2:58 AM
0


நடிகை காம்னாவை நள்ளிரவில் 40 நிமிட நேரம் காரில் துரத்திய வாலிபர்களை போலீசார் ஈவ்டீசிங் வழக்கில் கைது செய்தனர். தமிழில் 'இதயத் திருடன், மச்சக்காரன் உள்ளிட்ட ப� ��ங்களில் நடித்தவர் காம்னா. கடந்த வெள்ளிக்கிழமை மும்பையில் உள்ள ஒரு தியேட்டரில் நைட்ஷோ பார்த்துவிட்டு நள்ளிரவு 1.30 மணி அளவில் போரிவிலி பகுதியிலிருந்து அந்தேரியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் புறப்பட்டார். அவரை அடையாளம் கண்டுகொண்ட சில வாலிபர்கள், தங்களது காரில் பின்தொடர்ந்தனர். 
கார் ஜன்னல் வழியாக தலையை வெளியில் நீட்டி ஆபாசமாக பேசி அவரை கிண்டல் செய்தனர். அவரது காருக்கு முன்னும் பின்னுமாக தங்களது காரை ஓட்டி வழிமறிக்க பார்த்தனர். இதில் நடுங்கிப்போன காம்னா பலமுறை சாலையோரம் உள்ள நடைபாதை மேடையில் தனது காரை மோதினார். ஆனால் காரை நிறுத்தவில்லை.

ஒரு வழியாக அவர்களிடமிருந்து தப்பி வீடு வந்து சேர்ந்தார். இதுபற்றி காம்னா கூறும்போது, 'என் வாழ்வில் இப்படியொரு பயத்தை நான் அனுபவித்தது கிடையாது. ஆபாசமாக � �த்தியபடி என்னை அந்த வாலிபர்கள் துரத்தி ஈவ் டீசிங் செய்தனர்.

எனது காரை தடுத்து நிறுத்துவதிலேயே குறியாக இருந்தார்கள். எனது பயத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. காரில் இருந்தபடியே அவர்கள் ஓட்டி வந்த காரின் பதிவு எண்ணை கவனித்தேன். 40 நிமிட நேர துரத்தலுக்கு பிறகு அவர்களிடமிருந்து தப்பினேன். இந்த சம்பவம் பற்றி போலீஸில் புகார் செய்தேன். அவர்களை ஈவ்டீசிங் வழக்கில் ப� ��லீசார் கைது செய்தனர் என்றார்.
.

0 comments:

Post a Comment

POPULAR POSTS