Monday, February 25, 2013

பவர் ஸ்டாருடன் குத்தாட்டமா..? : அலறி ஓடிய லட்சுமிராய்!

நடிகர் விஜய்யின் பி.ஆர்.ஒ பி.டி.செல்வகுமார் முதல்முறையாக டைரக்ட் செய்து வரும் படம் தான் ‘ஒன்பதுல குரு’.
வினய், சத்யன், பிரேம்ஜி, சாம்ஸ் உட்பட பலர் நடிக்கும் இந்தப்படத்தில் ஹீரோயினாக லட்சுமிராய் நடிக்கிறார். இந்த படத்தின் டைட்டில் பாடலுக்கு ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் ஒரு குத்தாட்டம் போடுகிறாராம். இந்த குத்தாட்டத்தில் ஹீரோயின் லட்சுமிராயையும் அவருடன் சேர்ந்து ஆட வைக்க முயற்சிகள் நடந்தது.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் பாப்புலரான பவர்ஸ்டார் தனது சம்பளத்தையும் உயர்த்தியிருக்கிறாராம். அவரை இந்தப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட கூப்பிட்ட போது முதலில் மறுத்து விட்டாராம். ஆனால் உங்களுடன் சேர்ந்து லட்சுமிராயும் ஆட்டம் போடுகிறார் என்று சொன்னதும் பீஸ் போல பல்புக்கு பவர் வந்த கதையாக குஷிமூடில் உடனே ஓ.கே சொல்லிவிட்டாராம் சீனிவாசன்.
ஆனால் இந்த தகவலை கேள்விப்பட்ட லட்சுமிராய் பவர் ஸ்டார் சீனிவாசனுடன் ஆடவே முடியாது என்று மறுத்து விட்டாராம். மேலும்
பவர் ஸ்டாரா..? அப்படின்னா யாரு..? என்றும், யாருன்னே தெரியாதவங்க கூடயெல்லாம் என்னால டான்ஸ் ஆட முடியாது என்றும் கண்டிஷனாக கூறினாராம்.
இதனால் வேறு வழியின்றி பவர் ஸ்டார் சீனிவாசனை மற்ற துணை நடிகைகளுடன் சேர்ந்து ஆட வைத்து பாடல் காட்சியை படமாக்கியிருக்கி முடித்திருக்கிறார்கள்.
இதற்கிடையே “ தன்னுடன் ஆட மறுத்த லட்சுமிராயை எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுத்து ஒரு படத்தில் ஹீரோயினியாக்கியே தீருவேன் என்று பிடிவாதமாக இருக்கிறாராம் பவர்.
அதுசரி பவர் ஐஸ்வர்யாராய்க்கே நூல் விட்டவராச்சே..? செஞ்சாலும் செய்வார்.

No comments:

Post a Comment