9:17 AM
0
 
 
 
ஒரு சொல் என்ற படத்தில் நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் டைரக்டர் வேடத்தில் நடிக்கிறார். ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம் மூலம் ஒரு கிராமம் தன்னிறைவு அடைய முடியும் என்ற கருவை மையமாக வைத்து, `ஒரு சொல் என்ற படம் தயாராகி வருகிறது. விவசாயம் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக மாற வேண்டும், விவசாயிகள் மாத சம்பளம் வாங்க வேண்டும் என்ற கருத்துகள் இந்த படத்தில் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் டைரக்டராகவே நடிக்கிறார். இவருடன் தினேஷ், ரித்திக் என்ற 2 ஹீரோக்களும், மீனாட்சி என்ற புதுமுக நாயகியும் அறிமுகம் ஆகிறார். மேலும் டி.பி.கஜேந்திரன், மீசை முருகேஷ், நெல்லை சிவா, உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
 
கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டராக வி.வி.ஆர்.கே.வி. அறிமுகம் ஆகிறார். சுரேஷ் ஒளிப்பதிவு செய்ய, சாமுவேல் இசையமைக்கிறார். படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் நடந்து வருகிறது.



0 comments:

Post a Comment

POPULAR POSTS