12:03 AM
0


அமலா பால் எங்கு போனாலும் கூடவே ஏதாவது வில்லங்கத்தில் சிக்கிக் கொள்வதது சகஜமாகிவிட்டது.
இந்த முறை வெளிநாட்டில் வைத்து விவகாரம் கிளம்பியுள்ளது. சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியொன்றில் நடனமான அமலா பால� �க்கு பெரும் சம்பளம் பேசி அழைத்துச் சென்றார்களாம்.

பெரிய நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்ட அமலாவை, விழா துவங்கியதும் நடனமாட அழைத்தனர். ஆனால் வர மறுத்துவி்ட்டாராம். காரணம், கேட்டதற்கு, பேசின சம்பளத்தைக் கொடுக்காமல் எப்படி வர முடியும் என்று கேட்டுள்ளார்.
முழு தொகையும் செட்டில் பண்ணால்தான் நடனம் ஆடுவேன்.. இல்லாவிட்டால் மேடைக்கே வரமாட்டேன் என கறாராகச� � சொல்லிவிட்டாராம்.
விழா அமைப்பாளர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, அமலாபால் ரகளை செய்தது உண்மைதான். ஆனால் அது சம்பள பாக்கிக்காக அல்ல, விமான டிக்கெட் பிரச்சினைக்காக என்றனர்.
இந்த விஷயத்தில் அமலா பால் என்றல்ல... எந்த நடிகைகளையும் குறை சொல்ல முடியாது. சில ஏற்பாட்டாளர்கள், இப்படி வெளிநாட்டுக்கு கூட்டி வந்து, விழா முடிந்ததும் அம்போ என்று விட்டுவிட்டுப் பறந்துவிடுவார ்கள். எனவே இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைப்பவர்கள் முழுத் தொகையையும் முன்கூட்டியே கொடுத்தால்தான் நடிகைகள் வருவார்கள். இதுதான் கோடம்பாக்க வழக்கம். எனவே தவறு விழாக்குழுவினர் மீதுதான் என்றனர், இந்த விவகாரத்தின்போது உடனிருந்த சில கலைஞர்கள்.

0 comments:

Post a Comment

POPULAR POSTS