4:55 AM
0






வாழ்க்கையில் தாழ்வு மனப்பான்மை மட்டும் இருக்கக் கூடாது. அதேபோல பணம் மட்டுமே பிரதானமா இருக்கக் கூடாது. இது ரெண்டையும் கடைபிடிச்சா, வாழ்க்கையில் கேட்காததுகூட கிடைக்கும், என்கிறார் சந்தானம்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக இருந்� ��ாலும், கடவுள் விஷயத்தில் மட்டும் ரொம்பவே நெஞ்சைத் தொட்டு விடுகிறார்கள்.

சந்தானமும் அதற்கு விலக்கல்ல. கல்கி, நித்யானந்தா என தன் ஆன்மீகத்தைத் தேடிக் கொண்டிருந்த சந்தானம், இப்போது யோகாசனங்கள், தியானம் பற்றிப் பேச ஆரம்பித்துள்ளார்.
சமீபத்தில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் ஒரு ஆன்மீக நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுப் பேசினார்.
யோகமும் மனித மாண்பும் என்ற தலை� ��்பில் நடந்த அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சந்தானம் பேசுகையில், "ஆடியோ வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா போன்ற மேடைகளில் ஏறிய எனக்கு இது ஒரு புதுமையான அனுபவம். படிப்பு சரியாக வராத காரணத்தால் நான் சினிமாவுக்கு வந்தேன்.
இங்க வந்த பிறகு கத்துக்கிட்டது 'தாழ்வு மனப்பான்மை இருக்கக்கூடாது' என்பதுதான். நம்மைப் பற்றி நமக்கே நம்பிக்கை இருந்தால� �, எல்லாம் நன்றாக நடக்கும், சந்தோஷமாக நடக்கும் என நினைக்க வேண்டும்.
என்ன வேலை, எவ்வளவு சம்பளம் என்பதையே சிந்தித்து கவனத்தை திசை திருப்பி வருகிறோம். இதற்கும் அப்பால் இறைநிலையோடு இருந்தால் வாழ்க்கையில் கேட்பது மட்டுமின்றி கேட்காததும் கிடைக்கும்," என்றார்.
'என்ன பண்றது சந்தானம்.... நீங்க சம்பாதிச்சிட்டீங்க... இறை நிலை பத்தி பேசறீங்க... சம்பாதிக்க வாய்ப்பு குறைவா இருக் கிறவன் சம்பளத்தை மட்டும்தானே சிந்திக்க முடியும்!!'
.


.
.






0 comments:

Post a Comment

POPULAR POSTS