Wednesday, February 15, 2012

அரவான் படத்தில் இயக்குனர் லிங்குசாமியும் இணைவு

 


வசந்தபாலன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அரவான் படத்தில், இணை தயாரிப்பாளராக லிங்குசாமியும் சேர்ந்திருக்கிறார். அங்காடித்தெரு படத்திற்கு பிறகு டைரக்டர் வசந்தபாலன் இயக்கத்தில், ஆதி, பசுபதி, தன்ஷிகா, பரத், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் அரவான். 18ம் நூற்றாண்டை மையப்படுத்தி, காவல்கோட்டம் என்ற நாவலின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இப்படத்தை, மிகப்பெரும் பொருட்செலவில் அம்மா கிரியேசன்ஸ் சிவா தயாரித்து இருக்கிறார். பிரபல பாடகர் கார்த்திக், இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படம் வருகிற மார்ச் மாதம் 2ம் தேதி முதல் உலகமெங்கும் ரிலீசாக இருக்கிறது.

இந்நிலையில், சமீபத்தில் திரையுலக நட்சத்திரங்கள், வி.ஐ.பி.க்கள் உள்ளிட்ட பலருக்கு இப்படம் பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. பலரும் படத்தை பார்த்துவிட்டு வசந்தபா‌லனை வெகுவாக பாராட்டியுள்ளனர். அதிலும் டைரக்டர் லிங்குசாமி ஒருபடி மேலே போய் இந்தபடத்தில், தன்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்று கருதி, படத்தின் இணை தயாரிப்பாளராக இருக்க வேண்டும் என்று அம்மா கிரியேசன்ஸ் சிவாவிடம் விருப்பம் தெரிவித்து இருக்கிறார். அவரும் ஓ.கே. சொல்ல இப்போது அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இனி அரவான் பட சம்பந்தப்பட்ட பேனரில் அம்மா கிரியேசன்ஸ் தயாரிப்புடன், இணை தயாரிப்பாக லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பேனரும் இடம்பெற்று இருக்கும்.

No comments:

Post a Comment