10:35 PM
0


நடிகை ஐஸ்வர்யாராய் மீண்டும் கர்ப்பம்? நடிகை ஐஸ்வர்யாராய் மீண்டும் கர்ப்பம்?

முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன் மகன் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி பல வருடங்களுக்கு பிறகு கர்ப்பமாகி கடந்த ஆண்டு இறுதியில் பெண் குழந்தை பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு ஆரத்யா என்று பெயர் சூட்டினார்.

குழந்தை பிறந்ததும் ஐஸ்வர்யா ராய் குண்டாகி விட்டார். இதனால் பிரசவத்திற்கு பிறகு அவர் வெளியே தலை காட்டவில்லை. அதன்பிறகு கேன்ஸ் படவிழாவில் முதல் முறையாக பங்கேற்றார். எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான ஐ.நா. சபையின் நல்லெண்ண தூதுவராக அறிவிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஐ.நா. சபை கூட்டத்தில் சொற்பொழிவாற்றினார்.

அமெரிக்காவில் நடிகை ஐஸ்வர்யாராய் தனது மகள் ஆரத்யாவுடன் முதல் முறையாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது அவரது உடலில் கர்ப்பிணிக்குரிய மாறுதல்கள் தென்படுவதாக கூறப்படுகிறது.

முதல் குழந்தை ஆரத்யா பிறந்து 10 மாதங்களே ஆகும் நிலையில் 2-வது பிரசவத்துக்கு ஐஸ்வர்யாராய் திட்டமிட்டிருக்கமாட்டார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கருதுகின்றன. எனினும் கடந்த ஜூலை மாதம் அவர் கருத்தரித்ததாகவும், வரும் ஏப்ரல் மாதம் 2-வது குழந்தை பிறக்கும் என்றும் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

POPULAR POSTS