Friday, September 21, 2012

இந்தியில் ஷாருக்கானுடன் இணையும் சத்யராஜ்

இந்தியில் ஷாருக்கானுடன் இணையும் சத்யராஜ் இந்தியில் ஷாருக்கானுடன் இணையும் சத்யராஜ்
இந்தியில் ஷாருக்கானுடன் இணையும் சத்யராஜ்

தென்னிந்தியாவில் பாலிவுட் யாருக்கும் இல்லாத மவுசு ஷாருக்கானுக்கு உண்டு. அவரும் தென்னிந்தியாவில் நடைபெறும் கதாபாத்திரமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். உதாரணத்திற்கு, அவர் நடித்த 'ரா ஓன்' படத்தில்கூட தென்னிந்திய இளைஞனாக வந்து கலக்கினார்.

அந்த வரிசையில், இவர் அடுத்து நடிக்கவிருக்கும் இந்தி படம் ஒன்றிற்கு 'சென்னை எக்ஸ்பிரஸ்' என்று பெயர் வைத்திருக்கிறார். மும்பையிலிருந்து ராமேசுவரம் நோக்கி செல்லும் ரெயிலில் பயணம் செய்யும் ஒரு பையனுக்கும், பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. அதன்பிறகு, அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு படம் தயாராகி வருகிறது.

இப்படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இவர் தற்போது தமிழில் ரஜினிகாந்த் உடன் 'கோச்சடையான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அதன்பிறகு, இப்படத்தில் நடிக்கிறார்.

மேலும், இப்படத்தில் நடிப்பதற்கு சத்யராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் தீபிகா படுகோனேக்கு தந்தையாக வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

விநாயகர் சதுர்த்தி விழாவில் திரிஷா, பிரியாமணி

விநாயகர் சதுர்த்தி விழாவில் திரிஷா, பிரியாமணி விநாயகர் சதுர்த்தி விழாவில் திரிஷா, பிரியாமணி
விநாயகர் சதுர்த்தி விழாவில் திரிஷா, பிரியாமணி

நடிகர், நடிகைகள் வீடுகளிலும், படப்பிடிப்பு தளங்களிலும் விநாயகர் சதுர்த்தியை இன்று கொண்டாடினர். விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டார்கள். இனிப்பு பண்டங்கள் செய்தும் சாப்பிட்டனர்.

பிரியாமணி கூறும்போது, எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் விநாயகர் அருள் நிறைய வேண்டும் என்றார். திரையுலகில் மேலும் வளரவேண்டும். தடைகள் விநாயகர் அருளால் அகல வேண்டும் என்றும் கூறினார்.

நடிகை திரிஷா கூறும் போது, விநாயகர் சதுர்த்தியில் எனது தாயும், பாட்டியும் வீட்டில் பூஜை செய்வார்கள். குடும்பத்தினருடன் கொண்டாடுவோம். என் பாட்டி கொழுக்கட்டை செய்வார். விசேஷ உணவுகளும் சமைப்பார்கள். விநாயகர் சதுர்த்தியில் சென்னையில் ஜீவாவுடன் 'என்றென்றும் புன்னகை' படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறேன் என்றார்.

ஹன்சிகா மோத்வானி கூறுகையில், விநாயகர் சதுர்த்தி எனக்கு பிடித்தமான பண்டிகை என்றார். ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியை சந்தோஷமாக எதிர்பார்ப்பேன். என் வாழ்க்கையில் வெற்றி கிட்ட விநாயகர் அருள் வேண்டுகிறேன் என்றார்.