6:53 AM
0






எப்பவோ ஆரம்பித்த வாஸ்து திருத்தங்கள் இன்னும் முடியவில்லையாம் ரஜினி வீட்டில். போயஸ் தோட்டத்தில் வாஸ்து சரியில்லை என்று டாப் மோஸ்ட் ஜோதிடர்கள் கணித்தது எப்போது? ரஜினி உடம்புக்கு முடியாமல் போராடிக் கொண்டிருந்தாரே, அப்போது.

அவரை ச� ��ங்கப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இங்கே வாஸ்து வேலைகளை முடுக்கி விட்டிருந்தார் அவரது மனைவி லதா.
அவர் சுகமாக திரும்பி வந்த பின்பும் கூட இந்த வேலைகள் முடியாமல் தொடர்ந்து கொண்டிருந்ததால் மகள் வீட்டில்தான் தங்கியிருந்தார் ரஜினி.

இதற்கிடையில் தனது பழைய வீட்டிற்கு பின்புறமே புது வீடு ஒன்றை வாங்கியிருக்கிறாராம் அவர். அந்த வீட்டிலும் வாஸ் து மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவ்விரு வீடுகளையும் கொத்தனார்கள், சித்தாள்கள் ஆக்ரமித்துக் கொண்டிருப்பதால் ரஜினியின் சந்திப்பெல்லாம் இப்போது ராகவேந்திரா மண்டபத்தில்தான் நடந்து வருகிறதாம்.

அடிக்கடி இமயமலைக்கு போகிற வழக்கமுள்ள சூப்பர் ஸ்டார் இப்போது அங்கு போவதையும் நிறுத்திவிட்டார். ரஜினி இருக்கிற இடமே திருப்பதி என்று கருதுகிற அவரது ரசிகர்கள� �� அவ்வப்போது மண்டப வாசலில் கூடி தலைவர் முகம் தெரிகிறதா என்ற தேவுடு காக்கிறார்கள்.
.





0 comments:

Post a Comment

POPULAR POSTS