Friday, August 3, 2012

மந்தவெளியில் புதுமுகம் அவர் தான் அஜீத் "






திரையுலகில் பெரும் பின்புலம் இல்லாமல், தன் முயற்சியால் முன்னுக்கு வந்தவர் அஜீத். இன்று அஜீத் திரையுலகிற்கு வந்து 20 ஆண்டுகள் முடிகிறது.

பல்வேறு ஏற்ற, இறங்கங்களைச் சந்தித்தாலும் எதற்கும் பதற்றப்படாமல் தான் சரி என நினைப்பதைச் செய்வதே அஜீத்தின் பலம். அவரது இந்த குணமே அவருக்கு பல ரசிகர்களை கொண்டு வந்து சேர்த்தது.
தன் பெயரைச் சொல்லி யாரும் தன் ரசிகர்களை தவறாகப் பயன்படுத்திவிடக் கூடாது என முடிவு செய்த அஜீத், தன் ரசிகர் மன்றங்களை கலைக்கிறேன் என்று அறிவித்த பின்னர் தான் அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது.

இன்று 21வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் அஜீத்� �ை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வாவை தொடர்பு கொண்டு பேசிய போது " அமராவதி படத்தின் கதையினை தயார் செய்த உடன், ஒரு நாள் எஸ்.பி.பியை சந்திக்கும் போது கதையினை கூறினேன். "இக்கதைக்கு புதுமுக நாயகன், நாயகி இருந்தால் நன்றாக இருக்கும்.. உங்களுக்கு தெரிந்த யாராவது இருந்தால் சொல்லுங்கள்" என்றேன்.

உடனே எஸ்.பி.பி " தெலுங்கில் பிரேம புஸ்தகம் என்ற படத்தில� �� நாயகனாக புதுமுகம் ஒரு பையன் நடித்து இருக்கிறான். அவனது முகம் அனைவரையும் வசீகரிக்கும் முகம். ஆனால் ஆள் ஒல்லியாக இருப்பான்.. வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள்" என்றார்.

உடனே நான் 'பிரேம புஸ்தகம்' படக்குழுவினை தொடர்பு கொண்டேன். அவர்கள் எனக்கு கூறிய செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் சென்னை மந்தவெளியில் இருக்கிறார் என்று கூறினார்கள்.

நான் உடனே சென� �று அவரைச் சந்தித்தேன், கதைக்கு பொருத்தமாக இருந்தார். உடனே ஒப்பந்தம் செய்தேன். அவர் தான் அஜீத் " என்று கூறினார்.

20 வருடங்கள் திரையுலகில் தொடர்ந்து முன்னணியில் இயங்கி வருவதே சாதனை தான். திரையுலகில் தன் பயணத்தைத் தொடரும் அஜீத்திற்கு வாழ்த்துகள்! வரும் வருடங்களில் பல்வேறு சாதனைகளை புரிய வாழ்த்துவோம்!
.





பசுபதிக்கு ஜோடியா...? பதறினாராம் நயன்தாரா! .







உள்ளூர்ல வேணும்னா ஏகாம்பரமா இருக்கலாம். ஆனால் அசலூரை பொறுத்தவரைபல ஹீரோக்கள் உளுத்துப் போன பம்பரம்தான்! இது புரியாத கன்னட மலையாள ஹீரோக்கள் தாறுமாறாக சம்பளம் கேட்பதாக மூக்கு சிந்திக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். 

சமீபத ்தில் மோகன் என்ற புதுமுக இயக்குனர் மம்முட்டியிடம் கதை சொல்லி தமிழில் நடிக்க கால்ஷீட் கேட்டார். ஒரு கோடி சம்பளம். கேரள வெளியீட்டு உரிமையை அடிஷனலாக தர வேண்டும் என்று சுத்தியலை தலையில் போடாத குறையாக விரட்டிவிட்டாராம் அவர்.

இவரை நம்பி நயன்தாராவிடம் கதை சொல்லி வைத்திருந்தாராம் மோகன். மம்முட்டி என்றால் யோசிக்கலாம் என்று நயன்தாராவும் நம்பிக்கை கொடுத்திருந்தார். � ��ம்முட்டியின் சம்பள மிரட்டலில் எல்லாம் கொலாப்ஸ் ஆகிவிட்டது.

மம்முட்டி இல்லாட்டா என்ன? பசுபதி இருக்காரே என்று அவரிடம் கதை சொல்லி கால்ஷீட்டும் வாங்கிவிட்டார் மோகன். மறுபடியும் நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டு போனவருக்கு முன் வழுக்கையில் ரெண்டு பல் பதியாத குறை. அலறி தீர்த்துவிட்டாராம் நயன்.

கதர் சட்டை மேல, கரிச்சட்டியை கவுக்கணும்னு நினைச்சா யாருக்குதான் அத� �ர்ச்சி வராது?
.





விருந்தில் நடந்த விஷயங்களை வெளியில் சொல்ல முடியுமா? - தமன்னா







சென்னை: சமீபத்தில் நடந்த தனுஷின் பிறந்த நாள் விழாவில் செம குஜாலாக ஆட்டம் போட்டவர் நடிகை தமன்னா.
தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் மட்டுமல்ல, தனுஷுக்கும் தமன்னாவுக்கும் கூட கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸெல்லாம் ஏகத்துக்கும் ஒர்க் அவுட் ஆனதால், இருவரு ம் தங்கள் நட்பை 'மெட்ராஸ் சிமெண்ட்' போடாத குறையாக இறுக்கமாக்கிக் கொண்டுள்ளார்களாம்.

அந்த உறவின் உரிமையில், ஐஸ்வர்யாவை விட ஒரு படி அதிகமாகப் போய் பார்ட்டியில் அன்பைப் பொழிந்தாராம் அம்மணி.
இருவரும் அடிக்கடி காதருகில் கிசுகிசுப்பாக தெலுங்கில்தான் மாட்லாடிக் கொண்டார்களாம்.
அப்படி என்னதான் பேசினீர்கள்... தனுஷ் அப்படியென்ன ஸ்பெஷல் என்று சிலர் கேட்டதற் கு தமன்னா கூறிய பதில் இது:
தனுஷ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ரொம்ப சுதந்திரமாக உணர்ந்தேன். மறக்கமுடியாத விருந்து அது.
'வேங்கை' படத்தில் இருந்து நானும் தனுஷும் நெருக்கமான நண்பர்கள் (அதைச் சொல்லணுமா!)
தனுஷ் அற்புதமான சிறந்த மனிதர். எந்த வேலையாக இருந்தாலும், அதை மீறி கலந்து கொள்வேன். அவர் பிறந்த நாளில் என்னால் பங்கேற்காமல் இருக்க முடியாது. இருவரும் நிறைய விஷயங்க� ��் பற்றி பேசினோம். ரொம்ப உணர்வுப் பூர்வமான நிகழ்வுகள் அவை. விருந்தில் நடந்த விஷயங்கள் பற்றி சொல்ல முடியுமா?," என்றார்.
பார்றா... உடம்பெல்லாம் மச்சம்ங்கிறது இதானா?!