Monday, July 16, 2012

பிரபுதேவா படத்தில் ஸ்ருதி ஹாசன் இல்லை?







பிரபுதேவா இயக்கும் புதிய இந்திப் படத்தில் ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடிப்பது குறித்து இன்னும் உறுதியாகவில்லை என்று அப்படத்தின் தயாரிப்பாளர் குமார் தரானி கூறியுள்ளார்.
இந்தியில் பிரபுதேவா புதிய படம் இயக்குகிறார். அதில் குமார் தரானி யின் மகன் கிரிஷ்தான் நாயகன். இதில் கிரிஷுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் இதை குமார் தரானி மறுத்துள்ளார். இதுவரை ஹீரோயின் குறித்து முடிவு செய்யவில்லை, இறுதி செய்யவில்லை. இன்னும் ஒரு வாரம் பொறுத்திருங்கள். அதன் பிறகு ஹீரோயின் குறித்துத் தெரிய வரும் என்றார் குமார்.
ஓ.கே. குமார்ஜி, முடிவு பண்ணிட்டு சொல்லுங்க.. நியூஸ் போட� �ும்!





விசா மறுப்பு அழுதார் நயன்தாரா..!








கடந்த சில வாரங்களுக்கு முன் டோலிவுட், கோலிவுட் ஹீரோக்கள் மொத்த பேரும் துபாயில் நடந்த சைமா திரைப்பட விழாவில் கலந்து கொண்டார்கள். அனுஷ்கா, கார்த்திகா, த்ரிஷா என்று முன்னணி நட்சத்திரங்களுடன் சிம்புவ� ��ம், தனுஷும் கூட கலந்து கொண்டு கலக்கினார்கள்.

இந்த விழாவுக்கு தானும் போக ஆசைப்பட்டாராம் நயன்தாரா. இவரது விசாவை வேண்டுமென்றே தாமதப்படுத்திய சிலர், கடைசி நேரத்தில் கிடைக்கவில்லை என்று கையை விரிக்க ஆற்றாது அழுது தீர்த்தாராம் நயன்.


பின்னணியில் விளையாடிய சதிலீலாவதன்கள் யாரோ?
.