வாழ்த்துக்கள். {கணவன் - மனைவி உட்பட}
இன்று மட்டும்தானா காதலர்களுக்கு அர்ப்பணம்.எல்லா நாட்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டதுதானே.
இது போன்ற நாட்கள் ஒதுக்கலும் ,குறிப்பிட்ட நாளை கொண்டாட வைப்பதும் கார்ப்ரேட் நிறுவனங்களின் கண்டு பிடிப்புதான்.
அன்னையர் தினம்,நண்பர்கள் தினம் என புதிது புதிதாகக் கண்டு பிடித்தது தங்களின் அலங்கார,பரிசுப் பொருட்கள் விற்பனையை பெருக்கத்தான்.
அதற்கென பரிசுப்பொருட்கள்,வாழ்த்துக்கள் என தாயரித்து தள்ளிவிடும் தன்மைதானே அவர்களின் நோக்கம்.
காதலர்களுக்கு என ஒருதினம் ஒதுக்கலும் அவர்களின் சிறந்த வணிகப்புத்திதான்.
அன்று ஒருநாள் மட்டும் தான் காதலா?
அன்பு செலுத்த நாள் பார்ப்பது முறையா?
தோல்வியுற்ற லைலா-மஜ்னு,அம்பிகாவதி-அமராவதி,ரோமியோ-ஜூலியட் போன்ற இணிகளை மட்டும் காதல் சின்னமாக்குவது முறையா?
காதலில் வென்று வாழ்வை நடத்தியவர்களைத்தானே காடலின் சின்னமாக,உதாரணமாகக் காட்ட வேண்டும்.
அம்பிகாவதி- அமராவதி காதல் வெற்றியடந்தால் அதன் பின் நாட்டை விட்டு வாழ்வை வேறு நாடு சென்று துவக்கினால் என்ன துன்பங்களை அவர்கள் அடைந்திருப்பார்கள்.அத்துயரங்கலுக்குப்பின்னரும் அவர்கள் மனதில் காதலுக்கு இடம் இருந்திருக்குமா?
மையலும் குடி கொண்டிருக்குமா?
எதார்த்த உலகை அவர்களின் காவியக்காதல் எதிர் கொண்டு பிழைத்திருக்குமா? அல்லது அமராவதி விலக்கு கேட்டு தனது மன்னராகிய தந்தையை அடைந்திருப்பாளா?
இங்கு தோற்றுப்போன காதல்கள் தான்சோகக் காவியங்களாகி இருக்கின்றன.
வெற்றியடைந்து இணைந்த காதல்கள் சோகவாழ்வாகியே மடிந்துள்ளன.
ஒன்றிரண்டு தப்பிமகிழ்ந்திருக்கலாம்.
அன்னையை நேசி,தந்தையை நேசி.
மகனை நேசி,மகளை நேசி.
முதலில் மனைவியை நேசி.
நேசிப்பதின் மறு வாழ்வுதானே காதலாகிப்போகிறது.
காதல் என்பது மனிதன் பாசத்தின் வெளிப்பாடு.
அதற்குத்தான் காதல் என்ற பெயர்.
ஆதலினால் காதல் செய்வீர் .
இன்று ஒரு நாள் மட்டுமா காதலர் தினம்.
0 comments:
Post a Comment