அடர்ந்த காடு... அதற்குள் அனுஷ்காவும் ஆர்யாவும்! .
'பத்து நாள் குளிக்காமல் இருந்தாலும் பரவால்லப்பா' என்கிற தைரியம் தேவைப்படுகிறவர்கள் பாலாவின் படத்தில் ஒரு துண்டு சீனிலாவது நடித்திருந்தால்போதும்.
அந்த தில் தானாக வந்து சே� ��்ந்துவிடும். அப்படி 'நான் கடவுள்' படத்தின் மூலம் காலத்தால் அழிக்க முடியாத, கடலாலும் செரிக்க முடியாத அனுபவத்தை சேகரித்து வைத்திருக்கும் ஆர்யா,
ஒரு படத்தில் பழங்குடிவாசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். (ச்சும்மா கொஞ்ச நேரத்துக்குதானாம்)
கருப்பு மையும் இடுப்பை சுற்றி இலை சமாச்சாரங்களும் இருந்தால் பழங்குடி பையன் ரெடி என்பதெல்லாம் அந்த காலம். இப்போது ச� ��ன்ன சின்ன வேடங்களுக்கு கூட நடிகர்களை கசக்கி பிழிய கற்றுக் கொண்டு விட்டார்கள் இயக்குனர்கள். அதிலும் செல்வராகவனிடம் பாட்சா பலிக்குமா?
தனது இரண்டாம் உலகம் யூனிட்டை அழைத்துக் கொண்டு ஜார்ஜியா காட்டுப்பகுதிக்கு போயிருக்கிறாராம். அங்குதான் ஆர்யாவுக்கு கருப்பு மையை பூசி, கண்ணோரம் டெரரை ஏற்றியிருக்கிறார். சிங்கம், புலி, சீறி வரும் பாம்புகள் திரியும் காட்டுக்குள் படப்பிடிப்பு நடக்கிறதாம்.
ஆர்யாவை விடுங்கள்... இந்த யூனிட்டோடு போய் காட்டுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார் அனுஷ்கா. அவருக்கும் கருப்பு மை, இடுப்பை சுற்றி இறகும் தழையும் என்று டெரர் கிளப்பி வருகிறாராம் செல்வா.
.
0 comments:
Post a Comment