கடலோர மீவர்களின் வாழ்க்கையும், புலம்பெயர்ந்த தமிழர்களின் நிலைகளையும் எடுத்துச் சொல்லும் படமாக ரசிகர்களின் மத்தியில் நல்ல படம் என்ற பெயரைச் சம்பாதித்த படம் தான் நீர்ப்பறவை.
இந்தப்படத்தில் ஹீரோவாக விஷ்ணுவும்,ஹீரோயினாக சுனேனாவும் நடித்திருந்தனர். தேசிய விருதுகளை வாங்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தை டைரக்டர் செய்த சீனுராமசாமி தான் இந்தப்படத்தை டைரக்ட் செய்திருக்கிறார்.
மீனவ மக்களின் அவலநிலையை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டும் இந்தப்படம் இப்போது தென்கொரியாவில் நடைபெறும் Jeonju சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வருகிற ஏப்ரம் மாதம் 25-ஆம் தேதி முதல் மே மாதம் 3 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் ஹிந்தியல்லாத திரைப்பட பிரிவில் இந்தப்படம் திரையிடப்பட இருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் டைரக்டர் சீனு ராமசாமி “ இது போன்ற நல்ல படங்களை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்தது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாகவும்,பெருமையாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட தேர்வுகள் தொடர்ந்து தமிழில் தரமான திரைப்படங்களை எடுக்க வழிவகை செய்யும் என்று கூறியிருக்கிறார்.
Tamil news Tamil movies Tamil Cinema Tamil movie Kollywood Tamil cinema Tamil actors Tamil actress Tamil movie news tamil newsKollywood Tamil movie
No comments:
Post a Comment