12:19 AM
0

எங்கள் நாட்டு தீவுகளை ஜப்பான் திருடிவிட்டது: ஐ.நா. சபையில் சீனா புகார் எங்கள் நாட்டு தீவுகளை ஜப்பான் திருடிவிட்டது: ஐ.நா. சபையில் சீனா புகார்

நியூயார்க், செப்29-

சீனா, ஜப்பான் இடையே தீவு கூட்டம் ஒன்று உள்ளது. இவற்றில் சில தீவுகளுக்கு இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வந்தன. சமீபகாலமாக தீவு பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ளது. இந்த தீவுகள் ஜப்பானை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமாக இருந்தன.

அவரிடம் இருந்து தீவுகளை சமீபத்தில் ஜப்பான் அரசு விலைக்கு வாங்கி அரசுக்கு சொந்தமாக்கி கொண்டது. இதனால் மோதல் போக்கு மேலும் அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் நியூயார்க்கில் ஐ.நா பொதுச்சபை கூட்டம் நடந்தது. அதில் சீனா வெளியுறவு மந்திரி யாங்ஜிங்ச்சே ஜப்பானை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் கூறியதாவது:-

ஜப்பான் உரிமை கொண்டாடும் தீவுகள் உண்மையிலேயே எங்களுக்கு சொந்தமானவை. ஆனால் இந்த விஷயத்தில் ஜப்பான் அத்து மீறி நடந்து வருகிறது. அதன் நடவடிக்கைகள் மூலம் எங்கள் தீவை திருடி கொண்டுள்ளது. இதை நாங்கள் சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. நாங்களும் பதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

POPULAR POSTS