Thursday, July 12, 2012

கண் கலங்குறாரு சிம்பு காரணம் இதுதான் நம்பு .







டி.ஆர்.பி ரேட்டுக்கு மட்டும் நான் வேணும். விருது கிருது கொடுத்தா நம்ம பேரையே அந்த லிஸ்ட்ல வைக்க மாட்டாங்க என்று ஆதங்கத்தை கொட்டி தீர்த்திருக்கிறார் சிம்பு. அந்த குறிப்பிட்ட சேனலுக்காக இவர் அழுது அழுது தமிழகத்தையே தேம்ப வைத்தாரே, ஞாப� �மிருக்கிறதா? அந்த சேனல் குறித்துதான் இத்தனை வேதனை.

கதவை சாத்திட்டு கண் கலங்கறதுக்குன்னே அமைக்கப்பட்டிருக்கிற ட்விட்டர்லதான் இந்த புலம்பல். நொடி முள்ளு இல்லையேன்னு மணிகூண்டு கலங்கவா போவுது? விட்டுத் தள்ளுங்க சிம்பு...

இதற்கிடையில் சிம்புவை பற்றி இன்னொரு அக்கப்போர். (அதானே, அக்கப்போர் இல்லாமல் ஒரு சிம்பு மேட்டரா?) மகத்-மனோஜ் சண்டையில் நடுவில் புகுந் து சமாதானம் செய்து கொண்டிருக்கிறாராம் சிம்பு. ஏனென்றால் இவரும் மனோஜும் திக்கோ திக்.
.





அய்யோ கொல்ல வராங்கோ... - அலறும் மகத் .







நடிகர் மஞ்சு மனோஜின் ஆட்கள் என்னை கொல்ல முயல்கிறார்கள் என்று புகார் கூறியுள்ளார் நடிகர் மகத்.

ஒரு மது விருந்தில் நடிகை டாப்ஸிக்காக நடந்த சண்டையில் தெலுங்கு நடிகர் மஞ்சு மனோஜும் மகத்தும் கடுமையாக அடித்துக் கொண்டனர்.
மனோஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் ஹைதராபாத்துக்கு தப்பிவிட்டார்.

நடிகை டாப்ஸியே இந்த தகராறுக்கு காரணம் என கூறப்பட்டது. மகத்தும் மனோஜும் டாப்ஸியை காதலித்தனர். முதலில் மகத்துடன் சுற்றிய டாப்ஸி, பிறகு மனோஜுடன் நெருக்கமானார். மனோஜும் டாப்ஸியும் தனி வீட்டில் குடித்தனம் நடத்துவதாக ஆந்திர பத்திரிகைகளில் சமீபத்தில் கிசுகிசுக்க ள் வந்தன.

டாப்ஸி பிரிந்ததால், அவர் மீது மகத் கோபமாக இருந்ததாகவும் அவரை அடிக்கடி தொடர்பு கொண்டு டார்ச்சர் செய்ததாகவும் அந்த ஆத்திரத்தில் தான் மகத்தை மனோஜ் அடித்து உதைத்தார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் இவர்கள் மோதலுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று டாப்ஸி அறிக்கை விட்டுள்ளார். மனோஜை தனது அண்ணன் என்று ஒரே போடாகப் போட்டவர், மகத்தை தெரிந்ததாகக் கூட காட்டிக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் மகத்தை தாக்கிய மனோஜ் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரமானார்கள். மனோஜுடம் விசாரணை நடத்தி கைது செய்ய ஆந்திராவுக்கு தனிப்படை போலீசை அனுப்பவும் ஏற்பாடு நடந்தது. ஆனால் மனோஜ் மலேசியாவுக்கு தப்பி சென்று விட்டாராம்.

வாபஸ் வாங்கு

இதற்கிடையில் முக்கிய பிரமுகர்கள் பலர் தலையிட்டு போலீஸ் விசாரணைக்கு இடையூறு செய்வதாக கூறப்படுகிற து. விசாரணை நடத்த வேண்டாம் என்று வழக்கை கைவிடுங்கள் என்று அவர்கள் நிர்ப்பந்தம் செய்கிறார்களாம்.

மகத்திடமும் புகாரை வாபஸ் பெரும்படி சிலர் மிரட்டுகிறார்களாம். மனோஜின் ஆட்கள் தன்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்கள் என மகத் புகார் கூறியுள்ளார்.

ஆனால் அவர் தற்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் செல்போனை சு� �ிட்ச் ஆஃப் செய்துள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மது விருந்தில் கலந்து கொண்ட நடிகர்-நடிகைகள் யார் என்ற விவரங்களை சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் தயாராகி வருகிறார்கள்.
.






குழந்தையைப் போன்றவர் ரஜினி - தீபிகா படுகோன்







ரஜினி சார் ஒரு குழந்தையைப் போன்ற உற்சாகம் மிகுந்தவர். இந்திய சினிமாவில் அமிதாப்பும் ரஜினியும்தான் நான் பார்த்த மிகச் சிறந்த கலைஞர்கள் என்கிறார் தீபிகா படுகோன்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "ரஜினி சாருடன் நடிக்கிறோமே என்ற � �யம் காரணமாக ஆரம்பத்தில் மன அழுத்தம் இருந்தது போல உணர்ந்தேன்.
ஆனால் செட்டுக்குள் போனதும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, என் பாத்திரத்தில் மட்டும் கவனம் செலுத்தினேன். ஓம் சாந்தி ஓம் படத்தின் போதும் இப்படித்தான் நடித்தேன்.

கோச்சடையானைப் பொறுத்தவரை என்னை வியக்கவைத்தது, சூப்பர் ஸ்டார் ரஜினியின் எளிமையும், மாறாத உற்சாகமும்தான்.

ஒரு குழந்தையைப் போல க� �்ளங்கபடமற்ற, துள்ளலை அவரிடம் பார்க்கலாம். திரையுலகில் இப்படி ஒரு உற்சாக மனிதரை நான் பார்த்ததில்லை.

எல்லா காட்சிகளும் மிக்ச சரியாக வரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் நடித்துத் தரத் தயாராக இருப்பார்.

ரஜினி, அமிதாப் ஆகிய இரு மேதைகளிடம்தான் இந்த அர்ப்பணிப்பை, தொழில் ஒழுங்கை நான் பார்த்திருக்கிறேன். அவர்களின் கண்கள� ��ப் பாருங்கள்.. இந்த சினிமாவை அவர்கள் எந்த அளவு நேசிக்கிறார்கள் என்பது தெரியும்...," என்றார்.