Friday, July 20, 2012

ஸ்டேஷன் போராட்டம்..!ஆந்திராவில் வளரும் வாலு!







சிம்புவின் 'வாலு' ஹைதராபாத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. தெலுங்கு பட நாயகன் மனோஜின் ஊர் என்பதால், இரவு நேரங்களில் பார்ட்டி கொண்டாட்டம் தானாம்.

சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உட்பட பலர் நடித்து வரும் 'வாலு' படத்தினை விஜய் சந்தர் இயக்கி வ� ��ுகிறார். நிக் ஆர்ட்ஸ் தயாரித்து வருகிறது.


தமிழகத்தில் மட்டுமே படப்பிடிப்பு, பாடல்கள் வெளிநாட்டில் என்று திட்டமிட்டது படக்குழு. ஆனால் நடந்ததே வேறு.

ரெயில்வே காலனி, ரெயில்வே ஸ்டேஷன் ஆகியவற்றில் 60% காட்சிகள் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆகையால் தென்னிந்திய ரயில்வே நிர்வாகத்தினரிடம் ஒரு ரெயில்வே ஸ்டேஷனை வாடகைக்கு கேட்டு இருக்கிறர்கள். அதற்� �ு ரயில்வே நிர்வாகம் செவி சாய்க்கவில்லை.

படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்று விளம்பரம் செய்துவிட்டோமே என்று ஆலோசித்தவர்கள் நேரடியாக South Central Railway நிர்வாகத்திடம் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் உடனே ஹைதராபாத் பக்கத்தில் உள்ள ஸ்டேஷன் ஒன்றை கொடுத்து இருக்கிறார்கள்.

ஹைதராபாத் தனது நண்பன் மனோஜ் ஊர் என்பதால் சிம்பு உடனே ஒ.கே சொல்ல, 'வாலு'வை வளர்க்க அங்கு சென்று விட்டார்கள். படத்தின் கதைப்படி சிம்புவின் அப்பா ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டர். அதனால் தான் இந்த ரெயில்வே ஸ்டேஷன் போராட்டமாம்.

படப்பிடிப்புக்காக செலுத்தப்படும் டெபாசிட் தொகையும் அதிகம், வாடகையும் அதிகம் என்பதால், பரபரப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகிறாரகள்.





ஆர்யா.. அனுஷ்கா.. ஆற்றுப்படை!






'மயக்கம் என்ன' படத்தினைத் தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் 'இரண்டாம் உலகம்' படத்தினை ஜார்ஜியா நாட்டில் படம்பிடித்து வருகிறார்.

ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.

செல்வராகவன் இயக்கத்தில� � வெளிவர இருக்கும் இந்த பெரிய பட்ஜெட் படத்திற்காக ஆர்யா,
அனுஷ்கா இருவருமே martial arts கற்று வருகிறார்கள். இருவருக்கும் என தனித்தனியாக martial arts கற்பிக்க ஸ்பெஷலிஸ்ட்களை நியமித்து இருக்கிறாராம் செல்வராகவன்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஒரு காட்சிக்காக அங்குள்ள ஆற்றில் ஆர்யா மற்றும் அனுஷ்கா இருவரும் சம்பந்த� ��்பட்ட காட்சிகளை படமாக்கினார்களாம்.

ஆர்யா - அனுஷ்கா இருவருமே ஒன்றிணைந்து " அது எப்படி நாம ரெண்டு பேர் மட்டும் தண்ணில இருக்கலாம்? " என்று ஒட்டு மொத்த படக்குழுவையும் தண்ணீருக்குள் இழுத்து விட்டார்களாம்.

பிறகு அனைவருமே சந்தோஷமாக பொழுதை போக்கி இருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீடு எப்போது என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இசை வெளியீடு முடிந்து, அதற்குப் � �ிறகு 1 மாதம் கழித்து தான் படம் வெளியாகும் என்கிறது கோலிவுட்.





அமிதாப் பேத்திக்கு காது குத்தியாச்சாம்! .







அமிதாப் பச்சனின் பேத்தியும் அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராயின் மகளுமான ஆரத்யாவுக்கு காது குத்தி விட்டார்களாம். இதை ஆரத்யாவின் பாட்டி ஜெயா பச்சன் தெரிவித்துள்ளார்.

அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா தம்பதிக்கு அழகான மகள் பிறந்துள்ளாள்.
இக்குழந்தைக்கு ஆரத்யா என்று பெயரிட்டுள்ளனர். இந்த நிலையில் டெல்லியில் நடந்த ஒரு திரைப்பட விழாவுக்கு பாட்டி ஜெயா பச்சன் வந்திருந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பிரபலங்களிடம் அவர் பேசியபோது ஆரத்யாவும், ஐஸ்வர்யாவும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். ஆரத்யா படு சுட்டியாக இருப்பதாகவும் பூரிப்புடன் கூற� ��னார்.

பின்னர் தனக்கு அருகில் நின்றிருந்த நடிகை நந்திதா தாஸிடம் ஜெயா கூறுகையில், பேத்திக்கு மொட்டை போட்டு விட்டோம் என்று கூறினாராம்.

அப்புறம், ப்ரீகேஜி எங்கே சேர்க்கப் போறீங்க...சொன்னீங்கன்னா நியூஸ் போட வசதியா இருக்கும்!





விஜய் படத்துக்கு தொடரும் சிக்கல் - 'துப்பாக்கி' தலைப்புக்கு தடை நீட்டிப்பு .







நடிகர் விஜய் நடிக்கும் `துப்பாக்கி' என்ற படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

துப்பாக்கி

சென்னை 2-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில ் நார்த் ஈஸ்ட் பிலிம் ஒர்க் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், `கள்ளத்துப்பாக்கி என்ற பெயரில் தமிழில் சினிமா படம் தயாரித்து வருகிறோம். படத்தின் தலைப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்தோம். இந்த நிலையில், `துப்பாக்கி' என்ற தலைப்பில் கலைப்புலி தாணு தயாரிக்கும் படத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். கலைப்புலி தாணு விதிமுறைகளை மீறி, நான் பதிவு செய்த `கள்� �த்துப்பாக்கி' என்ற தலைப்பின் பின் பகுதியான `துப்பாக்கி' என்ற பெயரில் படத்தை தயாரித்து வருகிறார். இந்த தலைப்புக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

இடைக்கால தடை

இந்த மனுவை விசாரித்த நீதிபதி திருமகள், `துப்பாக்கி' என்ற தலைப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடையை நீக்ககோரி, சிட்டி சிவில் கோர்ட்டில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மனு த ாக்கல் செய்தார்.

அந்த மனுவில், `தலைப்பின் பின்பகுதி அல்லது முன்பகுதியை பிறர் பயன்படுத்தக்கூடாது என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது. சிங்கம், ஈ, சிறுத்தை ஆகிய படங்கள் வெளியானது. அதே பெயருடன், சிங்கம்புலி, சிங்கமுகம், சிங்கமகன், நான் ஈ, நெருப்பு ஈ, சிறுத்தைபுலி என்ற படங்கள் வெளியாகியுள்ளது. மனுதாரர் விளம்பரத்துக்காக வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே `துப்பாக்கி' என்ற தலைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

தடை நீட்டிப்பு

இந்த வழக்க நீதிபதி திருமகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களான தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, தென்னிந்திய திரைப்படம் மற்றும் டி.வி., தயாரிப்பாளர் கில்டு ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டனர்.

இதையடுத்து நீதிப தி திருமகள் பிறப்பித்த உத்தரவில், `எதிர்மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி, வழக்கை வருகிற 25-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். `துப்பாக்கி' என்ற தலைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை வருகிற 25-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிடுகிறேன்' என்று கூறியுள்ளார்.