Saturday, July 14, 2012

யார் இந்த அஜீத்? - அரபியர்கள் கேட்டாங்களாம்!








அஜீத் குமாரின் பில்லா 2 படத்துக்கு முதல் நாள் காட்சிக்கு கத்தாரில் கிடைத்த வரவேற்பைப் பார்த்து யார் இந்த அஜீ்த் குமார் என்று அரபிக்காரர்கள் கேட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
அஜீத் குமாரின் பில்லா 2 நேற்று தமிழகம் மட� ��டுமின்றி உலகின் சில பகுதிகளிலும் ரிலீஸ் ஆனது.
கத்தாரில் உள்ள தமிழர்களுக்கு அஜீத்தின் படத்தை கடந்த வியாழக்கிழமையே பார்க்கும் வாய்ப்பு கிடைத்து. படம் ரிலீஸான முதல் நாள், ஏகப்பட்ட கூட்டம் திரண்டுவிட்டதாம்.
கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறிவிட்டார்களாம். தியேட்டர் இருக்கும் பக்கமாகச் சென்ற அரபுக்காரர்கள் சிலர் 'யார் இந்த அஜீத் குமார்?' � �ன்று தங்களைக் கேட்டதாக, அஜீத்தின் ரசிகர்கள் சிலர் 'பெருமை'யுடன் கூறியுள்ளனர்.

நாம என்ன கத்தார்ல போயி பாத்தமா.. சொன்னா கேட்டு வைக்க வேண்டியதுதான்!







வெளியான 4 மணி நேரத்தில் பில்லா 2 திருட்டு டிவிடி அவுட்!







அஜீத் குமார் நடித்த பில்லா படத்தின் திருட்டு டிவிடி, அந்தப் படம் வெளியான நான்கு மணி நேரங்களில் மார்க்கெட்டுக்கு வந்துவிட்டது!
அஜீத்குமார், பார்வதி ஓமணக்குட்டன், புருனா நடித்துள்ள படம் பில்லா 2, இன்று உலகம் முழுவதும் அதிக திரையரங்கு களில் வெளியானது.

இந்தப் படம் இன்று காலை சென்னையில் வெளியானது. ஆனால் உலகின் மற்ற பகுதிகளில் நேற்று இரவே வெளியாகிவிட்டது.
இதனால், படத்தின் திருட்டு டிவிடி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார்போல, இந்தியாவில் படம் ரிலீசான நான்கு மணி நேரங்களுக்குள் சுடச் சுட பில்லா 2 படத்தின் டிவிடிக்கள் விற்பனைக்கு வந்துவிட்டன.
இணையதளங்கள் சிலவற்றிலும ் இந்தப் படம் வெளியாகியிருப்பதாகத் தெரிகிறது.
திருட்டு டிவிடி வெளியாகியிருப்பது பில்லா 2 படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு ஷாக் கொடுத்திருக்கிறது.
கதாநாயகன் அஜீத் வரமாட்டேன் என அடம்பிடித்த நிலையில், படத்தின் விளம்பரங்களுக்கு பெரிய அளவில் செலவழித்த தங்களுக்கு, திருட்டு டிவிடி விவகாரம் பெரும் சிக்கலைத் தந்திருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறிய� �ள்ளனர்.
நாளை அல்லது அதற்கடுத்த நாள் அநேகமாக போலீசாரை சந்திக்கவிருக்கிறார்கள், திருட்டு டிவிடிக்கு எதிராக மனு கொடுக்க!






திரண்டு வந்த ரசிகர் பட்டாளம்.. புதிய சாதனை படைத்த அஜீத்!







இப்படி ஒரு ரசிகர் பட்டாளம் மற்ற நடிகர்களுக்கு இருக்குமா என்று தெரியவில்லை. அந்த வகையில் அஜீத் கொடுத்து வைத்தவர்தான்.
ரசிகர் மன்றமே தேவையில்லை என்று ஒரே ஸ்டேட்மென்ட்டில் கலைத்துப் போட்டு போய்க் கொண்டே இருந்தவர்தான் அஜீத்.
< /a>ஆனால் அதற்கெல்லாம் நாங்கள் சளைத்து விடுவோமா என்று அஜீத்தின் பின்னால் ராணுவம் போல அணிவகுத்து அசத்திக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
தமிழ் நடிகர்கள் யாருமே இதுவரை இப்படி ஒரு முடிவை எடுத்ததில்லை. எனக்கு மன்றமே தேவையில்லை என்று தைரியமாகவும், தீர்க்கமாகவும் சொல்லி ஒரு நல்ல நாளாகப் பார்த்து மன்றத்தைக் கலைத்தவர் அஜீத். அதைப் பார்த்து அனைவருமே ஆச்சரியப்பட� ��டனர். இனி எங்கே அஜீத் பின்னால் ரசிகர்கள் நிற்கப் போகிறார்கள். அதிருப்தி அடைந்து கலைந்து போய் விடுவார்கள் என்றுதான் நினைத்தனர்.
ஆனால் மங்காத்தா படத்தின் ரிலீஸின்போது திரண்ட அஜீத் ரசிகர்கள் அனைவரையும் வியக்க வைத்தனர். மன்றம் வேண்டாம் என்று அஜீத் சொன்னாலும், அதைப் பொருட்படுத்தாமல் மிகப் பெரிய அளவில் மங்காத்தாவை கொண்டாடினர் அஜீத் ரசிகர்கள்.
இப்போது பில்லா 2 பட ரிலீஸின்போதும் அஜீத் ரசிகர்கள் கலக்கி விட்டார்கள். திரையிட்ட இடமெல்லாம் திருவிழாக் கோலம்தான். அஜீத் கட் அவுட்டுக்கு பூஜை செய்வது, பாலாபிஷேகம் செய்வது என வழக்கம் போல கலக்கிய அவர்கள் மேலும் ஒரு படி போய் மிகப் பெரிய அளவில் செலவு செய்து பூமாலையும் போட்டுள்ளனர் அஜீத் கட் அவுட்டுக்கு.
பெங்களூரிலிருந்து சென்னைக்கு படையெடுத்து வந்திருந்த அஜீத் ரசிகர்கள் ஆல்பட் திய� �ட்டரில் மிகப் பெரிய ராட்சத பூமாலையை போட்டு அனைவரையும் வியக்க வைத்தனர். இந்த பூ வேலைப்பாட்டுக்கான செலவு ரூ ஒன்றரை லட்சமாம். இதைக் கேட்டவுடன் பலருக்கும் மயக்கம்தான் வந்தது. இவ்வளவு பெரிய செலவு செய்து அஜீத்தை கொண்டாடும் ரசிகர்களா என்று வியந்து விட்டனர்.





ரஜினிக்காக சாமி தரிசனம் செய்த ரசிகர்கள்







சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு மறக்க முடியாத நாள் ஜூலை 13 ஆகும்.

உடல் நலக்குறைவு காரணமாக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவிட்டு அன்றுதான் ரஜினி சென்னை திரும்பி வந்தார்.


அவர் உடல் நலம் பாதித்த நாளிலிருந்து, � �லமுடன் நாடு திரும்பி வரும் வரை நடந்த ரசிகர்களின் பிரார்த்தனைகளை எழுதவும் முடியாது, சொல்லவும் முடியாது.

நாட்டில் உள்ள குக்கிராமங்கள், பட்டிதொட்டிகள், மாநகரங்கள் என அனைத்து இடங்களிலும் அவருக்காக பிரார்த்தனைகள் நடந்தது. மன்றத்திலிருப்பவர்கள் என்றில்லாமல், சாதாரண பொதுமக்களும் மனமுருகி வேண்டினர். தாய்மார்கள் பலர் விரதமிருந்தனர். சிலர் முடிகாணிக்கை கூட செலுத� ��தினர்.

இப்போது ரஜினி நலமுடன் உள்ளார். அவர் நடிப்பில் அடுத்த படமும் வெளிவரவிருக்கிறது.

இந்நிலையில் தங்கள் தலைவரின் உடல் நிலை சரியானதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்தும்விதமாக சென்னை மாவட்ட மன்றத்தைச் சேர்ந்த ரசிகர்கள் வியாழக்கிழமை காலை யாத்திரை புறப்பட்டுள்ளனர்.

ரஜினி உடல் நலமின்றி இருந்தபோது எந்தெந்த புனிதத் தலங்களுக்குப் போய் வேண்டிக் கொண்டார்களோ, அந்த கோயில்களுக்கெல்லாம் போய் நேர்த்திக் கடன் செலுத்தினார்கள். சென்னை மன்ற நிர்வாகிகள் ராமதாஸ், கே ரவி, சூர்யா மற்றும் சைதை ரவி உள்ளிட்டோர் இந்தப் பயணத்தில் பங்கேற்றனர்.

இந்த யாத்திரையை முடித்துக் கொண்டு ரஜினி வீட்டுக்குப் போன அனைவரும், பிரசாதத்தை அவர் வீட்டில் ஒப்படைத்தனர்.





மங்காத்தா வாய்ப்பு முதலில் ரிச்சாவுக்கே வந்தது







அஜித்குமார் நடித்து மெகாஹிட்டான மங்காத்தா திரைப்படத்தில் நடிக்க இயக்குனர் வெங்கட் பிரபு ரிச்சாவையை ஒப்பந்தம் செய்தார்.
இருப்பினும் வேறு மொழிகளில் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படவே மங்காத்தா படத்தில் நடிக்க ரிச்சா ஒப்புக்கொள்ள வ� �ல்லை.

இதன்பின்னரே, த்ரிஷா, லட்சுமி ராய் ஒப்பந்தமாகியிருப்பார்கள் என்று தெரிகின்றது.


தமிழில் மயக்கம் என்ன, ஒஸ்தி திரைப்படங்களுக்கு பின்பு இன்னும் ஏன் நடிக்க வரவில்லை என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த ரிச்சா, இந்த இரண்டு படங்களுக்கு பின்பு நிறைய வேற்றுமொழி படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றேன்.

இதன் காரணமாகவே மங்காத்தாவை தவற விட்ட� ��ன். இருப்பினும் வெங்கட் பிரபுவின் பிரியாணி என்ற புதிய படத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைகின்றேன்.

நடிகர் கார்த்தி  புதுமுக நடிகர்களிலேயே மிகவும் திறமையானவர், வெங்கட் பிரபு படத்தில் நாயகர்களுக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும். ஆனால் பிரியாணியில் தனக்கு முக்கியத்துவம் இருப்பதாக கூறியிருக்கிறார் ரிச்சா.

இதுதவிர தம்பி கார்த்தியுடன் மட்டுமல்லாது அண்� �ன் சூர்யாவுடனுடன் நடிக்க ஆசைப்படுவதாக ரிச்சா கூறினார்.





ஜெயம் ரவியுடம் மோதும் ஹாலிவுட் வில்லன்







தமிழ் சினிமாவில் ஹாலிவுட் வில்லன்களை அறிமுகப்படும் பழக்கம் சில காலங்களாக அதிகரித்து வருகின்றது.
ஜெயம் ரவி நடிக்கும் பூலோகம் படத்திற்காக படக்குழுவினர் ஹாலிவுட் வில்லன் ஒருவரை தேடி வருகின்றனர்.

இந்த படத்தில் வடசென்னையைச் சேர� �ந்த குத்துச்சண்டை வீரராக ரவி நடிக்க இருக்கின்றார்.
ஏற்கனவே ரவி நடிப்பில் வெளியான பேராண்மை படத்தில் ரொனால்டு கிக்கிங்கர் வில்லனாக நடித்து அசத்தினார். இந்நிலையில் ரவியுடன் மோதப்போகும் இரண்டாவது ஹாலிவுட் வில்லனுக்காக தெரிவில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றார்கள்.

ரவியும் இதற்கு முன்பு, எம். குமரன் படத்தில் குத்துச்சண்டை வீரராக நட ித்துள்ளார் என்பதும் நினைவில் கொள்ளத்தக்க விடயமாகும்.

பூலோகம் படத்தில் ரவிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கின்றார். கல்யாண் கிருஷ்ணன் இப்படத்தை இயக்குகின்றார்.