5:20 AM
0
வயதான ஹீரோக்களுடன் நடிக்க மறுப்பா?: காஜல் அகர்வால்
மாற்றான், துப்பாக்கி என பெரிய பட்ஜெட் படங்களில் நடித்துள்ளார் காஜல்அகர்வால். மாற்றான் இன்று ரிலீசானது. வயதான ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் மறுப்பதாக செய்தி வெளியானது.

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க அழைப்பு வந்ததாகவும் அவர் வயதானவர் என்பதால் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது. இதற்கு பதில் அளித்து காஜல்அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-

என்னை பற்றி கிசுகிசுக்கள் பரப்பப்படுகின்றன. ஆரம்பத்தில் வருத்தமாக இருந்தது. இப்போது பக்குவப்பட்டு விட்டேன். கவலைப்படுவது இல்லை. அவற்றுக்கு பதில் சொல்ல நினைத்தால் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று உணர்ந்து கொண்டேன்.

சினிமாவில் கிசுகிசுக்கள் வருவது சகஜம். வயதான ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்க நான் மறுப்பதாகவும் வதந்தி பரவியுள்ளது. தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா வயதானவர் என்பதால் அவருடன் ஜோடியாக நடிக்க மறுத்ததாக வெளியான செய்தியில் உண்மை இல்லை.என்னிடம் கால்ஷீட் இல்லை.

நிறைய படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். எனவேதான் பாலகிருஷ்ணாவுடன் நடிக்க முடியவில்லை. இனிமேல் அவருடன் நடிக்க அழைத்தால் நிச்சயம் நடிப்பேன்.

மாற்றான் படத்தில் சூர்யாவுடன் டூப் போடாமல் சண்டை காட்சியொன்றில் நடித்துள்ளேன். ஆகாயத்தில் துள்ளி குதித்து கஷ்டப்பட்டு இந்த சண்டை காட்சியில் நடித்தேன்.

துப்பாக்கி படத்தில் வித்தியாசமான கேரக்டரில் வருகிறேன். விஜய் அமைதியானவர். கேமரா முன் வந்து விட்டால் சரவெடி போல் வெடிப்பார். சூர்யா மற்றவர்களுக்கு உதவி செய்யும் சுபாவம் உள்ளவர்.

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

POPULAR POSTS