8:12 AM
0






முகமூடி இசை வெளியீட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஜய் தனது மகன் சஞ்சய் ஜீவாவின் தீவிர ரசிகன் என்று தெரிவித்தார்.

ஜீவா, பூஜா ஹெக்டே, நாசர், செல்வா, கிரீஷ் கர்னாட் நடிக்க, மிஷ்கின் இயக்கியுள்ள படம் முகமூடி. அந்த படத்தின் இ� �ை வெளியீட்டு விழா கடந்த 20ம் தேதி சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் நடந்தது. விழாவில் விஜய் மற்றும் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இசை சிடியை விஜய் வெளியிட புனித் ராஜ்குமார் பெற்றுக் கொண்டார்.


இந்த விழா நடந்த அரங்கிற்குள் விஜய் நுழைந்தது முதல் மேடையில் அமரும் வரை அவரது ரசிகர்கள் விசில் அடித்தும், கை தட ்டியும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அது ஜீவா நடித்துள்ள படத்தின் இசை வெளியீடு என்பதை அனைவரும் மறந்துவிட்டனர். மேடையில் பேசியவர்கள் கூட ஜீவாவை மறந்துவிட்டு விஜய் பற்றியே பேசினர். உடனே சுதாரி்த்துக் கொண்ட விஜய் பேச வந்தார்.

அப்போது அவர் கூறுகையில், என் மகன் சஞ்சய் ஜீவாவின் தீவிர ரசிகன். எனக்கு ஜீவாவை ஒரு மனிதனாகவும், நடிகராகவும் மிகவும் பிடிக்கும். என் மகனைப் ப� ��ன்று நானும் முகமூடி படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்றார்.

விழாவில் கலந்து கொண்டவர்கள் விஜயைப் புகழ்ந்து பேசினாலும் விழா நாயகன் ஜீவா சிரித்த முகத்தோடு அமைதியாக உட்கார்ந்திருந்தார்.





0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

POPULAR POSTS