09-04-2012
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
2 வாரங்களாக கடும் வேலைப் பளு. அதனால் எழுத முடியவில்லை. சரி சேர்த்து வைத்து எழுதிக் கொள்ளலாம் என்று நினைத்து கொஞ்சம் லேட் செய்துவிட்டேன்.. ஸாரி.. மன்னிக்கணும்..!
கந்தா - ரிலீஸ் ஆகவில்லை..!
பாவம் இயக்குநர் திருவாரூர் பாபு. 'கனகவேல் காக்க', 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படங்களுக்கு முன்பாக இவரது இயக்கத்தில் கரண் ஹீரோவாக நடிக்க பூஜை போட்டு எடுத்து முடிக்கப்பட்ட படம் 'கந்தா'. இன்றுவரையிலும் ரிலீஸாக விமோசனமில்லை..!
'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படம் வெளியாகி பல மாதங்களான சூழலில் கரணுக்கு தற்போது இருக்கும் மார்க்கெட்டுக்கு ஏற்றாற்போல், கிடைத்த இடங்களில் தியேட்டர்கள் எல்லாம் புக் ஆகி, தயாரான நிலையில் ரிலீஸுக்கு முதல் நாள் படத்தின� � தயாரிப்பாளர் சீட்டிங் கேஸில் கைது செய்யப்பட பட வெளியீடும் புஸ்ஸாகிவிட்டது..!
புதிய இயக்குநர்களின் படம் வெளிவந்தால் அந்த இயக்குநருக்கு மட்டுமல்ல.. அதில் பணியாற்றியிருக்கும் பல புதியவர்களுக்கும் வாழ்க்கை கிடைக்கும். திருவாரூர் பாபு என்ற பெயரில் இவர் எழுதிய கதைகள் வெளியாகாத பத்திரிகைகளே இல்லை.. அந்த அளவுக்கு கதைச் சுரங்கமாக தோற்றமளிக்கும் பாபுவின் இந்தக் கதையும் சோகமாகத்தானிருக்கிறது..! எப்படியும் இந்த மாதம் ரிலீஸாகலாம் என்கிறார்கள் தயாரிப்புத் தரப்பு. ஆனால் சீட்டிங் கேஸ் பைசல் செய்யப்பட்டால்தான் முடியும் என்கிறது எதிர்த் தரப்பு..! நடுவில் இயக்குநரை கவனிக்கத்தான் ஆளே இல்லை..!
மனோ மகன் ஷாகிரின் அறிமுகம்..!
நாங்க படத்தின் ஹீரோக்களில் ஒருவராக பின்னணிப் பாடகர் மனோவின் மகன் ஷாகிரும் நடித்திருக்கிறார். நாங்க படம் படம் வெளியான மூன்றே நாட்களில் தியேட்டரில் இருந்து சுருட்டி அனுப்பப்பட்டது மிகப் பெரும் சோகக் கதை.. திருச்சி மாரீஸ் தியேட்டரில் முதல் நாள், முதல் காட்சிக்கு ஒற்றை இலக்கத்தில்தான் ஆள்கள் வந்திருக்கிறார்கள். ஷோ கேன்சல்.. பல இடங்களில் இரவுக் காட்சிகள் கேன� �சல் செய்யப்பட்டது. இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் அதிகப்பட்சமாக விளம்பரச் செலவுகளைச் செய்யாமல் சுருக்கிக் கொண்டு தப்பித்திருக்கிறார் தயாரிப்பாளர் செல்வா.
இ தற்காக படித்தில் நடித்தவர்கள் அப்படியே விட முடியுமா..? மனோ ஒரு பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்து தனது மகனை அறிமுகப்படுத்தி வைத்து பத்திரிகையாளர்களிடம் ஆசி வாங்க வைத்தார். கையோடு ஒரு பிளாஸ்டிக் பையை கொண்டு வந்தார். ஏதாவது பிரிண்ட்ட் பேப்பர்கள் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அதில் இருந்த்து இசைஞானி இளையராஜாவின் புகைப்படம். தனது பேச்சைத் துவக்குவதற்கு முன்பாக � ��ந்தப் புகைப்படத்தை எடுத்து தனது கைகளில் தாங்கிப் பிடித்துக் கொண்டு, "நான் இந்த அளவுக்கு உயர்ந்து, உங்கள் முன்னால் நிற்பதற்குக் காரணம் இந்தத் தெய்வம்தான்.." என்றார்.. பத்திரிகையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!
பொழுது போக்கு புது பட பூஜை
வடசென்னை பக்கம் இருந்து வர்றேன் என்று சொன் னாலே ஒரு ஸ்டெப் பின்னாடி தள்ளி நின்னு பேசற அளவுக்கு வடசென்னையில் பெயர் பரவலாக தமிழகமெங்கும் பரவியிருக்கிறது..! அந்தப் பெயரை இந்தப் படத்தின் மூலமா மாத்தப் போறாங்களாம்..! வடசென்னையிலும் மக்கள்தான் வசிக்குறாங்க. அவங்கள்லேயும் நல்லவங்க இருக்காங்கன்றதுதான் படத்தோட இந்த பொழுது போக்கு படத்தோட கதையாம்..
"படத்தோட கதையைக் கேட்டவுடனேயே படம் தயாரிக்க ஒத்துக்கிட்டேன்" என்றார் தயாரிப்பாளர் சீனிவாசன்.. இப்படி தயாரிப்பாளர்களெல்லாம் இண்டஸ்ட்ரில இருக்கும்போது ஏன் ஆள் கிடைக்கலைன்னு இயக்குநர்கள் புலம்புறாங்கன்னு தெரியலை..!
ஹீரோயினை வளைச்சு வளைச்சு பேட்டியெடுத்தாச்சு.. கேமிராமேன், இசையமைப்பாளரையும் பேச வைச்சாச்சு.. படத்தோட இயக்குநர் எங்கப்பான்னு கேட்டுக் கேட்டு சலிச்சுப் போச்சு பத்திரிகையாளர்களுக்கு.. வெளியூர் போயிருக்கார். திரும்பி வர முடியலைன்னு ஒரு பதிலையே சொல்லி திருப்பியனுப்பினார்கள் தயாரிப்புத் தரப்பினர்.. ஆனாலும் நெருக்கி விசாரித்தபோது கிடைத்த த் தகவல் கொஞ்சம் ஷாக்.
இயக்குநர் நடமாட முடியாத அளவுக்கு உடல் ஊனமுற்றவராம். எங்கே சென்றாலும் அவரை யாராவது தூக்கிட்டுத்தான் போகணுமாம்..! கேட்டதும் அதிர்ச்சியாகிவிட்டது.. பின்ன எப்படி இயக்கம்..? என்று கேட்டால்.. "அதெல்லாம் செய்வாரு ஸார்.." என்று திடமாக பதில் வந்தது கேமிராமேனிடமிருந்து..! வாழ்த்துகள்..!
நான் ஈ - ஆடியோ ரிலீஸ்
சத்யம் திரையரங்க மேடையை நிரப்பிவிட்டார்கள் திரையுலகப் பிரபலங்கள். தமிழ்த் திரையுலகில் பல பெரிய தயாரிப்பாளர்களுக்கும் கற்பக விருட்சமாக இருக்கும் பிவிபி கம்பெனி தயாரிப்பு என்பதால் அழைக்கப்பட்ட அனைத்து விஐபிக்களும் தவறாமல் ஆஜர். அதிசயித்திலும் அதிசயம் கழுத்தில் ருத்திராட்ச மாலையோடு பால ாவும் வந்திருந்ததுதான்..!
பார்த்திபன் பேசும்போது நான் ஈயை வைட்டமின் ஈயோடு ஒப்பிட்டவர் சட்டென டிராக் மாறி, ராமஜெயம்ன்னு பேர் வைச்சுக்கிட்டாலும் தப்பிக்க முடியாது போலிருக்கே என்று சிச்சுவேஷன் பன்ச் வைத்தார்..! படத்தின் ஹீரோ மிகவும் சிரமப்பட்டு தமிழிலேயே பேசிவிட்டுப் போனார்..!
ஆனால் சமந்தா பொண்ணுதான் எதைப் பத்தியும் கவலைப்படாம, தமிழ் ஆங்கிலம் ரெண்டையும் ஒண்ணா கலந்து பேசிட்டுப் போச்சு.. பொண்ணு மேடைல உக்காந்த போஸ்ல பாவம்.. ரொம்ப டயர்டாயிருக்கும்னு நினைக்கிறேன். எதுக்கு இப்படி டிரெஸ் பண்ணிட்டு வரண� �ம்.. இவ்ளோ கஷ்டப்படணும். ஆனாலும் நம்ம கேமிராமேன்கள் விடலையே.. ஜூம் பண்ணி எடுத்திருக்காங்க.. நெட்ல தேடிப் பாருங்க.. கிடைக்குது..!
சலவ்ப திரைப்பட விழா
சரண்யா லவ் பரத் இதுதான் படத்தோட கதை. இதைத்தான் சுருக்கமா இப்படி வைச்சிருக்காங்களாம்..! ஒரே நேரத்துல தமிழ், தெலுங்குல படம் தயாராகுது. 15 வரு� ��ம் கழிச்சு இந்தப் படத்துல அமர்க்களமா ஒரு கேரக்டர் ரோல் செஞ்சிருக்காரு நடிகை பிந்துகோஷ். கொஞ்சம் எடையெல்லாம் குறைச்சிருக்காரு..! 15 கிலோ சதையை வெட்டி எடுத்தாங்களாம்.. 3 தடவை ஆபரேஷன் பண்ணிக்கிட்டாராம்.. இன்னும் நிறைய நடிக்கணும் ஸார் என்றார் ஆசையோடு..!
படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ, ஹீரோயின் யாருக்குமே தமிழ் தெரியாது.. அத்தனை பிரஸ்காரங்களும் தலையைப் பிய்ச்சுக்கிட்டாங்க. இதை எப்படி நாங்க டிவில போடுறது என்று அங்கலாய்த்தார்கள். அத்தனை பேருக்கும் சேர்த்து பி.ஆர்.ஓ. யூனியன் தலைவரும், தயாரிப்பாளருமான விஜயமுரளி மேடையில் தனது பேச்சில ் அசத்திவிட்டார்..!
எந்த மேடையில் பேசினாலும் ஒரு கதை சொல்லாமல் முடிக்கமாட்டார் அண்ணன் விஜயமுரளி. இங்கேயும் ஒரு கதையைச் சொன்னார்.
"பிரம்மன் ஒரு தடவை அடுத்த பிறவில என்னவாகப் பிறக்கப் போகிறீர்கள்ன்னு சொல்லுங்க.. அது மாதிரியே பிறக்க வைக்கிறேன்னு மக்கள்கிட்ட சொன்னாராம்.. ஒருத்தன் மட்டும் ஒரு � ��ாரம் டைம் கேட்டு "பூகோளம் போயி நல்லா சுத்திப் பார்த்திட்டு வந்து சொல்றேன்"னு சொன்னானாம். பிரம்மாவும் சரின்னு சொல்ல ஒரு வாரம் கழிச்சு வந்து அந்த ஆளு, "நான் பூலோகத்துல தமிழ்நாட்டுல ஒரு சினிமா கதாநாயகனாத்தான் பொறக்கணும்"னு பிரம்மாகிட்ட கேட்டானாம்.. எதுக்குடான்னு பிரம்மன் கேட்டதுக்கு, "தமிழ்நாட்டுல சினிமா கதாநாயகன்கள்தான் ரொம்ப நிம்மதியா இருக்காங்க.. அவங்களுக்க ு ஒரு பிரச்சினையும் இல்லை. எல்லா செலவும் தயாரிப்பாளர்களுடையதுதான்.. போடுற ஜட்டில இருந்து சாப்பாடு, கார்ன்னு எல்லாத்தையும் தயாரிப்பாளர்களே செஞ்சுர்றாங்க.. அவங்கதான் அங்க ஹேப்பியா இருக்காங்க. அதுனால அது மாதிரி என்னை பண்ணிடுங்க"ன்னு சொன்னானாம்..! அது மாதிரி சினிமா துறைல தயாரிப்பாளர்களைத் தவிர மத்தவங்க எல்லாம் நல்லாத்தான் இருக்காங்க.." என்றார்.
- இப்படி ஒரு கதையை பெரிய நடிகர்கள் இருக்குற மேடைல, அதுலேயும் தமிழ் நடிகர்கள் இருக்குற மேடைல சொன்னா என்ன ஆகும்..?
பாட்ஷா ஹிந்திக்கு போகுதாம்..!
இத்தனை வருஷம் கழிச்சு இப்போ ஏன் பாட்ஷா படத்தை இந்திக்குக் கொண்டு போகணும்ன்னு தெரியலை..! சத்யா மூவிஸ் சும்மாவே இருக்கிறதாலே ஏ� �ாவது காசாவது கிடைக்குதேன்னு ரைட்ஸை தூக்கிக் கொடுத்துட்டாங்களோன்னு தோணுது. இதுக்குப் பதிலா அவங்களே இந்த வேலையைச் செஞ்சிருக்கலாம்..!
கரெக்ட்டா பேட்டி எடுக்கத் துவங்கியபோது பிரசாத் ஸ்டூடியோ வாசலில் ரஜினி ரசிகர்கள் தெளஸண்ட் வாலா வெடியை போட்டு அமர்க்களப்படுத்திவிட்டார்கள். தயாரிப்பாளர் ரொம்ப விவரமாத்தான் இருக்காரு போலிருக்க� ��..! ஹிந்தியில் பாஷா என்ற பெயரில் ரிலீஸாகுதாம்..!
இப்போ இருக்குற நிலைமைக்கேத்தாப்புல கலர் கரெக்ஷன் செஞ்சிருக்காங்க. தேவா திரும்பவும் புதுசா இசையமைச்சு அதனை ஸ்டீரியோபோனிக் ம� ��த்தட்ல அமைச்சிருக்காங்களாம்..! நிறைய செலவு பண்ணியிருக்கிறதா தயாரிப்பாளர் சொன்னாரு..! படத்தையும் போட்டுக் காட்டினாங்க.. ரஜினிக்கு டப்பிங் பேசினவரு வாய்ஸ்தான் கொஞ்சம் சரியில்லாத மாதிரியிருந்ததா முழு படத்தையும் பார்த்தவங்க சொன்னாங்க..! எனக்கு என்னமோ.. தமிழ்லேயே இந்தப் படத்தை பிடிக்கவே இல்லை. ஏன்னுதான் தெரியலை..!
http://cinemanews10.blogspot.com
0 comments:
Post a Comment