Thursday, August 2, 2012

அடடா... வட போச்சே!







ரொம்ப கடுப்பிலும் அதிர்ச்சியிலும் இருக்கிறாராம் நடிகை த்ரிஷா.
பின்னே.. இந்தியில் எப்படியும் தன்னை மீண்டும் நிலைநிறுத்தும் என்று எதிர்ப்பார்த்த படத்திலிருந்து திடீரெனத் தூக்கியடித்தால்... என்னதான் செய்வார்?
தெலுங்கில் பிரபு தேவ ா இயக்கிய முதல் படம் 'நு ஒஸ்தனன்டே நேனொ ஒத்தன்டனா' . த்ரிஷாதான் நாயகி.

இதே படம் தமிழில் உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் என்ற பெயரில் வெளியாகி வெற்றி கண்டது. இதிலும் த்ரிஷாதான் நாயகி.
இப்போது இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் பிரபுதேவா. அதிலும் திரிஷா நாயகியாக நடிப்பார் என கூறப்பட்டது. திரிஷா பொருத்தமாக இருந்ததால் அவரையே தேர்வு செய்ய பிரபுதே� �ா திட்டமிட்டு இருந்தாராம். விஷயத்தைக் கேள்விப்பட்டு மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தார் த்ரிஷா.
காட்டா மீட்டாவில் கோட்டை விட்டதை பிரபு தேவா படத்தில் பிடித்துவிடலாம் என்பது அவர் கணக்கு.
ஆனால் திடீரென பிரபு தேவாவின் பார்வை கமல் மகள் ஸ்ருதி பக்கம் திரும்பிவிட்டதாம். இதனால் திரிஷா அதிர்ச்சியாகியுள்ளார்.
சமீபத்தில் நடந்த இரவு விருந்து ஒன்றில் நயன்தாராவ� �ம், திரிஷாவும் கட்டிப்பிடித்து நட்பு பாராட்டினர். அதன்பிறகு தொடர்ந்து இருவரும் நெருக்கமான தோழிகளாக மீடியாவுக்கு பேட்டிகளும் அளித்து வருகின்றனர்.
இதனால் கோபமடைந்துதான் த்ரிஷாவைக் கழட்டிவிட்டார் பிரபு தேவா என ஒரு பக்கம் செய்திகள் வரத் தொடங்கியுள்ளன.
இதுக்காகவெல்லாமா வாய்ப்பு தர மறுப்பாங்க?!




ஒரு கோடியைக் கூட வசூலிக்காத பில்லா 2- கடுப்பில் வெளிநாட்டு விநியோகஸ்தர்கள்







லண்டன்: அஜீத்தை கிங் ஆப் ஓபனிங் என்று வர்ணிப்பது அவரது ரசிகர்களின் விருப்பமான விஷயம்.
உண்மையில் ரஜினிக்குப் பிறகு, அவர் படத்துக்குதான் தமிழகத்தில் அதிக நாள் ஓபனிங் என்பதும் உண்மைதான்.

ஆனால் பில்லா 2 எல்லாவற்றையும் சொதப்� �ிவிட்டது. தமிழகத்தில் இரண்டாவது வாரமே டல்லடித்துப் போயின திரையரங்குகள். வேறு படங்களை மாற்று ஒப்பந்த முறையில் திரையிட்டு வந்தனர்.
இப்போது வெளிநாட்டில் இந்தப் படம் என்ன வசூலித்தது என்ற விபரம், அதிகாரப்பூர்வமாக வந்துள்ளது.
அதன்படி, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் ஒரு கோடி ரூபாயைக் கூட வசூலிக்க முடியாமல் படுதோல்வியைத் தழுவியுள்ளது பில்லா 2.
தமிழ்ப் படங்க ளைப் பொறுத்தவரை, அமெரிக்காவும், பிரிட்டனும் முக்கியமான சென்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத் படங்களிலேயே இந்த இரு நாடுகளிலும் அதிக தியேட்டர்களில் வெளியானது பில்லா 2தான்!
பிரிட்டனில்..
பில்லா 2 முதல்வாரம் ஈட்டிய தொகை ரூ 61.20 லட்சம். பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் 20 அரங்குகலில் படம் வெளியானது.
அமெரிக்காவில்...
அமெரிக்காவில் 31 அரங்குகளில் இந்தப் படத்தை வெளி� ��ி்ட்டனர். அங்கு மொத்தம் ரூ 64 லட்சத்தை மட்டுமே இந்தப் படம் வசூலித்துள்ளது. இது மங்காத்தாவின் வசூலைவிட மிகக் குறைவு.
மொத்தம் மூன்று வாரங்களில் அமெரிக்காவில் 90 லட்சம் ரூபாயை மட்டுமே வசூலித்த நிலையில், தூக்கப்பட்டுள்ளது பில்லா 2. பிரிட்டனில் இன்னும் குறைவாக, ரூ 79 லட்சத்துடன் தூக்கப்பட்டுள்ளது இந்தப் படம்.
இத்தகவல்களை, பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷ் வெளியிட்டுள்ளார்.< br />இந்தப் படம் மூலம் வெளிநாட்டு உரிமையை வாங்கியவர்களுக்கு நஷ்டமே கிடைத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.





பிரபுதேவாவை சந்தித்த விஜய்..!மீண்டும் போக்கி‌ரி கூட்டணி..!







ஏற்கனவே விஜய்யை வைத்து இரண்டு படங்கள் தந்திருக்கிறார் பிரபுதேவா. போக்கி‌ரி, வில்லு. மூன்றாவதாக இந்தக் கூட்டணி அமையுமா?

வான்டட், ரவுடி ரத்தோர் வெற்றிக்குப் பிறகு பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குனராகிவிட்டார் பிரபுதேவா.


நேற்று தனது புதிய இந்திப் படத்தை தொடங்கியுள்ளார். அவரது ஷெட்யூலைப் பார்த்தால் இன்னும் இரண்டு விருஷத்துக்கு அவர் தென்னகம் திரும்புவாரா என்று சந்தேகமாக உள்ளது.

இந்நிலையில் பிரபுதேவாவை அவரது மும்பை வீட்டில் விஜய் சந்தித்ததாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன. பிரபுதேவாவுக்காக ரவுடி ரத்தோ‌ரில் ஒரு பாடலுக்கு ஆடினார் விஜய். பதிலுக்கு பிரபுதேவா விஜய்யை இயக்குவ� �ர் என்கிறார்கள் கோடம்பாக்கத்து யூகக்காரர்கள்.

போக்கி‌ரி கூட்டணி மீண்டும் இணைந்தால் ஒரு ஹிட் நிச்சயம்.