரை அடையாளம் கண்டுகொண்ட சில வாலிபர்கள், தங்களது காரில் பின்தொடர்ந்தனர். 
கார் ஜன்னல் வழியாக தலையை வெளியில் நீட்டி ஆபாசமாக பேசி அவரை கிண்டல் செய்தனர். அவரது காருக்கு முன்னும் பின்னுமாக தங்களது காரை ஓட்டி வழிமறிக்க பார்த்தனர். இதில் நடுங்கிப்போன காம்னா பலமுறை சாலையோரம் உள்ள நடைபாதை மேடையில் தனது காரை மோதினார். ஆனால் காரை நிறுத்தவில்லை.

ஒரு வழியாக அவர்களிடமிருந்து தப்பி வீடு வந்து சேர்ந்தார். இதுபற்றி காம்னா கூறும்போது, 'என் வாழ்வில் இப்படியொரு பயத்தை நான் அனுபவித்தது கிடையாது. ஆபாசமாக � �த்தியபடி என்னை அந்த வாலிபர்கள் துரத்தி ஈவ் டீசிங் செய்தனர்.

எனது காரை தடுத்து நிறுத்துவதிலேயே குறியாக இருந்தார்கள். எனது பயத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. காரில் இருந்தபடியே அவர்கள் ஓட்டி வந்த காரின் பதிவு எண்ணை கவனித்தேன். 40 நிமிட நேர துரத்தலுக்கு பிறகு அவர்களிடமிருந்து தப்பினேன். இந்த சம்பவம் பற்றி போலீஸில் புகார் செய்தேன். அவர்களை ஈவ்டீசிங் வழக்கில் ப� ��லீசார் கைது செய்தனர் என்றார்.
.

நடிகை காம்னாவை 40 நிமிடம் காரில் துரத்திய வாலிபர்கள்..!


நடிகை காம்னாவை நள்ளிரவில் 40 நிமிட நேரம் காரில் துரத்திய வாலிபர்களை போலீசார் ஈவ்டீசிங் வழக்கில் கைது செய்தனர். தமிழில் 'இதயத் திருடன், மச்சக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் காம்னா. கடந்த வ ெள்ளிக்கிழமை மும்பையில் உள்ள ஒரு தியேட்டரில் நைட்ஷோ பார்த்துவிட்டு நள்ளிரவு 1.30 மணி அளவில் போரிவிலி பகுதியிலிருந்து அந்தேரியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் புறப்பட்டார். அவரை அடையாளம் கண்டுகொண்ட சில வாலிபர்கள், தங்களது காரில் பின்தொடர்ந்தனர்.

கார் ஜன்னல் வழியாக தலையை வெளியில் நீட்டி ஆபாசமாக பேசி அவரை கிண்டல் செய்தனர். அவரது காருக்கு முன்னும் பின்னும� ��க தங்களது காரை ஓட்டி வழிமறிக்க பார்த்தனர். இதில் நடுங்கிப்போன காம்னா பலமுறை சாலையோரம் உள்ள நடைபாதை மேடையில் தனது காரை மோதினார். ஆனால் காரை நிறுத்தவில்லை.

ஒரு வழியாக அவர்களிடமிருந்து தப்பி வீடு வந்து சேர்ந்தார். இதுபற்றி காம்னா கூறும்போது, 'என் வாழ்வில் இப்படியொரு பயத்தை நான் அனுபவித்தது கிடையாது. ஆபாசமாக கத்தியபடி என்னை அந்த வாலிபர்கள் துரத்தி ஈவ் டீசிங் செ� ��்தனர்.

எனது காரை தடுத்து நிறுத்துவதிலேயே குறியாக இருந்தார்கள். எனது பயத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. காரில் இருந்தபடியே அவர்கள் ஓட்டி வந்த காரின் பதிவு எண்ணை கவனித்தேன். 40 நிமிட நேர துரத்தலுக்கு பிறகு அவர்களிடமிருந்து தப்பினேன். இந்த சம்பவம் பற்றி போலீஸில் புகார் செய்தேன். அவர்களை ஈவ்டீசிங் வழக்கில் போலீசார் கைது செய்தனர் என்றார்.