Sunday, July 15, 2012

தோலில் பாதிப்பு..! சமந்தா திடீர் ஓய்வு ஏன் ?







ஷூட்டிங்கிலிருந்து திடீர் ஓய்வு எடுத்தது ஏன் என்பதற்கு சமந்தா பதில் அளித்தார். பாணா காத்தாடி, நான் ஈ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சமந்தா. மணிரத்னம், ஷங்கர் படங்களில் ஹீர ோயினாக ஒப்பந்தம் ஆனவர். திடீரென்று அப்படங்களிலிருந்து விலகினார். 

தோலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் விலகியதாக தெரிந்தது. மேலும் ஒரு சில படங்களின் ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்றுவருகிறார்.


மீண்டும் நடிக்க வருவது எப்போது என்று கேட்டபோது அவர் பதில் அளித்தார்.

புதிய படங்கள் எதையும் நான் ஒப்புக்கொள்ளவி� ��்லை. ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் நடிப்பதுதான் இப்போதைய எண்ணம். அவை முடிந்தபிறகுதான் புதியபடங்கள் பற்றி யோசிப்பேன். என்னுடைய கனவுகள் நனவாகி வருகின்றன. அவற்றை சந்திப்பதற்காக நான் பல்வேறு எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது.

இது கடினமான விஷயம்தான். ஆனால் எனது சொந்த காலில் நின்று எல்லாவற்றையும் ஜெயிப்பேன். இவ்வாறு சமந்தா கூறினார். தோல் நோயிலிருந்து � �ீண்டிருக்கும் சமந்தா, இம்மாதம் 20ம் தேதி முதல் நந்தினி ரெட்டி இயக்க நாக சைதன்யா நடிக்கும் பட ஷூட்டிங்கில் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து மற்ற ஷூட்டிங்கிலும் கலந்துகொள்கிறார் என்று அவரது தரப்பில் தெரிவித்தனர்.
.






ஹாலிவுட் படத்துக்காக 7 வயது குழந்தையை தேடுகிறார் கமல் .







ஹாலிவுட் படத்துக்கு 7 வயது குழந்தையை தேடுகிறார் கமல்ஹாசன். பேரி ஆஸ்போர்ன் தயாரிக்கும் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். இல் அவருடன் 7 வயது அமெரிக்க சிறுமி நடிக்கிறார்.

இதற்காக நடிப்பு திறமைகொண்ட சிறுமியை தேடும் பணி தொடங்க� �� இருக்கிறது.

இது பற்றி கமல் கூறும்போது,


இந்த வேடத்துக்கு அழகான சிறுமியாக மட்டுமில்லாமல் நடிக்கும் திறமை கொண்டவர் தேவை. 7 வயது என்பது நான் சினிமாவுக்கு அறிமுகமான வயது. அந்த வயதில் ஒரு குழந்தை நடிக்க வருகிறதென்றால் அதன் மனநிலை எப்படி இருக்கும், கேமராவை எதிர்கொள்ளும்போது எந்தவிதமான எண்ணம் இருக்கும் என்பது எனக்கு தெரியும்.

அதனால்தான் என்னுடன் ந� ��ிக்கும் குழந்தைக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது என்றார்.

விஸ்வரூபம் படம் பார்த்த அமெரிக்கர்களுக்கு அப்படத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகள் பிடித்துவிட்டது. இதனால் கமலுக்கு அமெரிக்க படம் இயக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளதாம். ஹாலிவுட் படத்தில் 7 வயது குழந்தையையும் கமலையும் சுற்றியே கதை நகர்கிறதாம். ஆக்ஷன் அம்சங்கள் நிறைந்த இந்த படத்தில் ஹீரோயின் தேர� �வு நடந்து வருகிறது.

இந்த படத்தை முடித்தபின் அடுத்த ஆண்டில் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் தமிழ் படத்தை இயக்கி, நடிக்கிறார் கமல். இப்படத்துக்கு தமிழில் தலைவன் இருக்கிறான் என்றும் இந்தியில் ஆஸாத் ஹெய்ன் என்றும் தலைப்பிட்டுள்ளார்.
.