10:14 AM
0






சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு மறக்க முடியாத நாள் ஜூலை 13 ஆகும்.

உடல் நலக்குறைவு காரணமாக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவிட்டு அன்றுதான் ரஜினி சென்னை திரும்பி வந்தார்.


அவர் உடல் நலம் பாதித்த நாளிலிருந்து, � �லமுடன் நாடு திரும்பி வரும் வரை நடந்த ரசிகர்களின் பிரார்த்தனைகளை எழுதவும் முடியாது, சொல்லவும் முடியாது.

நாட்டில் உள்ள குக்கிராமங்கள், பட்டிதொட்டிகள், மாநகரங்கள் என அனைத்து இடங்களிலும் அவருக்காக பிரார்த்தனைகள் நடந்தது. மன்றத்திலிருப்பவர்கள் என்றில்லாமல், சாதாரண பொதுமக்களும் மனமுருகி வேண்டினர். தாய்மார்கள் பலர் விரதமிருந்தனர். சிலர் முடிகாணிக்கை கூட செலுத� ��தினர்.

இப்போது ரஜினி நலமுடன் உள்ளார். அவர் நடிப்பில் அடுத்த படமும் வெளிவரவிருக்கிறது.

இந்நிலையில் தங்கள் தலைவரின் உடல் நிலை சரியானதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்தும்விதமாக சென்னை மாவட்ட மன்றத்தைச் சேர்ந்த ரசிகர்கள் வியாழக்கிழமை காலை யாத்திரை புறப்பட்டுள்ளனர்.

ரஜினி உடல் நலமின்றி இருந்தபோது எந்தெந்த புனிதத் தலங்களுக்குப் போய் வேண்டிக் கொண்டார்களோ, அந்த கோயில்களுக்கெல்லாம் போய் நேர்த்திக் கடன் செலுத்தினார்கள். சென்னை மன்ற நிர்வாகிகள் ராமதாஸ், கே ரவி, சூர்யா மற்றும் சைதை ரவி உள்ளிட்டோர் இந்தப் பயணத்தில் பங்கேற்றனர்.

இந்த யாத்திரையை முடித்துக் கொண்டு ரஜினி வீட்டுக்குப் போன அனைவரும், பிரசாதத்தை அவர் வீட்டில் ஒப்படைத்தனர்.





0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

POPULAR POSTS