தமிழில் சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜெனிலியா. இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஜெனிலியாவும், இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கும் 9 வருடங்களாக காதலித்து வந்தனர். ரிதேஷ்தேஷ்முக் மகராஷ்டிர முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ஆவார். இவர்கள் காதலுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தது. ஆனாலும் காதலில் உறுதியாக இருந்ததால் சமீபத்தில் இருவர் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து ஜெனிலியா ரிதேஷ்முக் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது. வட இந்திய பாணியில் மெஹந்தி, சங்கீத் நிகழ்ச்சிகளும் இரு தினங்களாக நடந்தன. இன்று காலை மும்பையில் திருமணம் நடந்தது. திருமணத்துக்காக ஆடை அலங்கார நிபுணர்களை வைத்து பிரத்யேக ஆடைகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன. நடிகர், நடிகைகள், அரசியல் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Tamil news Tamil movies Tamil Cinema Tamil movie Kollywood Tamil cinema Tamil actors Tamil actress Tamil movie news tamil newsKollywood Tamil movie
No comments:
Post a Comment