தனுஷ் பிறந்த நாள் ஸ்பெஷல் : .
எதிர்பாராமல் புறப்பட்டு வந்து இதயங்களை பிடித்தவர் தனுஷ். நேஷனல் அவார்டு இவ்வளவு இளம் வயதில் என்பது இதுவே முதல் தடவை என்கிறார்கள். தனுஷ் பற்றி கொறிக்க கொஞ்சம் தகவல்கள்:
தேனி சொந்த ஊராக இருந்தாலும் சார் பிறந்து வளர்ந்தது எல்லாம் ச� ��ன்னைதான். சாதாரண ஸ்கூலில் படித்து, சாதாரணமான ஆவ்ரேஜ் ஸ்டூடண்ட் ஆக இருந்து +2 முடித்தவர். அதற்கு மேல் அய்யாவிற்கு படிப்பு ஏறவில்லை.
அக்கா டாக்டர் படிப்பு, அண்ணன் இன்ஜினியரிங் என முடித்திருந்தாலும் தனக்கு படிப்பு ஏறவில்லை என்பதில் தனுஷ்சிற்கு கொஞ்சம் வருத்தமே. ஆனால் பிள்ளைகளை பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
அப்ப ா, அம்மா வைத்த பெயர் வெங்கட் பிரபு. இன்னமும் அம்மா தனுஷ்சை அழைப்பது செல்லமாக பிரபு என்றுதான் அக்காக்கள் செல்லமாக கூப்பிடுவது 'குட்டி' என.
பைக் பிரியர். ஹெல்மெட் போட்டுக்கொண்டு நடமாட்டம் இல்லாத சாலையில் அதிவேகத்தில் பறந்து கொஞ்சம் தூரம் போவது அவரது பொழுதுபோக்கு.
குழந்தைகளை மீடியா போர்வையிலிருந்து பாதுகாத்தே வைத்திருக்கிறார் தனுஷ். எங்கே வெளியே கிளம்பின ாலும் குழந்தைகள் வீட்டில் இருக்க விட்டுத்தான் போவது வழக்கம்.
கடவுள் பக்தர். தீவிரமான ஆன்மீகவாதி. தினமும் காலையில் பூஜை புனஸ்காரம் முடித்துவிட்டுத்தான் அடுத்த வேலை.
வீடு, அலுவலகம் என எங்கே ரசிகர்களை பார்த்தாலும் போட்டோ எடுத்துக்கொள்ள ஆவலோடு முன்வருவார். பள்ளிக்கூட மாணவர்கள் என்றால் 'போங்கய்யா, படிக்கப்போங்க' என விரட்டுவார்.
அரசியல் ஆர்வம் மூச்! எதுவ ுமே கிடையாது. ஆனால் என்ன நடக்கிறது என விரல்நுனியில் வைத்திருப்பார். எந்தச் சமயத்தில் யாருடன் பேசினாலும் அரசியல் பற்றி மூச்சு விட மாட்டார்.
நெருங்கிய பத்திரிக்கையாளர்களுக்கு கூட அலைபேசி நம்பரை தரமாட்டார். ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி என்றுதான் எண்ணைப் பெற முடியும். மீடியாவை தேவைப்படும்போது மட்டும் மதிக்கிற குணம்.
மனைவி, ஐஸ்வர்யா டைரக்ஷனில் இறங்கியபோது 'வெரிகுட்' சொன்னது தனுஷ்தான். மனைவிக்காக டிஸ்கஷன் முதற்கொண்டு, தயாரிப்பு நிர்வாகம் வரைக்கும் இறங்கி வேலை பார்ப்பார் தனுஷ்.
இரண்டு குழந்தைகளுமே தாத்தா ரஜினியின் செல்லம்தான். எந்த நேரமாக இருந்தாலும் திடீர் திடீரென வந்து பேரனை கொஞ்சிவிட்டு போவார் ரஜினி. ராத்திரிகளில் கூட குழந்தைகள் தாத்தாவை கேட்டு அழுதால் ஆஜராவார் ரஜினி.
தனுஷ் அம்மா செல்லம். எவ்வளவு வேலை இருந்தாலும் அம்மாவோடு தினமும் பேசிவிடுவார். ஊரில் இருந்தால் ஞாயிறுக்கிழமை அண்ணன், அக்காவோடு சேர்ந்து சாப்பிட்டு அட்டகாசமாக சிரித்து மகிழ்வார்கள். அந்த மீட்டிங்கில் சினிமாவைப் பற்றி பேசுவது கிடையாது.
குறைவாக சாப்பிடுவார். ப்யூர் வெஜிடேரியன். நான்&வெஜிடேரியன் அயிட்டங்களை திரும்பிக்கூட பார்க்க மாட்டார். இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு புருவங்களை உயர்த்தி � �த்து இட்லி சாப்பிட்ட மாதிரி பிரமிப்பார்.
தனிமை விரும்பி. அதிகமான நண்பர்கள் கிடையாது. நடிகர்களிலும் பெரிதாக நண்பர்கள் கிடையாது. வெற்றிமாறன் உள்ளிட்ட ஒரு சில டைரக்டர்களிடம் கொஞ்சம் வெளிப்படையாக பழகுவார்.
இப்போதுதான் பார்ட்டிக்கு அடிக்கடி போகிறார். ஆனால் அங்கேயும் 'அடக்கமாக' இருப்பதுதான் அவர் வழக்கம்.
உடை விஷயத்தில் அக்கறை இல்லாமல் இருந்தவரை அடியோட� � மாற்றியது மனைவி ஐஸ்வர்யாதான். இப்போது அய்யா கோட் சூட் என பின்னி எடுப்பதின் ரகசியமும் அதுதான். எப்போதும் அவருடைய டிசைனர் ஐஸ்வர்யாதான்.
தங்க நகைகளை விரும்ப மாட்டார். ஆர்வமும் கிடையாது. இப்போது சின்னதாக ஒரு நெளி மோதிரம் மின்னிக் கொண்டு இருக்கிறது யார் போட்டதோ!
கிசுகிசு என வந்தால் அதற்கு பதில் சொல்கிற வழக்கமே தனுஷ்சிடம் கிடையாது. ஸ்ருதியோடு இணைத்து பேசுகிறா ர்களே எனக் கேட்டால் அப்படியா, சும்மா பேசுறாங்க சார்! என அப்பாவியாக சொல்லிவிட்டு கேள்வியை முடித்துவிட்டு நெக்ஸ்ட் சார்' என்பார்.
தன்னைப்பற்றிய பேட்டிகள் வந்தாலும், அதை அடையாளம் கண்டு 'தேங்க்ஸ் சார்' சொல்கிற பழக்கம் ஆரம்பத்தில் மட்டும் இருந்தது. இப்போது எங்கே பார்த்தாலும் 'எப்படி இருக்கீங்க' என ஒரு வார்த்தையோடு புன்னகை இலவசம்.
இவ்வளவு இளம் வயதில் நேஷனல் � ��வார்டு வாங்கியது இவர்தான் என தகவல்கள் சொல்கின்றன.
'கொலவெறி' பாட்டின் மூலம் உலக அளவிற்கு பிரபலம் ஆனார் தனுஷ். ஏராளமான நடிகர்களை காதில் புகை விட வைத்தார் தனுஷ்.
தனுஷ்க்கு பில்லியர்ட்ஸ்தான் உயிர். வீட்டிலேயே அதற்கான கோர்ட் வைத்திருக்கிறார். அதில் பெரிய அனுபவம் பெற்றவர். கிரிக்கெட்டுக்கும் அடிமை.
ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சரியான நேரத்தில் வந்து சேர்வார். ர ொம்ப கலகலப்பாக இருக்காமல், கேரக்டருக்கு தகுந்த மாதிரி இருந்துகொண்டு புத்தகங்கள் படித்துக் கொண்டு இருப்பார்.
நிறைய பாடல்கள் எழுதி வைப்பது அவரது பொழுது போக்கு. அப்படி எழுதியவற்றை படித்த பிறகுதான் செல்வராகவன் அவரை, பாடல் எழுத வைக்கவும், பாடகராகவும், அனுமதித்தார்.
கார்களின் காதலன். அவரேதான் பெரும்பாலும் டிரைவ் செய்வார். எந்தக் கார் இறக்குமதி ஆனாலும் அதைப்ப� ��்றி தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவார்.
0 comments:
Post a Comment