Friday, July 13, 2012

பில்லா 2 ரிலீஸ்... சென்னையில் மட்டும் 50 அரங்குகள்!







சென்னையில் மட்டும் இன்று 50 அரங்குகளில் வெளியாகி சாதனை படைத்துள்ளது பில்லா 2.
ரஜினியின் சிவாஜி- தி பாஸ்க்குப் பிறகு, படத்தை வெளியிடும் முறையே மாறிப் போய்விட்டது. தமிழ் சினிமா வியாபாரத்தில் பல வகையிலும் முன்னோடியாக பார்க்கப்படும் இந� �தப் படம்தான், அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிடும் போக்கையும் ஆரம்பித்து வைத்தது.

2007-ல் சிவாஜி - தி பாஸ் படத்தை 19 அரங்குகளில் வெளியிட்டனர் 2007-ல். படத்துக்குத் தரப்பட்ட பெரும் விலையை, நான்கைந்து வாரங்களிலேயே எடுத்ததோடு, நல்ல லாபத்தையும் சம்பாதித்தனர்.
அதற்குப் பிறகு பலரும் தங்கள் படங்களை அதிக அரங்குகளில் வெளியிட்டு, குறைந்த நாட்களில் போட்ட பணத்தை எடு� ��்பதை வழக்கமாக்கிக் கொண்டனர்.
அதன் பிறகு 2010-ல் வந்த சூப்பர் ஸ்டாரின் எந்திரன் 44 அரங்குகளில் வெளியாகி புதிய சரித்திரம் படைத்தது.
இப்போது, அஜீத் நடிப்பில் வெளியாகும் பில்லா 2 படத்தை 50 அரங்குகளில் வெளியிட்டுள்ளனர் சென்னை நகரில் மட்டும். சர்வதேச அளவில் 2500 அரங்குகளில் படம் வெளியாகியுள்ளது.
பல தியேட்டர்களில் ரஜினி - அஜீத் படங்கடன் பில்லா 2 பேனர்களை வைத்துள்ளனர் அஜீத் ரசிகர்கள்.





லிங்குசாமியின் அடுத்த நாயகி சமந்தாவா? பரினீதி சோப்ராவா?







மாற்றான், சிங்கம் 2 படத்திற்குப் பின்னர் சூர்யா நடிக்கும் படத்தின் நாயகி யார் என்பதில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. லிங்குசாமி இயக்கும் அந்த திரைப்படத்தில் சமந்தா அல்லது பரினீதி சோப்ரா நடிக்கலாம் என்றும் கோலிவுட் வட்டாரங்களில் த� ��வல்கள் வெளியாகியுள்ளன.
மணிரத்னம் இயக்கும் கடல், ஷங்கர் இயக்கும் ஐ திரைப்படங்களில் இருந்து திடீரென விலகினார் நடிகை சமந்தா. இதற்குக் காரணம் அவருக்கு ஏற்பட்ட தோல் அலர்ஜிதான் என்று கூறப்பட்டது. இந் நிலையில் லிங்குசாமி இயக்கும் புதிய திரைப்படம் ஒன்றுக்கு நாயகி செலெக்‌ஷன் லிஸ்டில் முதலாவதாக சமந்தா இருப்பதாக தகவல் வெளியாகியுல்ளது.
மாற்றான் படத்தை முடித்� �ுவிட்ட முடித்துவிட்ட சூர்யா அடுத்து சிங்கம் 2 படத்தில் பிஸியாகிவிட்டார். இந்த இரண்டு படத்திற்குப் பின்னர் இயக்குனர் லிங்குசாமி இயக்கப்போகும் திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான நாயகி தேர்வு நடைபெற்றுவருகிறது. இதில் சூர்யாவுடன் சமந்தாவை நடிக்க வைக்கவேண்டும் என்று ஆவலாக உள்ளார் லிங்குசாமி.
அவருக்கு சரும அலர்ஜி நீங்கவில்லை எனில் பிரிய� �்கா சோப்ராவின் உறவினரான பரினீதி சோப்ரா நடிக்கலாம் என்றும் கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகின்றன. வேட்டை படத்தின் தோல்விக்கு இந்த திரைப்படம் லிங்குசாமிக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.





காதலனுக்குப் (முன்னாள்?) போட்டியாக களமிறங்கும் நயன்தாரா!







நடிகை என்ற எல்லையைத் தாண்டி, அடுத்த கட்டத்துக்கும் பயணிக்க தயாராகிவிட்டார் போலிருக்கிறது நயன்தாரா.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அவர் நடித்துவரும் புதிய படத்தில், நடிகையாக மட்டுமல்ல... உதவி இயக்குநராகவும் பணியாற்� �ி வருகிறாராம்.

அதிலும் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட உதவி இயக்குனர் வேலைக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறாராம்.
படப்பிடிப்புகளில் கிளாப் போர்டு அடிப்பது, படப்பிடிப்பு தளத்திற்கு முதல் ஆளாக வருவது, படப்பிடிப்பு முடிந்தபின் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கடைசி ஆளாக போவது என உதவி இயக்குனருக்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறா� �ாம் நயன்தாரா.
இப்படத்தில் உதவி இயக்குனர் பட்டியலில் நயன்தாரா பெயரும் இடம்பெறப் போகிறதாம். விரைவில் புதுப்படமொன்றை இயக்கும் திட்டம் உள்ளதாகவும் நயன்தாரா தரப்பில் கூறப்படுகிறது.
நயன்தாராவுக்கு இயக்குநர் ஆகும் ஆசை வந்துவிட்டது போலிருக்கிறது. தாடிக்குப் போட்டியாக இருக்குமோ!





'செம படம்யா'.. அஜீத்தின் 2வது பில்லாவுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு!







அஜீத் நடிப்பில் வெளியாகியுள்ள பில்லா 2 படத்துக்கு ரசிகர்களிடையே அமோக ஆதரவு கிடைத்துள்ளது. படம் பிரமாதமாக இருப்பதாக படத்தை ஓபனிங் ஷோவிலேயே பார்த்து விட்ட ரசிகர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
திரையிட்ட இடமெல்லாம் ஹவுஸ் புல் க� ��ட்சிகளா இன்று பில்லா 2 படம் ரசிகர்கள் கண் முன் விரிந்தது. படம் தொடக்கம் முதல் முடிவு வரை கிளாஸாக இருப்பதாக ரசிகர்கள் ஏகோபித்த குரலில் தெரிவித்துள்ளனர்.
முதல் பில்லாவை விட இந்தப் படம் பிரமாதமாகவும், பிரமாண்டமாகவும் இருப்பதாக ரசிகர்கள் தீர்ப்பளித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே பில்லா 2வின் ரிலீஸுக்காக ரசிகர்கள் தயாராகி வந்தனர். இன்று உலகம் முழுவதும் கிட்டத்த� ��்ட 2500 தியேட்டர்களுக்கும் மேலாக திரையிடப்பட்டது பில்லா 2. தமிழகத்தில் மட்டும் 600 தியேட்டர்களுக்கும் மேல் இது திரையிடப்பட்டுள்ளது.
தெலுங்கிலும் இப்படம் டேவிட் பில்லா என்ற பெயரில் டப் ஆகியுள்ளது. படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலை 4 மணிக்கே சென்னையில் தொடங்கி விட்டது. அஜீத் ரசிகர்கள் முதல் நாள் ஷோவுக்கு ஏற்கனவே டிக்கெட் வாங்கி வைத்து விட்டு இன்று காலையிலேயே தங்க� ��து தலைவரின் படத்தை தரிக்க குவிந்து விட்டனர். திரையிட்ட இடமெல்லாம் அஜீத்தின் ரசிகர்கள் கூட்டம் திருவிழாக் கூட்டமாக இருந்தது.
படம் சூப்பர், மெகா ஹிட் என்பதே ரசிகர்களின் இறுதி தீர்ப்பு... இன்னும் சில நிமிடங்களில் விமர்சனம் வருகிறது. காத்திருங்கள்...





“மாற்றான்” படத்தில் அதிசயப்பிறவியாக நடித்த சூர்யா







"அயன்", "கோ" பட வெற்றியையடுத்து சூர்யாவின் வித்தியாசமான நடிப்பில் "மாற்றான்" படத்தை இயக்குகிறார் வெற்றி இயக்குனர் கே.வி ஆனந்த்.
சூர்யாவின் மாறுபட்ட நடிப்பில் உருவாகும் 'மாற்றான்' படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம், பிரம� ��ண்ட பொருட் செலவில் தயாரித்துள்ளது. இரட்டைப்பிறவி வேடத்தில் சூர்யா நடித்துள்ளார்.

நாயகியாக காஜல் அகர்வால், சச்சின் கேடேகர், தாரா, ரவி பிரகாஸ் மற்றும் இரினா மலிவா, ஜூலியா ப்லிஸ், ஜியோடினிஸ் ஆகிய ரஷ்ய கலைஞர்களும் நடித்துள்ளார்கள்.
எழுத்தாளர்கள் சுபா, இயக்குனர் கே.வி.ஆனந்த் இருவரும் 'மாற்றான்' படத்துக்கு திரைக்கதை அமைத்துள்ளார்கள். வசனத்தை சுபா சகோதரர் கள் எழுதியுள்ளார்கள்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பா.விஜய், நா.முத்துகுமார், விவேகா, தாமரை, கார்க்கி ஆகியோர் படத்துக்காக பாடல்களை எழுதியிருக்கிறார்கள். சென்னை பிரசாத் லேப்பில் 'மாற்றான்' படத்தின் "டீசர்" திரையிடப்பட்டது.
இதையடுத்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், 'மாற்றான்' உருவான விதம் குறித்து இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறுகையில், முற்றிலும் வித்தியாசமான இர� � சூர்யாக்களை 'மாற்றான்' படம், உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறது.
அகிலன், விமலன் என்ற இரு கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். உடல் மொழி, பார்வை என்று அனைத்திலும் வித்தியாசப்படுத்தி இப்படத்துக்காக சூர்யா கடுமையாக உழைத்துள்ளார்.
பிரெஞ்ச் சண்டைக் கலைஞர்களை வைத்து ஓக்ஸன் காட்சிகளை அமைத்துள்ளோம். உச்சப்பட்ச கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களை இப்படத்துக்காக பய� �்படுத்தியுள்ளோம். இன்னும் ஒரு பாடலை மட்டும் எடுக்க வேண்டும்.
இரட்டைப்பிறவி ரோலில் ப்ரியா மணி நடித்திருக்கும் 'சாருலதா' படத்துக்கும் 'மாற்றான்' படத்துக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றார்.
ஒட்டிப்பிறந்த இரட்டையர் (conjoined twins) வாழ்வில், அவர்களுக்கு நேரும் சுவாரஸ்யமான அனுபவங்கள், வித்தியாசமான உணர்வுகளையும் இவற்றின் பின்னணியில் இதுவரை கையாளப்படாத சமூகப் பிர� �்சினையை நேர்மையான கவனத்துடன் மாற்றான் படத்தில் அலசப்பட்டுள்ளது.
காதல், பாசம், வீர சாகசம், காமெடி என்று அனைத்திலும் சூர்யா அசத்தியிருக்கிறார். ஒட்டிப்பிறந்த இரட்டையரை அதிசயப்பிறவியாக இப்படத்தில் சித்தரித்துள்ளோம்.
இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் மற்றும் லாட்வியா, பால்கன் ஆகிய நாடுகளிலும் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம் எனவும் � �வர் தெரிவித்தார்.
இதுகுறித்து நாயகன் சூர்யா கூறுகையில், இரட்டைப் பிறவி வேடத்தில் நடிப்பது தனக்கு சவாலாக இருந்தது என்றும் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து செய்தேன் எனவும் அவர் தெரிவித்தார்.