Tuesday, July 10, 2012

திரிஷாவிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்







தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் நடித்த படங்களில் சாமி, கில்லி குறிப்பிடத்தக்கவை. இவருக்கு வயது ஏறிக் கொண்டே போவதால் திருமணத்தை முடித்து விட பெற்றோர் துரிதப்படுகின்றனர்.

மாப்பிள்ளை தேடுதல் வேட்டை ரகசியமாக நடக்கி� ��தாம். என்ஜினீயர்கள், வெளிநாட்டில் வேலை பார்க்கும் டாக்டர்கள் என ஜாதகங்களை குவித்து போட்டு பொருத்தம் பார்க்கின்றனர்.
தெலுங்கு நடிகர் ஒருவரும் பரிசீலனை பட்டியலில் உள்ளார். அடுத்த வருடம் டும்… டும்… இருக்கும் என்கின்றனர்.
.





வசூலில் முந்திப் பறக்கிறது 'ஈ'. .







தற்போது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாராட்டும் படம் 'நான் ஈ'. நாடு முழுவதும் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

தெலுங்கில் 'ஈகா', தமிழில் 'நான் ஈ', மலையாளத்தில் 'ஈச்சா' என்ற பெயரில் வெளியாகி இருக்கி� �து இப்படம். தமிழ் மற்றும் தெலுங்கு பாக்ஸ் ஆபிஸில், அனைத்து படங்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு வசூலில் முந்திப் பறக்கிறது 'ஈ'.


வரும் வாரங்களில் இப்படத்தில் வசூல் கூடும் என்பதும் உறுதியாகி இருக்கிறது.

'நான் ஈ' படத்தின் இயக்குனர் ராஜமெளலி " பிரபாஸ், மகேஷ், ரவிதேஜா, வெங்கடேஷ், நாகார்ஜுனா, சித்தார்த், ராணா, விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ்,  இயக்குனர்கள் ர� ��ம் கோபால் வர்மா, விநாயக், பூரி ஜெகந்நாத், ஹரிஸ் சங்கர், க்ரிஷ், பிரகாஷ் ராஜ், நந்தினி, லிங்குசாமி, ஷங்கர் சார் என அனைவருமே நான் ஒரு LANDMARK படம் இயக்கி இருப்பதாக பாராட்டினார்கள். 'ஈகா' இன்னும் மேலே மேலே பறந்து கொண்டு இருக்கிறது.

எனது படக்குழுவிற்கு நன்றி. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் அனைவரும் பாராட்டும் போது எனது மனநிலையை யோசித்து பாருங்கள். " என்று தெரிவித்து இ� �ுக்கிறார்.

சுதீப்பை தமிழ்ப் படங்களில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்ய பேசி வருகிறார்களாம் கோலிவுட்டில்.
.





அஜீத் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் நியூஸ்..!







விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், நயன், ஆர்யா, டாப்ஸி நடிக்கும் படம் சத்தமில்லாமல் வளர்ந்து வருகிறது. அஜீத் ரசிகர்களுக்கு அப்படம் பற்றிய தகவல்கள் ஸ்பெஷல் நியூஸ். தமிழ்த் திரை ரசிகர்களுக்கு அப்படத்தின் உதவி இயக்குனர் யார் என்பதும் ஸ்ப� ��ஷல் நியூஸ்!

அவர் வேறு யாரு நம்ம நயன் தான். இப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.


அதுவும், நடிப்பதற்கு முக்கியத்துவம் என்பதை விட உதவி இயக்குனர் வேலைக்கே முக்கியத்துவம் அளிக்கிறாராம்.

இயக்குனர் விஷ்ணுவர்தன் வந்தால் எழுந்து நிற்பது, CLAP BOARD அடிப்பது, படப்பிடிப்பு தளத்திற்கு முதல் ஆளாக வருவது, கடைசி ஆளாக போவது என உதவி இயக்குனர் செய்யும் � �னைத்து பணிகளையுமே பார்க்கிறார் நயன்.

பெண் இயக்குனர்கள் பட்டியலில் தனது பெயரையும் முன்னிறுத்த தான் இந்த ஐடியாவாம்.

இப்படத்தில் உதவி இயக்குனர் பட்டியலில் நயன்தாரா பெயர் வரப்போகிறது. இயக்குனர் நயன்தாரா படம் வெளியாகப் போவது எப்போது?





வில்லன் நடிப்பில் என்னை மிஞ்சிட்டீங்க.. - ரஜினியிடம் பாராட்டு பெற்ற சுதீப்







நான் ஈ படத்தில் வில்லன் நடிப்பில் என்னையே மிஞ்சிவிட்டீர்கள் என நடிகர் சுதீப்பை பாராட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
தமிழ் தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி கண்டுள்ள நான் ஈ மற்றும் ஈகா படங்களில் நானி, சுதீப், சமந்தா நடித்த� �ள்ளனர். குறிப்பாக வில்லனாக கன்னட நடிகர் சுதீப்பின் நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது.

சமீபத்தில் நான் ஈ படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்காக போட்டுக் காட்டினார் இயக்குநர் ராஜமவுலி. படத்தின் பல காட்சிகளை கைத்தட்டி ரசித்த ரஜினி, படம் முடிந்ததும் ராஜமவுலிக்கும் குழுவினருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
படத்தில் வில்லனாக நடித்துள்ள சுதீப்ப ையும் பாராட்டினார். ரஜினியின் பாராட்டு குறித்து ட்விட்டரில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார் சுதீப்:
"படம் பார்த்த ரஜினி சார் தனக்கே உரிய வெடிச்சிரிப்புடன் 'நான்தான் பெஸ்ட் வில்லன்னு நெனச்சிக்கிட்டிருந்தேன். ஆனா என்னை மிஞ்சிட்டீங்க...' என்று வாழ்த்தினார்!"