3:37 AM
0
திரிஷாவை மணக்க நடிகர் ராணா பெற்றோர் எதிர்ப்பு? திரிஷாவை மணக்க நடிகர் ராணா பெற்றோர் எதிர்ப்பு?
திரிஷாவை மணக்க நடிகர் ராணா பெற்றோர் எதிர்ப்பு?

சென்னை, செப். 21-

திரிஷாவும் பிரபல தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக செய்திகள் பரவியுள்ளது. இருவரும் விருந்து நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்கிறார்கள். படவிழாக்களிலும் சேர்ந்து பங்கேற்கின்றனர்.

சமீபத்தில் ஆங்கில பத்திரிக்கையொன்றுக்கு ஒன்றாக போஸ் கொடுத்தார்கள். ஒருவருக்கொருவர் இனிப்பு ஊட்டிவிடுவது போன்றும், ராணா மார்பில் திரிஷ� � சாய்ந்து இருப்பது போன்றும் படங்கள் எடுத்துக் கொண்டனர். இது தெலுங்கு, தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இருவரின் நெருக்கத்தையும் காதலையும் பிரதிபலிப்பது போல் இந்த படங்கள் இருந்ததாக கூறப்பட்டது. ராணா குடும்பத்தினர் ஆந்திராவில் பெரிய கோடீஸ்வரர்களாக உள்ளனர். இவரது தந்தை சுரேஷ் பாபா சினிமா தயாரிப்பாளராக உள்ளார். இவர் பிரபல தயாரிப்பாளர் ராமா நாயு� ��ுவின் மகன் ஆவார். தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவும் ராணாவுக்கு உறவினர். ஆந்திராவில் ராணாவுக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் ஏராளமான பங்களா வீடுகள் உள்ளன.

ராணா அறிமுகமான முதல் தெலுங்கு படம் 'லீடர்' இப்படம் வெற்றிகரமாக ஓடியது. திரிஷாவை காதலிப்பது ராணா பெற்றோருக்கு பிடிக்கவில்லை. காதலை முறிக்கும் படி அவர்கள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதன� �ல் இருவரும் அதிர்ச்சியில் உள்ளனர். பெற்றோர் விருப்பப்படி பிரிந்து விடுவதா அல்லது எதிர்ப்பை மீறி திரிஷாவை மணப்பதா என்று ராணா யோசித்து வருகிறார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

POPULAR POSTS