படம் வெளியாகி 10 நாட்கள் ஆன பிறகு தான் எந்த படத்தையும் பார்ப்பேன் . நிறைய சினிமா வலைப்பதிவாளர்களை பார்த்து ஏன் இவ்வளவு சினிமா பைத்தியமா(Cinema mad) உள ்ளார்கள் என்று கூட நினைப்பதும் உண்டு.
நேற்று தான் வழக்கு எண் 18/9 படம் பார்த்தேன். நிறைய பேரால் ஏற்றுக் கொள்ளபட்டு பாராட்டும் படம் என பல விமர்சனங்களை கண்டு விட்டுதான் போனேன். இது படம் அல்ல.. யாதர்த்த சமூகத்திற்கான ஒரு அ� �ுமையான பாடம்.. என பிரமிக்க வைத்து விட்டது. இந்த படத்தை பற்றி நிச்சயம் ஏதாவது என் கருத்துகளை எழுத வேண்டும் இல்லை வலைப்பதிவு எழுதுவது வேஸ்ட் என்று தியேட்டரை விட்டு வெளியே வரும்போது
எண்ணிக்கொண்டு வந்தேன்.
படத்தில் நடிக்கும் கேரக்டர்களை தேர்வு செய்ததிலேயே டைரக்டர் பாலாஜி சக்திவேல் வெற்றி பெற்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
படத்தில் மொத்தமாக பார்த� �தால் 6 அல்லது 7 கேரக்டர்களை வைத்து அனைத்து ரசிகனையும் இரண்டரை மணிநேரம் எந்த முனகலும் இல்லாமல் படம் பார்க்க வைத்தது மிகப் பெரிய வெற்றி. கீழ்தட்டு மக்களின் உண்மையான வாழ்வை தன் கண் முன்னே நிறுத்துகிறது சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள மேல்தட்டு மக்களுக்கு கிராமத்தில் மண் அள்ளும் செங்கல் செய்யும் தொழிலாளர்கள் பலர் தங்கள் வாழ்வை கந்துவட்டிக்கு
தங்களது முழு வாழ� ��வையே அடகு வைக்கிறார்கள என்பது சினிமாவில் பார்த்தாவது தெரிந்து கொள்வார்கள். சமூகத்தின் பணம் உள்ளவர்களுக்கு உள்ள சட்டமும் இல்லாதவனுக்கு உள்ள சட்டமும் மாறுபட்டவை தான் என ஒட்டு மொத்த மக்களின் வேதனையையும் பிரதிபலிக்கிறது இந்த படம்.
கூத்து கலைஞனாக(Dance artist) வரும் அந்த சிறு பையனின் நடிப்பு பிரமிப்பாக உள்ளது. இந்த சிறு பையனுக்கு வாழ்வு அளித்த டைரக்டர் பாலாஜி சக்த� ��வேல் அவர்களுக்கு மிக்க நன்றி!
பணம் இல்லாதவன் இந்த சமூகத்தில் ஊமையாகி போகின்றான் என்ற யாதர்த்தை வேலைக்காரியாக வரும் பெண் கேரக்டர்(Heroine) உணர்த்துகிறது. வட நாட்டிற்கு சிறுவர்களை விற்கும் கும்பல் கொத்தடிமைகள் என தினசரி நாளிதழ்களில் நாம் படிக்கும் ஒருவரி செய்தியாக இருக்கும் ஒவ்வொருவரின் பின்னாலும் வேலுவைப் போல் பல துன்பங்களை கடந்து வருகிறார்கள் என்பது யாரும் � �ண்டுகொள்ளாத செய்திதான். மயங்கி கிடக்கும் பையனை வேடிக்கையாலும் விமர்சனங்களாலும் மட்டுமே நடுத்தர, மேல்தர மக்களால் பார்க்க முடியும். கீழ்தட்டு மக்கள்தான் இவர்களுக்கான ஆதரவு என்பதை படம் பிடித்து காட்டுவது யதார்த்தம்.
பிளாட்பார மக்களும் மனிதர்களே என அவர்களிம் ஒரு பரிதாபத்தையாவது கொண்டு வந்துள்ளது இந்த படம். வேலு கேரக்டர் உண்மையாக அவன் வாழ்வில் நடத்தற்போல் ஒரு நடிப்பு. பள்ளிகூடம் செல்லும் மாணவனுக்கு பணம், செல்போன் போன்றவைகள் எங்கே கொண்டு செல்லும் என்று கூறியிருப்பது சரியான சவுக்கடி. இதை எந்த மேல்தட்டு மக்களும் கவனிக்க போவதில்லை. இதுதான் நடப்பு யதார்த்தம்.
போலீஸ்கரரி ன் நடிப்பு அருமை விசாரிப்பதிலும், கண்டுபிடிப்பதிலும் தமிழ்நாட்டு போலீஸ்காரர்கள்(Tamilnadu Police) சரியாக தான் இருப்பார்கள் அதற்கு அப்புறம் தான் பேரம் நடைபெறுகிறது. என்று யாதர்த்தை தைரியமாக சொல்லி இருப்பது பாரட்டுக்குரியவை. கிளைமாக்ஸ் சினிமாத்தனம் தான்.
வேலுவை போல எத்தனையே குற்றம் செய்யாத அப்பாவிகள் பல வழக்குளில் மேல்தட்டு மக்களை காப்பாற்றுகிறார்கள் என்பது அனைவரு� �் அறிந்தது. இல்லாதவனை எவன் கேட்கப்போகிறான். படம் முடிந்து அனைவரும் எழுந்து மனதிற்குள் கைதட்டியதை உணர முடிந்தது. கடைசியாக அந்த முகத்தை காட்டும் கதாநாயகி சமூகத்தை குறிக்கிறது. ஒருமுகம் அழகாகவும் மற்றொரு முகம் கொடுமையாகவும் உள்ள சமூகம்
அனைவரும் பார்க்க வேண்டிய நம் சமூகத்தின் காவியம்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.