Monday, September 17, 2012

முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் திரிஷா

முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் திரிஷா முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் திரிஷா
முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் திரிஷா

சென்னை, செப். 17-

திரிஷாவுக்கு முத்தக் காட்சிகளுடன் நிறைய இந்திப்பட வாய்ப்புகள் வருகின்றன. ஏற்கனவே 2010-ல் காட்டா மீட்டா இந்திப் படத்தில் அக்ஷய்குமார் ஜோடியாக நடித்தார். அப்படம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். தற்போது சமர், பூலோகம், என்றென்றும் புன்னகை என மூன்று தமிழ் படங்கள் கைவசம் உளள்ன.

இதற்கிடையில் இந்தி இயக்குனர்கள் சிலர் திரிஷாவை அணுகி தங்கள் படங்களில் நடிக்க அழைத்தனர். இம்ரான் ஹஸ்மி ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்க அழைத்தனர். அவற்றின் கதைகளை கேட்ட திரிஷா அதிர்ந்தார். எல்லா படங்களிலும் தனது கேரக்டரை மிக கவர்ச்சியாக உருவாக்கியிருந்தனர். முத்தக்காட்சிகளிலும் நடிக்க வேண்டும் என்றார்கள். அப்படங்களில் நடிக்க திரிஷா மறுத்து விட்டார்.

தெலுங்கு நடிகர் ராணாவும் திரிஷாவும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் கிசு கிசுக்கள் பரவி வருகின்றன. எனவே கவர்ச்சி வேடம் இல்லாத கதைகளை தேர்வு செய்கிறார். இயக்குனர்களிடம் முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்று உறுதிபட கூறி விடுகிறாராம்.

இந்த ஆண்டில் இதுவரை 104 படங்கள் ரிலீஸ்: வசூல் ஈட்டிய டாப் 10 படங்கள்

இந்த ஆண்டில் இதுவரை 104 படங்கள் ரிலீஸ்: வசூல் ஈட்டிய டாப் 10 படங்கள்

இந்த ஆண்டு தமிழில் கடந்த ஆகஸ்டு மாதம் வரை முகமூடியை சேர்த்து 100 படங்கள் வரை வந்தன. தொடர்ந்து இம்மாதம் மன்னாரு, சுந்தரபாண்டியன், பாகன், படங்கள் வந்துள்ளன. இதில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம் 150 நாட்களை தாண்டி ஓடி பெரும் தொகை லாபம் ஈட்டியுள்ளது.

தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளில் வந்த நான் ஈ படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 15 கோடிக்கு மேல் வசூல் பார்த்துள்ளது. தெலுங்கில் ரூ.75 கோடி ஈட்டியுள்ளது. இந்த படம் ரூ. 40 கோடி செலவில் எடுக்கப்பட்டது. வசூல் ரூ.100 கோடியை தாண்டும் என்கின்றனர்.

லிங்குசாமி இயக்கத்தில் வந்த வேட்டை படமும் லாபம் சம்பாதித்தது. இதில் ஆர்யா, மாதவன், அமலாபால், சமீரா ரெட்டி இணைந்து நடித்து இருந்தனர், இந்த படத்தை இந்தியிலும் ரீமேக் செய்திருந்தார்கள்.

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த நண்பன் படமும் வசூல் பார்த்தது. ஷங்கர் இயக்கியிருந்தார். ரூ. 1 கோடி செலவில் எடுத்த மெரீனா படம் ரூ. 3 கோடி லாபம் சம்பாதித்தது. அம்புலி 3டி படமும் ரூ. 4 கோடி வசூல் ஈட்டியது. இதனை ரூ. 2 கோடி செலவில் எடுத்து இருந்தனர்.

கலகலப்பு, காதலில் சொதப்புவது எப்படி, அட்டகத்தி படங்கள் நன்றாக ஓடின. வழக்கு எண் 18/9, கழுகு, உருமி, நான் படங்களும் பேசப்பட்டன. பில்லா 2, தோனி, 3, சகுனி, முகமூடி படங்கள் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டன. ஆனால் இவற்றில் சில படங்கள் வசூலில் திருப்தி அளிக்கவில்லை என்கின்றனர். பல படங்கள் நஷ்டத்தை சந்தித்து உள்ளன.

லண்டன் விழாவில் நடிகை ஹேமமாலினிக்கு சர்வதேச விருது

லண்டன் விழாவில் நடிகை ஹேமமாலினிக்கு சர்வதேச விருது லண்டன் விழாவில் நடிகை ஹேமமாலினிக்கு சர்வதேச விருது
லண்டன் விழாவில் நடிகை ஹேமமாலினிக்கு சர்வதேச விருது

லண்டன், செப். 17-

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 12-வது ஆசிய சாதனையாளர்கள் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், பாரதீய ஜனதா எம்.பி.யும் நடிகையுமான ஹேம மாலினிக்கு சர்வதேச ஆளுமை (பெர்சனாலிடி) விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சனிக்கிழமை இரவு அங்குள்ள கிராஸ்வெனார் ஹவுஸ் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில், இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த விருது கிடைத்தது பற்றி ஹேமமாலினி கூறியதாவது:-

இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் ஏசியன் வாய்ஸ் மற்றும் குஜராத் சமாச்சார் ஆகியோர் ஆவர். அரவிந்தர் சொசைட்டியின் கனவு திட்டங்களை சர்வாண் அறக்கட்டளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அந்த அறக்கட்டளையில் நானும் ஒரு அங்கத்தினர் என்ற வகையில் என்னை தேர்வு செய்துள்ளனர்.

இந்தியா மிகப்பெரிய தேசமாகும். குறிப்பிடத்தக்க வளர்ச்சியை நாடு பெற்றுள்ள போதும், ஒரு பக்கம் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களும் நிறையப்பேர் இருக்கின்றனர். வறுமை நிலையை ஒழிக்க, சர்வாண் அறக்கட்டளை பல்வேறு திட்டங்களின் கீழ், கிராமங்களில் ஏராளமான சக வசதிகளை செய்து கொடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆயுர்வேத சிகிச்சையின் முன்னோடியான ஷானாஸ் உசேனுக்கு சிறந்த பெண் மணிக்கான விருது கிடைத்தது.