அஜித் - விஷ்ணுவர்தன் படப்பிடிப்பு தொடங்கிய
நாள் முதல் பெருத்த
எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
படத்திற்கு தலைப்பு வைக்காமல் 'தல 53' என்ற
தலைப்பில் முழுப் படப்பிடிப்பையும்
நடத்தி முடித்து விட்டார்கள்.
'வலை', 'வில்லனுக்கு வில்லன்', 'பறவை' என
படத்தின் தலைப்பு இது தான் என செய்திகளும்
வரிசை கட்டின. தற்போது படத்தின்
தலைப்பை முறையாக
அறிவித்து இருக்கிறார்கள்.
படத்திற்கு 'ஆரம்பம்' என
தலைப்பிட்டு இருக்கிறார்கள். அஜித்துடன்
நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா என
ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்க,
விஷ்ணுவர்தன் இயக்கி இருக்கிறார்.
படத்தினை ஏ.எம்.ரத்னம் பிரம்மாண்டமாக
தயாரித்து இருக்கிறார்.
கடந்த வருடம் ஜூன் மாதம் இந்த படத்தின்
படப்பிடிப்பு தொடங்கியது. மும்பையிலும்,
துபாயிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. ஜுன்
மாதம் முழுப் படப்பிடிப்பும் முடிவுற்றது.
கதைக்கு பொருத்தமான
பெயரை தேர்ந்தெடுப்பதில் அஜீத், இயக்குனர்
விஷ்ணுவர்தன், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்
ஆகிய மூவரும் மும்முரமாக
ஈடுபட்டு வந்தார்கள்.
இணையத்திலும் படத்தின் தலைப்பு என்ன
என்பதில் அஜித்தின் ரசிகர்களும் ஆர்வம்
காட்டி வந்தார்கள். இப்படத்திற்கு ‘ஆரம்பம்’
என்று பெயர் சூட்டியிருப்பதாக
அறிவிப்பு வெளியானதும் TWITTER மற்றும்
FACEBOOK இணையங்களில் 'ஆரம்பம்'
ஆட்கொண்டது.
மும்பையில் நடந்த
ஒரு உண்மை சம்பவத்தினை அடிப்படையாக
கொண்டு இப்படம் தயாராகி இருக்கிறது.
இப்படத்தில் அஜித்
ஒரு புலனாய்வு அதிகாரியாக
நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் செப்டம்பர் திரைக்கு வர
இருக்கிறது.
Tamil news Tamil movies Tamil Cinema Tamil movie Kollywood Tamil cinema Tamil actors Tamil actress Tamil movie news tamil newsKollywood Tamil movie
Saturday, July 27, 2013
அஜித்தின் புதிய படம் 'ஆரம்பம்'
Thursday, July 25, 2013
Mother and Child (film) - Movie Tamil Review
நம்மை நன்குபுரிந்து கொண்டவர்கள், நம்மீதான அக்கறையில் சொல்லும்போது அதை உதாசீனப் படுத்திவிடுகிறோம். ஆனால் அந்நபர் மீண்டும் மீண்டும், அதை நோக்கி நம்மைச் செலுத்தும் போது, சரி அதையும்தான் பார்ப்போமே என நாம் முயலும்போது, நிதர்சனம் நாம் கற்பனை செய்து கொண்டிருந்ததற்கு நேர்மாறாகவே இருக்கிறது; பெரும்பாலும்.
போலவே, வாழ்க்கையில் நமக்கு நேர்ந்த கசப்பனுவங்களின் தொகுப்பாக ஒரு கண்ணாடி அணிந்து கொள்கிறோம். மீத வாழ்வை அதன் மூலமே பார்த்து மேலும் மேலும் நம்மை ரணமாக்கிக் கொள்கிறோம். உன்மையில் நமக்காக ஒன்று இன்னொருத்தருக்காக ஒன்று என்ற பேதம் ஏதுமில்லை. நடப்புக்களை அவரவர் பார்வையிலேயே புரிந்து கொள்கிறோம். நமது கண்ணாடியை நீக்கி விட்டு நோக்கும் போது உலகம் நமக்கு வேறு விதமாக நாம் நினைத்ததற்கு மாறாகத் தோன்றுகிறது. அணிந்திருக்கும் கண்ணாடியைக் கழட்டி வெற்றுக்கண்ணால் நம்மைக் காணச்செய்ய உற்ற துணை தேவைப்படுகிறது.
குறிப்பாகப் பெண்கள் இத்தகைய கண்ணாடி அணிவதோடு மட்டுமல்லாது தம்மைச் சுற்றி ஒரு மாயச்சுவர் எழுப்பிக் கொள்கிறார்கள். அதைத் தாண்டி உள்ளே எவரையும் அனுமதிப்பதில்லை. தங்களுடை முன்கூட்டிய மதிப்பீட்டின் வழியே பிறரையும், அது எவராகிலும், பார்க்கிறார்கள்.
கரன் அப்படியான ஒரு பெண்மணி, 14 வயதில் கர்ப்பம் தரித்து குழந்தையை அடாப்சனுக்குக் கொடுக்க நேரிடுகிறது. அதன்பிறகு அவரது வாழ்க்கை நோயுற்றிருக்கும் அம்மாவைப் பார்த்துக் கொள்வதிலேயே போய் விடுகிறது அவரது உலகில் அம்மாவைத் தவிர வேற்று மனிதர்களுக்கு இடமில்லை. வீட்டு வேலைக்காரியிடம்கூட, இவ்வகை முதிர்கன்னிகளுக்கேயான சிடு சிடு கடு கடு குணத்துடனேயே பழகுகிறார். குறிப்பாக வேலைக்காரியின் குழந்தையை அவருக்குப் பிடிப்பதில்லை.
அம்மாவும் இறந்துபோக தனிமரமாகிறார். கரனைக் குறித்து அவர் அம்மா, “கரன் பாவம் வேதனைப்படுகிறாள், அதற்கு நான்தான் காரணம்” என்று சொன்னதைச் சொல்கிறாள் வேலைக்காரி. உடனே கரன், “அதை அவர் என்னிடமல்லவா சொல்லி இருக்க வேண்டும்?” என்று வெடிக்கிறாள். அதற்கு வேலைக்காரி, “அவருக்கு உன்னைக் கண்டு பயம் கரன்” என்கிறாள். கரன் அதிர்ச்சியாகிறாள் பெற்ற அம்மாவே பயப்படும் அளவுக்கா நாம் நடந்து கொண்டோம் என.
கரன் வாழ்க்கையில் குறுக்கிடும் சக ஊழியர் பேக்கோ, கரனைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுகிறார். முதலில் கரன் மிகப் பிடிவாதமாக இருக்கிறார், தன் வட்டத்தவிட்டு வெளியே வர மறுக்கிறார்.
“I am a difficult person, I demand more from others, I know it is bad. But that’s how I am” எனத் தீர்மானமாகச் சொல்கிறார்.
தாயாரின் இறப்பும் தனிமையும் கரனைக் கொஞ்சம் கொஞ்சமாக பேக்கோ பக்கம் நகர்த்துகிறது. பழக்கம் வலுவாகி இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். கரனின் இறுக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்கிறது. கரனின் ஸ்டெப் மகள் கேட்கிறாள், “ஏன் இது வரை உங்கள் மகள் எங்கே இருக்கிறாள் எனத் தேட முயற்சிக்கவில்லை, Find her now... before time runs out. After that, only regret remains. And regret is a killer.” அடுத்த நாள் முதல், மகளைத் தேடும் முயற்சியில் இறங்குகிறாள்.
கொஞ்சம் கொஞ்சமாக மாறி வரும் கரன் தற்போது வேலைக்காரியுடன் நல்ல உறவை பேணுவதோடு மட்டுமல்லாது வேலைக்காரியின் குழந்தையைச் சொந்த பேத்தி போலவே கவனித்து விளையாடி மகிழகிறாள்.
கரனின் மகளான எலிசபெத் 37 வயதான அழகிய, தனித்துவம் மிக்க, சுயசார்பான, சுயமரியாதையைப் பேணுகிற, எதிலும் தீர்மானமான, முன்னுக்கு வரத் துடிக்கும் வக்கீல். அவள் நேர்முகத் தேர்வில் தன்னைப் பற்றிச் சொல்வதில் இருந்து அவளைப் பற்றிய தெளிவான பிம்பம் நமக்கு உருவாகிறது
I live alone. I've never been married, and l have no plans to marry. I value my independence above all things. , That way I don't have any expectations to fulfill... other than my own, which are great enough.
அவள் புதிதாகச் சேரும் நிறுவனத்தின் அதிபர் பால் உடன் அவளுக்கு உறவு உண்டாகி அதன் மூலம் கருவுண்டாகிறது. கருத்தரித்திருப்பது தெரிந்து தற்போதைய வேலையை விட்டுவிட்டு மிகச்சுமாரான ஒரு வேலையை வேறு நிறுவனத்தில் தேடிக் கொள்கிறாள்.
“A person inside a person” என்ற வினோதத் தாய்மை நிலை அவளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைக்கிறது. அவள் வசிக்கும் அபார்ட்மெண்டில் இருக்கும் பார்வையிழந்த சிறுமியும் தன் பங்கிற்கு எலிசபெத்தின் மனதை மாற்றி அவளது அம்மாவைத் தேடச் செய்கிறாள்.
லூசி, ஜோசப் தம்பதியினர், பேக்கரி நடத்துகிறவர்கள், குழந்தை அடாப்சனுக்கு முயற்சிக்கிறார்கள். லூசியால் குழந்தைக்குத் தாயாக முடியாது என்பதால் அடப்சனைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ரே, 21 வயதுக் கல்லூரி மாணவி கர்ப்பம் தரித்திருப்பவள் அடாப்சனுக்குச் சம்மதிக்கிறாள் சில நிபந்தனைகளோடு. லூசி தம்பதியினரைக் கேள்விகளால் குடைந்தெடுக்கும் ரே, ”உங்கள் பழக்க வழக்கங்கள், என் குழந்தை வளரப் போகும் சூழ்நிலை முதலியவற்றைப் பார்த்தபின்பே என் குழந்தையை உங்களுக்குத் தத்துக் குடுப்பதா இல்லையா “ என முடிவு செய்வேன் எனக் கறாராகச் சொல்கிறாள். எல்லாவற்றுக்கும் சம்மதித்து குழந்தை பிறக்கக் காத்திருக்கின்றனர்.
கரன், எலிசபெத்தைக் கண்டடைந்தாளா? எலிசபெத்தின் குழந்தை என்ன ஆகிறது(திரும்பவும் அடாப்சனா?), ரேயின் குழந்தை லூசி தம்பதிகளுக்குக் கிடைத்ததா என்பதெல்லாம் மீதிக் கதை.
ஆனால் கதையில் மையஓட்டமாக நான் கருதுவது Character Transformation என்பதைத்தான். ஆரம்பகாலக் கரனுக்கும் படத்தின் இறுதியில் இருக்கும் கரணுக்குமான குண வேறுபாடுகள். எலிசபெத்தின் கறார்தனம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து தாய்மை நிலையின் உன்னதத்தை உணர்வது. மிகமிகக் கறாரான மதிப்பீடுகளுடன் இருந்த ரேயின் மாறுதல் இவை எல்லாம் படத்தின் முக்கிய அம்சங்கள்.
தமிழிலும் இதே போன்ற முயற்சிதான் அர்ஸ் அன்புக்கரசுவாக மாறும் அன்பே சிவம். அதை மிக சப்டில் ஆகச் சொல்லி இருப்பார் கமல். நல்லதொரு முயற்சி என சுரேஷ் கண்ணன் சொல்வார்.
பாலின் மகள் எலிசபெத்தைப் பார்த்து ”Is that my father’s child you are carrying?” என வெகு இயல்பாகக் கேட்பதிலாகட்டும், பால் “if the child is mine, please come to me I will take care of both of you” எனச் சொல்வதிலாகட்டும். ரேயின் கறார்தனத்துக்கு எந்தவித எதிர்ப்புமின்றி ஜோசப்பும் லூசியும் பணிவதிலாகட்டும், கரனின் ஸ்டெப் மகள் அவளை மிக இயல்பாக ஏற்றுக் கொள்வதிலாகட்டும், படத்தில் மோசமானவர் என எவருமே இல்லை. ஆனாலும் சூழ்நிலை எப்படிப் புரட்டிப் போட்டு விளையாடுகிறது என்பதுதான் கதை.
மிக நல்ல படம். கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய ஒன்று.
வழக்கம் போலவே படுக்கையறைக் காட்சிகளும், உடலுறவுக் காட்சிகளும் உண்டு படத்தில். குடும்பத்துடன் பார்ப்பதைத் தவிர்க்கவும்.
Tuesday, July 23, 2013
மரியான் – விமர்சனம் - Mariyan Review
இயக்கம் – பரத் பாலா
இசை – ஏ.ஆர். ரகுமான்
ஒளிப்பதிவு – மார்க் கோனின்க்ஸ்
படத்தொகுப்பு – விவேக் ஹர்ஷன்
பாடல்கள் – வாலி, ஏ.ஆர். ரகுமான், தனுஷ், கபிலன், குட்டி ரேவதி, பிளாஸி, பிரையன் கப்வே, சோஃபியா அஷ்ரப், மோகன் ராஜ்.
திரைக்கதை – பரத் பாலா, ஸ்ரீராம் ரஞ்சன்
வசனம் – ஜோ டி க்ரூஸ்
சண்டைப் பயிற்சி – திலீப்குமார் சுப்பராயன், ஆக்ஷன் பிரகாஷ்
நடனம் – பிருந்தா, நோபுள், காயத்ரி ரகுராம், ராதிகா பழனியப்பன்
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா
நடிப்பு – தனுஷ், பார்வதி, அப்புக்குட்டி, ஜெகன் புருஷோத்தம், சலீம் குமார், விநாயகன் டிகே, டி. இம்மானுவேல், உமா ரியாஸ்கான், அங்குர் விகால் , அறிமுகம் – கிறிஸ்டோபர் மின்னி, டக்பே ட்வே, பார்ரி மைது மற்றும் பலர்.
வெளியான தேதி – 19 ஜுலை 2013
Saturday, July 20, 2013
சிமபு லவ் ஹன்சிகா simbu love hanshika
நானும் சிம்புவும் லவ்
பண்றது உண்மைதான் : அட..,
சொல்றது ஹன்ஷிகாவே தான்…?!
இருக்கு, ஆனா இல்ல…
என்று சொல்லாமல் இல்ல,
இது கன்பார்ம் தான்
என்று ஓப்பனாக சொல்லிவிட்டார்
ஹன்ஷிகா மோத்வானி.
முந்தாநாள் வரைக்கும் நானும்
சிம்புவும் நல்ல ப்ரெண்ட்ஸ்..,
எங்களுக்குள் காதலும் இல்லை,
கத்தரிக்காயும் இல்ல…
என்று ஆந்திரா, தமிழ்நாடு என
இரண்டு ஏரியாக்களிலும்
மீடியாக்களிடம்
மேடை கட்டி முழங்கிய
ஹன்ஷிகா தற்போது ட்விட்டரில்
தன் காதல் ரகசியத்தின்
உண்மையை போட்டு உடைத்திருக்க
ிறார்.
இதுகூறித்து ஹன்சிகா தனது ட்வி
ட்டர் அக்கவுண்ட்டில்
கூறியிருப்பதாவது :
“எனது வாழ்க்கை குறித்து பல்வேற
ு வதந்திகள் வெளிவந்த வண்ணம்
உள்ளன. இப்போது சொல்கிறேன்.
நான்
சிம்புவை பார்ப்பது உண்மைதான்.
ஆனால் எனது சொந்த
வாழ்க்கை குறித்து இப்போதைக்கு
எதுவும் கூற முடியாது”
என்று தெரிவித்து இருக்கிறார்.
பதிலுக்கு சிம்புவும்
தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் :
“மீடியாக்கள் எனது சொந்த
வாழ்க்கை குறித்து தவறான
தகவல்கள் வெளியிடுவதை நிறுத்த
வேண்டும். நான் ஹன்சிகாவுடன்
பழகிக் கொண்டு தான் இருக்கிறேன்.
இப்போது கூட அவருடன் தான்
நான் இருக்கிறேன், ஹன்சிகா நல்ல
பொண்ணு. என் கல்யாணம்
குறித்து எனது குடும்பம் தான்
முடிவு செய்ய வேண்டும்.”
என்று தெரிவித்திருக்கிறார்.
ஒரு விஷயத்துல பலபேர்
குழப்புவாங்க, ஆனா நீங்க
ரெண்டு பேரும் இந்த விஷயத்துல
ரொம்ப தெளிவாத்தான் இருக்கீங்க…
போலிருக்கு!
Tuesday, July 16, 2013
சிங்கம் – 2 சக்சஸ் பார்ட்டி விடிய விடிய ஆர்யாவுடன் ஆட்டம் போட்ட அனுஷ்கா
சிங்கம் – 2 சக்சஸ் பார்ட்டி விடிய விடிய ஆர்யாவுடன் ஆட்டம் போட்ட அனுஷ்கா!
இந்தமுறை ஹிட் படம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட சூர்யாவுக்கு சமீபத்தில் ரிலீஸான ‘சிங்கம்-2 படத்தின் மெகா ஹிட் அவரை ரொம்பவே சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்த சந்தோஷத்தை கொண்டாடும் வகையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஒரு பெரிய பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார் சூர்யா. சென்னையில் உள்ள ஒரு ஃபைவ்ஸ்டார் ஹோட்டலில் மிகவும் ரகசியமாக நடந்த இந்த பார்ட்டியில் பிரபல புரொடியூசர்கள், டைரக்டர்கள், நடிகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ்ஜெயராஜ், தனுஷ், பிரபு, ஜெயம்ரவி, ஆர்யா, ஜீவா, கெளதம்மேனன், லிங்குசாமி, ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய பிரபலங்களும் கூட இந்த பார்ட்டியில் கலந்து கொண்டார்களாம்.
வெள்ளிக்கிழமை இரவு 7 மணி வாக்கில் தொடங்கிய சிங்கம் -2 பார்ட்டி, சனிக்கிழமை காலை விடியும் வரை நீண்டதாம்.
படத்தின் பப்ளிசிட்டிக்கு கூட கலந்து கொள்ள நேரம் இல்லாத அனுஷ்கா இந்த பார்ட்டியில் கலந்து கொள்வதற்காகவே ஹைதராபாத்தில் இருந்து ஸ்பெஷலாக பறந்து வந்தாராம்.
வந்தவர் வந்த வேகத்திலேயே பார்ட்டியில் தள்ளாட ஆரம்பித்து விட்டாராம். பார்ட்டி ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை அனுஷ்காவுக்கு கம்பெனி கொடுத்தவர் நடிகர் ஆர்யா தானாம். ஆர்யாவுடன் சேர்ந்து செமத்தியான பட்டையைக் கிளப்பும் ஆட்டம் போட்ட அனுஷ்கா விடியும் வரை ஆர்யாவின் கையை விடவே இல்லையாம்.
குதிரை போல இருக்கும் அனுஷ்காவின் ஆட்டத்தை பார்த்து பார்ட்டிக்கு வந்திருந்த எல்லோருமே அசந்து விட்டார்களாம். என்பது தான் சிங்கம் -2 பார்ட்டியின் ஹைலைட்.
தல-தளபதி யில் யாரை பிடிக்கும்? சூர்யா அசத்தல் பதில்
இதில் அனுஷ்காவும் ஹன்சிகாவும் இணைந்து நடித்துள்ளனர். சிங்கம் கதையின் தொடர்ச்சியே 'சிங்கம் 2 படத்தின் கதை. சிங்கம் மற்றும் அதன் தொடர்ச்சியாக வந்த சிங்கம் 2 திரைப்படமும் நல்ல வரவேற்ப்பு பெற்றிருப்பதால் சிங்கம் 3 உருவாகுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் முன்னணி டிவி சேனல் ஒன்று, மாணவிகளிடம் சூர்யா கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. MOP வைஷ்ணவா கல்லூரியில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சூர்யாவுடன் ஹரியும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு தனக்கே உரிய பாணியில் சூர்யா பதிலளித்தார்.
Monday, July 15, 2013
விஜய்யை புகழ்ந்த தலைவா படத்தயாரிப்பாளர்!
விஜய், அமலாபால் ஜோடியாக நடித்துள்ள ‘தலைவா' படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். சத்தியராஜ், சந்தானம், ராகிணி, உதயா, அபிமன்யுசிங், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ், மனோபாலா, சுப்பு, பஞ்சு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன. அடுத்த மாதம் 9-ம் தேதி ‘தலைவா' படம் ரிலீசாகும் என்று தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் தெரிவித்தார். அவர் கூறுகையில், "தலைவா' படம் சிறப்பாக வந்துள்ளது. காதல், காமெடி, அதிரடி ஆக்ஷன் என மெகா பொழுதுபோக்குப் படமாக தலைவா இருக்கும்.
மும்பையில் அதிக செலவில் அரங்குகள் அமைத்து 90 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் முப்பது நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. சண்டை காட்சிகள் பிரமாதமாக வந்துள்ளன. விஜய் சினிமாத்தனம் இல்லாதவர். அவர் தயாரிப்பாளர்களின் நடிகர். சிட்னியில் நிறைய பேரை நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து சூட்டிங் நடத்தாமல் பணத்தை விரயம் செய்ததற்காக வருத்தப்பட்டார்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி ‘தலைவா' படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளோம்," என்றார்.



