2:45 AM
0


ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடிகர் சூர்யாவை நடிக்க வைத்தது எப்படி?: இயக்குனர் கே.வி.ஆனந்த் ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடிகர் சூர்யாவை நடிக்க வைத்தது எப்படி?: இயக்குனர் கே.வி.ஆனந்த்

'மாற்றான்' படத்தில் சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையராக நடித்துள்ளார். வருகிற 12-ந்தேதி இப்படம் ரிலீசாகிறது. இதில் சூர்யாவை நடிக்க வைத்த அனுபவங்கள் பற்றி படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறியதாவது:-

'மாற்றான்' படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையராக சூர்யா கஷ்டப்பட்டு நடித்தார். ஒரு டேக்கில் திருப்தியடையாமல் திரும்ப திரும்ப நடித்தார். டாக்டர்களிடம் ஆலோசனை பெற்று வெளிநாட்டில் இருந்து சிலிக்கான் பொருட்களை வரவழைத்து இரட்டையர்களாக ஒட்ட வைத்தோம்.

சிலிக்கான் செலவு ரூ. 25 லட்சம். ஒரு கட்டத்தில் அது கிழிந்தது. பிறகு சரி செய்தோம். இரு கேரக்டர்களும் வெவ்வேறு குணாதிசயங்களில் காதல், காமெடி, ஆக்ஷன், திரில்லர் இருக்கும். ஒட்டி இருந்து இருவரும் சண்டையிடும் காட்சியொன்று 25 நாட்கள் படமாக்கப்பட்டது.

சென்னை, ஐதராபாத் ஸ்டூடியோக்களில் நிறைய அரங்குகள் அமைத்து காட்சிகள் எடுத்தோம். சமூக பிரச்சினையொன்றும் படத்தில் உள்ளது. காஜல் அகர்வால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

சச்சின் கடேகர், தாரா, ரவிபிரகாஷ் போன்றோரும் உள்ளனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. சவுந்தரராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஜி.எஸ். பட நிறுவனம் பெரும் செலவில் படத்தை எடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

POPULAR POSTS