5:07 AM
0

 சித்தார்த்தும், பிரியா ஆனந்தும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருவரும் தமிழில் வெளியான '180' என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது நட்பாக பழகினார்கள். தற்போது அது காதலாக மலர்ந்துள்ளது. 

 
சித்தார்த்தின் 'காதலில் சொதப்புவது எப்படி' படம் சமீபத்தில் ரிலீசானது. தற்போது 'தேசிய நெடுஞ்சாலை', 'காவியத் தலைவன்' படங்களில் நடித்து வருகிறார். பிரியா ஆனந்த் ஏற்கனவே 'வாமணன்' படத்தில் ஜெய் ஜோடியாக நடித்தார். தமிழ், இந்தியில் தயாராகும் 'இங்கிலீஸ் விங்கிலீஸ்' படத்தில் ஸ்ரீதேவியுடன் நடித்து வருகிறார்.
 
சித்தார்த்-பிரியா ஆனந்த் ஐதராபாத் ஓட்டல்களில் ரகசியமாக சந்தித்து காதல் வளர்ப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. சித்தார்த் தொடர்ந்து பல நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டு வருகிறார். இப்போது பிரியா ஆனந்துடன் நெருங்கிப் பழகுவதாக கூறப்படுகிறது. 
 
இதுபற்றி பிரியா ஆனந்திடம் கேட்டபோது அவர் மறுத்தார். சித்தார்த்துடன் காதல் என்பது வதந்திதான் என்றும் கூறினார். நானும் சித்தார்த்தும் நண்பர்களாக பழகுகிறோம். எங்களுக்குள் காதல் எதுவும் இல்லை என்றார்.

0 comments:

Post a Comment

POPULAR POSTS