Tuesday, July 17, 2012

'துப்பாக்கி வேறு... கள்ளத்துப்பாக்கி வேறு... தடையை நீக்குங்கள்' - தாணு கோரிக்கை







நடிகர் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கக் கோரி தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மனு தாக்கல் செய்துள்ளார்.

விருகம்பாக்கத்தை சேர்ந்த நார்த் ஈஸ்ட் பிலிம் ஒர்க்ஸ் பேக்டரி உரிமையாளர் சி.ரவி என்ற கே.� ��ி. ரவிதேவன் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்' கடந்த 2009ம் ஆண்டு கள்ளத்துப்பாக்கி என்ற பெயரை தென்னிந்திய பிலிம்சேம்பரில் பதிவு செய்தேன்.


இந்நிலையில், துப்பாக்கி என்ற பெயரில் கலைப்புலி தாணு, திரைப்படம் தயாரிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு துப்பாக்கி என்று பெயர் சூட்டியு� �்ளனர். அந்த படத்துக்கு துப்பாக்கி என்ற பெயரையும், துப்பாக்கி லோகோவையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். இதை விசாரித்த 2வது சிட்டி சிவில் நீதிமன்றம் துப்பாக்கி என்ற பெயரைப் பயன்படுத்த கலைப்புலி தாணுவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இதையடுத்து, இந்த தடையை நீக்கக் கோரி கலைப்புலி தாணு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த மனு:
< br />துப்பாக்கிக்கும், கள்ளத்துப்பாக்கிக்கும் வேறுபாடு உள்ளது. துப்பாக்கி என்ற பொதுவான பொருளின் படத்துக்கு (லோகோ) யாரும் உரிமை கொண்டாட முடியாது.

ஆதி என்ற பெயரில் திரைப்படம் எடுத்தபின்னர் ஆதி சிவன், ஆதிவாசி என்ற வேறு பெயர்களிலும், சிங்கம் என்ற பெயர் சிங்கம்புலி, சிங்கமுகம், சிங்கமகன் என்ற வேறு பெயர்களிலும், ஈ என்ற பெயர் நான் ஈ, நெருப்பு ஈ என்ற வேறு பெயர்களிலும் திர ைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என்று தனிப்பட்ட எவரும் உரிமை கோர முடியாது. எனவே தடையை நீக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு 2வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.





புது வீடு, வாஸ்து சேஞ்ச்... ரஜினியின் புதுப் பொலிவு







எப்பவோ ஆரம்பித்த வாஸ்து திருத்தங்கள் இன்னும் முடியவில்லையாம் ரஜினி வீட்டில். போயஸ் தோட்டத்தில் வாஸ்து சரியில்லை என்று டாப் மோஸ்ட் ஜோதிடர்கள் கணித்தது எப்போது? ரஜினி உடம்புக்கு முடியாமல் போராடிக் கொண்டிருந்தாரே, அப்போது.

அவரை ச� ��ங்கப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இங்கே வாஸ்து வேலைகளை முடுக்கி விட்டிருந்தார் அவரது மனைவி லதா.
அவர் சுகமாக திரும்பி வந்த பின்பும் கூட இந்த வேலைகள் முடியாமல் தொடர்ந்து கொண்டிருந்ததால் மகள் வீட்டில்தான் தங்கியிருந்தார் ரஜினி.

இதற்கிடையில் தனது பழைய வீட்டிற்கு பின்புறமே புது வீடு ஒன்றை வாங்கியிருக்கிறாராம் அவர். அந்த வீட்டிலும் வாஸ் து மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவ்விரு வீடுகளையும் கொத்தனார்கள், சித்தாள்கள் ஆக்ரமித்துக் கொண்டிருப்பதால் ரஜினியின் சந்திப்பெல்லாம் இப்போது ராகவேந்திரா மண்டபத்தில்தான் நடந்து வருகிறதாம்.

அடிக்கடி இமயமலைக்கு போகிற வழக்கமுள்ள சூப்பர் ஸ்டார் இப்போது அங்கு போவதையும் நிறுத்திவிட்டார். ரஜினி இருக்கிற இடமே திருப்பதி என்று கருதுகிற அவரது ரசிகர்கள� �� அவ்வப்போது மண்டப வாசலில் கூடி தலைவர் முகம் தெரிகிறதா என்ற தேவுடு காக்கிறார்கள்.
.





வாழ்க்கையில் கேட்காததுகூட கிடைக்க என்ன செய்யணும் தெரியுமா? - சந்தானம் சொல்கிறார் கேளுங்க!







வாழ்க்கையில் தாழ்வு மனப்பான்மை மட்டும் இருக்கக் கூடாது. அதேபோல பணம் மட்டுமே பிரதானமா இருக்கக் கூடாது. இது ரெண்டையும் கடைபிடிச்சா, வாழ்க்கையில் கேட்காததுகூட கிடைக்கும், என்கிறார் சந்தானம்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக இருந்� ��ாலும், கடவுள் விஷயத்தில் மட்டும் ரொம்பவே நெஞ்சைத் தொட்டு விடுகிறார்கள்.

சந்தானமும் அதற்கு விலக்கல்ல. கல்கி, நித்யானந்தா என தன் ஆன்மீகத்தைத் தேடிக் கொண்டிருந்த சந்தானம், இப்போது யோகாசனங்கள், தியானம் பற்றிப் பேச ஆரம்பித்துள்ளார்.
சமீபத்தில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் ஒரு ஆன்மீக நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுப் பேசினார்.
யோகமும் மனித மாண்பும் என்ற தலை� ��்பில் நடந்த அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சந்தானம் பேசுகையில், "ஆடியோ வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா போன்ற மேடைகளில் ஏறிய எனக்கு இது ஒரு புதுமையான அனுபவம். படிப்பு சரியாக வராத காரணத்தால் நான் சினிமாவுக்கு வந்தேன்.
இங்க வந்த பிறகு கத்துக்கிட்டது 'தாழ்வு மனப்பான்மை இருக்கக்கூடாது' என்பதுதான். நம்மைப் பற்றி நமக்கே நம்பிக்கை இருந்தால� �, எல்லாம் நன்றாக நடக்கும், சந்தோஷமாக நடக்கும் என நினைக்க வேண்டும்.
என்ன வேலை, எவ்வளவு சம்பளம் என்பதையே சிந்தித்து கவனத்தை திசை திருப்பி வருகிறோம். இதற்கும் அப்பால் இறைநிலையோடு இருந்தால் வாழ்க்கையில் கேட்பது மட்டுமின்றி கேட்காததும் கிடைக்கும்," என்றார்.
'என்ன பண்றது சந்தானம்.... நீங்க சம்பாதிச்சிட்டீங்க... இறை நிலை பத்தி பேசறீங்க... சம்பாதிக்க வாய்ப்பு குறைவா இருக் கிறவன் சம்பளத்தை மட்டும்தானே சிந்திக்க முடியும்!!'
.


.
.






விஜய்க்காக ஹாலிவுட் நடிகையைத் தேடும் கௌதம் மேனன்?







கௌதம் மேனன் எடுக்கும் யோஹான்: அத்தியாயம் ஒன்று படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகையை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது.
விஜயை வைத்து கௌதம் மேனன் எடுக்கும் படம் யோஹான்: அத்தியாயம் ஒன்று.
இந்த பட த்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் யோஹானில் நான் நடிக்கவில்லை என்று ஸ்ருதியும், ஸ்ருதியை கேட்கவேயில்லை என்று கௌதம் மேனனும் தெரிவி்த்துவிட்டனர்.
சரி பட அறிவிப்பு வெளியாகி இத்தனை நாட்கள் ஆகியும் கதாநாயகி யார் என்றே கௌதம் கூறவில்லையே என்று பலரும் முணுமுணுத்தனர். இந்நிலையில் விஜய்க்கு ஜோடியாக க ோலிவுட், டோலிவுட், பாலிவுட் அல்ல ஹாலிவுட்டில் இருந்து நடிகையை அழைத்து வர முயற்சி நடந்து வருகிறதாம். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை உலக அளவில் கொண்டு செல்லும் நோக்கத்தில் தான் படத்திற்கு யோஹான் என்று பெயரிட்டுள்ளாராம் இயக்குனர்.
கோலிவுட்டுக்கு ஹாலிவுட் நடிகையை அழைத்து வரும் பணியில் கௌதம் மேனன் ஈடுபட்டுள்ளாராம். ஒரு பக்கம் கமல் ஹாலிவுட்டுக் கு போகிறார். மறுபக்கம் ஹாலிவுட் நடிகை கோலிவுட்டுக்கு வரப் போகிறார். இதன் மூலம் ஹாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்கும் இடையேயான உறவு வலுப்பட்டு வருகிறது என்று தான் கூற வேண்டும்.







இளம் வயது சூர்யா ..!இரட்டையருக்கு வலைவீசும் கே.வி.ஆனந்த்







இரட்டை வேடத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் அவரது இளமை தோற்றத்துடன் கூடிய வேடத்துக்குஇரட்டை சிறுவர்களை தேடுகிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த்.

ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் சூர்யா நடிக்கும் படம் மாற்றான். இரட்டையர்களை தேடுவது க ுறித்து இயக்குனர் கே.வி.ஆனந்த் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:


இதுவரை தமிழில் வராத கதையான ஒட்டிப்பிறந்த இரட்டை பிறவிகள் கதையாக இப்படம் அமைந்திருக்கிறது. எப்போதும் சவாலான வேடங்களை விரும்பி செய்வார் சூர்யா. இவரின் சிறுவயது காட்சிகள் படத்தில் இடம்பெறுகிறது.

அதற்காக இரட்டை சிறுவர்களை தேர்வு செய்யும் பணி நடக்கிறது. இதற்காக இரட்டையர்கள் என் வீட்டுக� �கு வந்து வாய்ப்பு கேட்கின்றனர். அப்படி வருபவர்கள் சூர்யா சாயலில் இருக்கிறார்களா, அவரது பாடி லாங்வேஜ் வருகிறதா என்பது போன்ற விஷயங்கள் உன்னிப்பாக பார்க்க¤றேன். இதற்கான தேர்வு போட்டியில் பங்கேற்க எனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்பு கொள்ளலாம். சிறுவர்கள், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தால் நன்றாக இருக்கும்.