Wednesday, July 18, 2012

கடும் உடற்பயிற்சி... ஜிம்மில் 'தொப்பையைத் தொலைத்த' அஜீத்!







அடுத்த படத்துக்காக படு வேகமாகத் தயாராகி வருகிறார் அஜீத். இதற்காக அவர் கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இப்போது அவர் முன்னிலும் ஸ்லிம்மாக, தொப்பையே, எக்ஸ்ட்ரா சதையோ இல்லாமல் பிட்டாக மாறியுள்ளார்.

அஜீ்த்தை வ� ��மர்சிப்பவர்கள் அவரது உடல் தோற்றத்தை விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுகுறித்து மிகுந்த வருத்தம் தெரிவித்திருந்த அஜீத், என் நடிப்பைப் பார்க்காமல், உடல் தோற்றத்தை கிண்டல் செய்வது சரியா எனக் கேட்டிருந்தார்.
ஆனால் இன்னொரு பக்கம், இந்த விமர்சனத்துக்கும் இடம் கொடுக்கக் கூடாது என நினைத்தாரோ என்னமோ.. ஜிம்முக்குப் போய் தீவிர உடற்பயிற்சியில் இறங்கிவிட்டார்.
அ� ��ுத்து ஏஎம் ரத்னம் தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நயன்தாராவுடன் தான் நடிக்கும் படத்துக்காகத்தான் இத்தனை பயிற்சிகளும்.
இந்தப் படத்தில் முற்றிலும் ஸ்லிம்மான அஜீத்தை நீங்கள் பார்க்கலாம் என்று கூறியுள்ள இயக்குநர் விஷ்ணு வர்தன், அஜீத் ஜிம்மிலிருக்கும் இரு படங்களையும் அனுப்பியுள்ளார்!
அந்தப் படங்களில் அஜீத்தின் உடல் ப்ளாட்டாக, ஃபிட்டாக உள்ளது. விமர்சக� �்கள் கிண்டலடிக்கும் தொப்பை கூட போயே போச்! விட்டால் சிக்ஸ் பேக்குடன் வந்து நின்றாலும் நிற்பார் மனிதர்...
வெற்றியும் தோல்வியும் கலைஞர்களின் ஆர்வத்தை பாதிப்பதில்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்!!






மருத்துவரை சந்தித்தார் சந்தானம் அதிர்ச்சியில் ஒரு 'வாய்ப்பூட்டு'







சாதி மத பேதமில்லாமல் ஒட்டுமொத்த தமிழுலகத்தையே சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் சந்தானம். ஆனால் அவருக்குள்ளும் ஒரு 'வன்னிய குல சத்திரியன்' இஸ்திரி போட்ட இஞ்சிமரபா சட்டையோடு திரிந்து கொண்டிருப்பது பவரும் அறியாத பரம ரகசியம்.

சந்� ��ர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தனது சொந்த பந்தங்களிடம் 'எனக்கு மருத்துவரய்யாவை ரொம்ப புடிக்கும்' என்று சொல்லிக் கொண்டேயிருப்பாராம்.
டாஸ்மாக் கடையிருக்கும் ஏரியாவிலெல்லாம் பூட்டோடு திரிந்து கொண்டிருக்கும் பா.ம.க தலைமை மீது டாஸ்மாக்கின் அறிவிக்கப்படாத அம்பாசிடராகவே வாழ்ந்து கொண்டிருக்கும் சந்தானம் பற்று கொண்டிருப்பது இனிப்பான முரணல்லவா?

இதுவரை � ��வரை சந்திக்க சந்தர்ப்பம் வாய்க்காமலிருந்தது சந்தானத்திற்கு. கும்பகோணத்தில் நடைபெற்று வரும் 'கண்ணா லட்டு திங்க ஆசையா' படப்பிடிப்பின்போது ஒரே ஓட்டலில் தங்கியிருந்தார்களாம் டாக்டரும் சந்தானமும். தனது நெடுநாள் கனவை அங்கே நிறைவேற்றிக் கொண்டார் சந்தானம்.

'தம்பிதான் சந்தானமா? கேள்விப்பட்டிருக்கேன். நான் படமெல்லாம் பாக்குறதில்லப்பா...' என்று மருத்துவர் சொல்ல, நல� �லவேளைப்பா என்று மனசுக்குள் ஆஃப் ஆனாராம் சந்தானம். இல்லையென்றால் மருத்துவர் கையிலிருக்கிற டாஸ்மாக் பூட்டு சந்தானத்தில் வாயில் அல்லவா தொங்கியிருக்கும்?
.





ஜஸ்ட் ஆறே படங்கள்... கார்த்தி சம்பளம் ரூ 14 கோடி!







ஆறே ஆறு படங்கள்தான் நடித்திருக்கிறார்... அதிலும கடைசி படம் பெரிய வெற்றி என்று கூட சொல்ல முடியாது. ஆனால் இன்று அவர் வாங்கும் சம்பளம் படத்துக்கு ரூ 14 கோடிக்கு கிர்ரென்று உயர்ந்திருக்கிறது.
இது கிட்டத்தட்ட விஜய், அஜீத், சூர்யாவுக்கு இணை� ��ானதாகும்.


'பருத்தி வீரன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'நான் மகான் அல்ல', 'பையா', 'சிறுத்தை', 'சகுனி' ஆகிய 6 படங்கள்தான் கார்த்தி நடித்தவை.
இவற்றில் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் சகுனி பாக்ஸ் ஆபீஸில் சுமாராகப் போயின. பருத்தி வீரன் க்ளாஸிக் என்ற அந்தஸ்தைப் பெற்றது. நான் மகான் அல்ல நல்ல பெயரைக் கொடுத்தது.
சிறுத்தை ஒரு ரீமேக். ஆனாலும் நல்ல வசூல். கடைசியாக வந்த சகுனிக்கு நல ்ல ஓபனிங். ஆனாலும் எதிர்ப்பார்த்த மாதிரி படம் இல்லாததால், அந்த ஓபனிங்கை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.
அடுத்து அலெக்ஸ் பாண்டியன், பிரியாணி என பெரிய படங்களைக் கையில் வைத்துள்ள கார்த்திக்கிடம் அடுத்த பட கால்ஷீட்டுக்கு ரூ 14 கோடி பேசியுள்ளாராம் ஒரு தயாரிப்பாளர். கார்த்திக் மேலும் யோசித்தால், மேலும் ஒரு கோடி தரவும் தயார் என்கிறாராம்.

விஜய், அஜீத், சூர்யா போன்றோ� ��் பல படங்களில் நடித்த பிறகுதான் ரூ 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அலெக்ஸ் பாண்டியனுக்குப் பிறகு இந்த சம்பளம் ரூ 20 கோடியில் போய் நின்றாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள்.





காஜல் சொதப்பலோ சொதப்பல்... தாமதமாகும் பெரிய படங்கள்!







காஜல் அகர்வாலின் கால்ஷீட் சொதப்பலால் விஜய், சூர்யா ஆகியோரின் பெரிய படங்கள் தாமதமாகின்றன.
பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட காஜலை தமிழில் ஆரம்பத்தில் கண்டு கொள்ளவே இல்லை. பின்னர், தெலுங்குப் படம் மகதீராவின் வெற்றி அவரை டாப்புக்� �ு கொண்டு போய்விட்டது.

தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோக்கள் விரும்பும் நாயகிகளில் ஒருவராகிவிட்டார்.
காஜல்அகர்வால் ஒரே நேரத்தில் சூர்யா ஜோடியாக மாற்றான், விஜய் ஜோடியாக துப்பாக்கி இவை தவிர மேலும் இரண்டு தெலுங்கு படங்கள் என நான்கு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார்.
இப்படி பிய்த்து பிய்த்து கால்ஷீட்டை கொடுத்துவிட்டதால், எந்தப் படத்திலு� ��் அவரால் முழுமையாக நடிக்கமுடியவில்லை.
இதனால் மாற்றான் படத்தில் பாடல் காட்சியில் அவரால் நடிக்க முடியவில்லை. இதே போல துப்பாக்கி படத்துக்கும் இரு பாடல் காட்சிகள் பாக்கி உள்ளனவாம். தெலுங்கு படங்களில் நடிப்பதால் அவரால் இந்த பாடல் காட்சிகளை முடித்து கொடுக்க முடியவில்லை.
இப்படி இரு பெரிய படங்களின் வெளியீட்டில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு காஜல் காரணமாகிவிட்டதால், � �ம்பந்தப்பட்ட இயக்குநர்கள் கடுப்பில் உள்ளார்களாம்!






அக்டோபர் 12ம் தேதி அலெக்ஸ் பாண்டியன்







கார்த்தி,அனுக்ஷா,சந்தானம் நடிப்பில் வளர்ந்து வரும் படம் அலெக்ஸ் பாண்டியன். சுராஜ் இயக்கும் இந்தப் படம் காதல், காமெடி, ஆக்ஷன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களுடன் உருவாகி வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

அலெக்ஸ் பாண்டியன் திர� ��ப்படம் அக்டோபர் 12ம் தேதி திரைக்கு வரவிருப்பதால் இதன் படப்பிடிப்பு வேகம் அடைந்துள்ளது.
கார்த்தி-சந்தானம் கூட்டணியில் இந்த ஆண்டு திரைக்கு வர இருக்கும் இரண்டாவது திரைப்படம் அலெக்ஸ் பாண்டியன்.

அதேநேரத்தில் இது கார்த்தி நடிக்கும் ஏழாவது திரைப்படம்.இந்தப் படத்தை தொடர்ந்து பிரியாணி படத்தில் நடிக்க இருக்கிறார்.





பில்லா 2 குறித்து அஜீத், விஜய் ரசிகர்கள் மோதல்: 3 பேர் படுகாயம்







திருப்பூரில் நடிகர்கள் அஜீத், விஜய் ரசிகர்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் மூன்று பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பூரில் உள்ள அப்பாச்சி நகர் பகுதியில் நேற்று விஜய் ரசிகர்களும், அஜீத் ரசிகர� �களும் பில்லா 2 படம் குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
சாதாரண பேச்சு காரசார வாக்குவாதமாகி மோதலில் முடிந்தது. விஜய் ரசிகர்களும், அஜீத் ரசிகர்களும் ஒருவரையொருவர் கையாலும், கட்டைகளாலும் தாக்கிக் கொண்டனர்.
இதில் விஜய் ரசிகர் கருப்பையா (37), அஜீத் ரசிகர்கள் சிவா (25), மோகன் (24) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அந்த 3 பேரும் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ம� ��ுத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இரு தரப்பும் திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தன. அவர்களது புகாரின்பேரில் விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ராமராஜ், அன்பு, கருப்பையா, அஜீத் ரசிகர்கள் சிவா, பழனியப்பன், மோகன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.< br />இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.