9:42 AM
0

நயன்தாராவுடன் காதல் முறிவு ஏற்பட்டது ஏன் என்பதற்கு முதல்முறையாக பதில் அளித்தார் பிரபு தேவா. பிரபு தேவா, நயன் தாரா காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். இதனால் பிரபு தேவா, அவரது மனைவி ரமலத் வழக்கு தொடர்ந்து விவாகரத்து பெற்றனர். இதையடுத்து நயன்தாராவை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டார் பிரபுதேவா. இதற்� ��ாக படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட நயன்தாரா, கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினார். இருவரும் ஜோடியாக கோயில்களுக்கு சென்று வழிபட்டனர். இந்நிலையில் பிரபுதேவா போக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டது.மனைவியை பிரிந்த பின் தனது குழந்தைகளிடம் மேலும் அதிகம் பாசம் காட்டத் தொடங்கினார். அவர்களை அவ்வப்போது வெளிநாடுக்கு அழைத்துச் செல்வது, அவர்களுடன் பொழுதை கழ� �ப்பது என்று நல்ல அப்பாவாக இருந்தார். பிரபுதேவாவின் இந்த மாற்றம் நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் திருமண தேதியை விரைவில் முடிவு செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினாராம். நயன்தாராவின் வற்புறுத்தலுக்கு பதில் சொல்லாமல் பிரபுதேவா காலம் கடத்தினார். இதனால் மனஸ்தாபம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் காதலை முறித்துக்கொள்ள முடிவு செய்தனர். இதை உறுதி� �்படுத்தும் வகையில் நயன்தாரா மீண்டும் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார்.அதேநேரம் காதல் முறிவு பற்றி மவுனம் காத்து வந்தார் பிரபு தேவா. சமீபத்தில் ஐதராபாத்தில் ஒரு விழாவில் பங்கேற்க சென்ற அவரிடம் நிருபர்கள் சூழ்ந்துகொண்டு நயன்தாராவுடனான காதல் முறிவு பற்றி கேட்டனர். இதற்கு சில நொடிகள் அமைதியாக இருந¢துவிட்டு பதில் அளித்த பிரபுதேவா, எனக்கு என் குழந்தைகளின் எதிர்கா லம் முக்கியம். அவர்களுக்காக எதையும் இழப்பேன் என்றார். நயன்தாராவுடன் காதல் முறிவு பற்றி இதுவரை மவுனம் காத்து வந்த பிரபுதேவா முதன்முறையாக அதற்கு பதில் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

POPULAR POSTS