3:57 AM
0



எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் படங்களை இயக்கிய டைரக்டர் ஜெகநாதன் ஆஸ்பத்திரியில் அனுமதி எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் படங்களை இயக்கிய டைரக்டர் ஜெகநாதன் ஆஸ்பத்திரியில் அனுமதி

சென்னை, அக். 5-

டைரக்டர் ஏ.ஜெகநாதனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவர் எம்.ஜி.ஆர், நடித்த இதயக்கனி, சிவாஜி நடித்த வெள்ளை ரோஜா, ரஜினியின் மூன்று முகம், தங்கமகன், கமலின் காதல்பரிசு படங்களை இயக்கியவர் ஆவார்.

திருப்பூரில் வசிக்கும் மகளை பார்ப்பதற்காக ஜெகநாதன் சென்று இருந்தார். அங்கு அவருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக திருப்பூர் மெடிக்கல் பவுண்டேஷன் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஜெகநாதனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஜெகநாதன் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். தற்போது தமிழக அரசின் திரைப்பட விருதுகள் தேர்வு குழுவில் உறுப்பினராக உள்ளார். இவருக்கு 78 வயது ஆகிறது. மனைவி மற்றும் 1 மகன், 2 மகள்கள் உள்ளனர்.

0 comments:

Post a Comment

POPULAR POSTS