Thursday, February 7, 2013

ஷெர்லின் சோப்ராவின் ‘காமசூத்ரா 3டி’ படத்தில் நாசர்?

வ்வப்போது கவர்ச்சி ஸ்டில்களை இணையதளங்களில் ரிலீஸ் செய்து இளவட்ட பசங்களை சூடேற்றி வரும் ஷெர்லின் சோப்ரா ஹீரோயினாக நடித்து வரும் ‘காமசூத்ரா 3டி’ என்ற படத்தில் பிரபல தமிழ்நடிகர் நாசரும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கப்போகிறாராம்.
இந்தப்படத்தின் முதற்கட்ட போட்டோசெஷன் ஸ்டில்களே சக்கைப்போடு போட்டு வருகிறது. மேலும் இந்தப் படத்தில் தனது அதிபட்ச கவர்ச்சியை படத்தில் அள்ளித் தெளித்து வருகிறாராம் ஷெர்லின் சோப்ரா.
அதுமட்டுமில்லாமல் இந்தப்படத்தில் வரும் ஷெர்லின் சோப்ராவின் டாப்லெஸ் காட்சிகள் கூட இணையதளங்களில் பரபரப்பை உண்டு பண்ணி வருகின்றன.
ரூபேஷ் பால் டைரக்ட் செய்து வரும் இந்தப்படத்தில் தமிழ்சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகராக வலம்வரும் நடிகர் நாசர் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
படத்தில் ராஜபுதன அரசராக நாசர் நடிக்கப்போவதாகவும், படத்தின் கதைப்படி இவர் ஷெர்லின் சோப்ராவின் அப்பாவாகவும் வருகிறாராம்.
வாத்ஸாயன‌னின் காமசூத்ராவை தழுவி எடுக்கப்படும் இந்தப்படம் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.