நடிப்பு: ஸ்ரீமன், நாசர், இளவரசு, மீனாள், தர்ஷினி, ஆஷா, அருணா, ஆர்த்தி, ஆர்.எஸ்.சிவாஜி, வையாபுரி
தயாரிப்பு: சூத்ரத்தார்
இயக்கம்: தக்காளி சீனிவாசன்
இசை: பீட்டர் பால ாஜி
ஒளிப்பதிவு: எழில்
தக்காளி சீனிவாசன் இயக்கி உள்ள திகில் படம் இது.
சாகச நிகழ்ச்சி ஒன்றிற்காக கோடிக்கணக்கில் பரிசு தொகையை அறிவிக்கிறது ஒரு தனியார்
தொலைகாட்சி நிறுவனம் இந்த பரிசுப் பணத்துக்காக ஆவிகள் நிறைந்த ஒரு தீவுக்கு செல்ல பலர் போட்டி போடுகிறார்கள். அதில் ஸ்ரீமன், இளவரசு, வையாபுரி, மீனாள், தர்ஷினி, ஆஷா, ஆர்த்தி என பத்� �து பேர் கொண்ட ஒரு குழு தேர்வாகிறது.
அவர்கள் உயிரைப் பணயம் வைத்து, ஆபத்து நிறைந்த தீவுக் காட்டுக்குள் செல்கின்றனர். அங்குள்ள ஒரு பங்களாவில் தங்குகின்றனர். அங்கு சென்ற பிறகுதான், தங்களை ஏமாற்றி அனுப்பி உள்ளனர் என்று தெரிகிறது. இதனால் அதிர்ச்சி ஆடைவதோடு, ஒவ்வொருவராக கொலை செய்யப்ட மற்றவர்கள் பீ� �ியில் உறைந்து போகின்றனர்.
இவர்களை யார் கொலை செய்கிறார்?. ஏன் இவர்கள் இங்கு வரவழைக்கப்பட்டனர் என்பது பரபரப்பான கிளைமாக்ஸ் முடிச்சு.
திகில் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு பெயரை வைத்திருக்கும் தக்காளி சீனிவாசன், இந்தப் படத்தையும் செம மிரட்டலோடு கொடுத்தி� ��ருக்கிறார். நடுங்க வைக்கும் அந்த அடர்ந்த காட்டுக்குள் நம்மையும் அழைத்துச் சென்று பயமுறுத்துகிறார். படம் வேகமாக இருப்பதோடு உடனே முடிந்துவிட்டது போன்ற உணர்வையும் தருகிறது.
நாசரின் கோபமும், வேதனை வெளிப்பாடும் அருமை. கிளைமாக்ஸ் காட்சியில் ஸ்ரீமன் நடிப்பு பலே. எட்டு நிமிடங்கள் அவர் உயிர ுக்காக போராடி மாண்டு போவது பரபரப்பு. தூக்கு போட்டு தொங்குவதை கூட ஒரே ஷாட்டில் காட்டி உள்ளனர். ஆர்த்தி, வையாபுரி, இளவரசு சிரிக்க வைத்து இறக்கின்றனர்.
திகில் படம் என்றாலே இசையும், ஒளிப்பதிவும்தான் அப்படத்திற்கு மிகப் பெரிய பலம். அதை இசையமைப்பாளர் பீட்டர் பாலாஜியும், ஒளிப்பதிவாளர் எழிலும் செய்திருக்கின்றனர்.< /div>
http://actressmasaala.blogspot.com
0 comments:
Post a Comment