10:35 PM
0


பால்டிமோர்: அமெரிக்கா கனடாவிலிருந்து இரண்டாயிரம் தமிழர்கள் ஒன்று கூடி வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் வெள்ளி விழாவை மு.வரதராசனார் நூற்றாண்டு விழாவாக சிறப்பாக கொண்டாடினர்.
பால்டிமோர் சிம்போனி அரங்கத்தில் மின ி தமிழகத்தையே பார்க்க முடிந்தது.

தமிழகத்திலிருந்து எஸ்.ராமகிருஷ்ணன், மறைமலை இலக்குவனார், தமிழச்சி தங்கபாண்டியன், திரை நட்சத்திரங்கள் பரத், அமலா பால், சிவ கார்த்திகேயன், பிண்ணனி பாடகி சித்ரா, சின்னத்திரை ப்ரியதர்ஷினி, மதுரை முத்து, இந்திய கம்யூனிஸ்ட் நல்லகண்ணு, சகாயம் ஐஏஎஸ் ஆகிய பிரபலங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் மூன்று தினங்களாக நடைபெற்றது.
சிறப்ப� �� விருந்தினராக மேரிலாண்ட் மாகாண அட்டார்னி ஜெனரல் டக் கான்ஸ்லர் கலந்து கொண்டார். இவர் மேரிலாண்டின் அடுத்த கவர்னர் (முதல்வர்) ஆகும் வாய்ப்புள்ளவர் என்பது குறிப்பிடத் தக்கது.
மேரிலாண்ட் மெஜாரிட்டி லீடர் குமார் பார்கவே, மாண்ட்கோமரி கவுண்டி தலைவர் இக் லெக்கெட், மலேசிய துணை முதல்வர் பினாங்கு ராமசாமி, இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
வெள்ளிவிழா ஒருங்கிணைப்பாளர் பாலகன் ஆறுமுகசாமி மற்றும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை தலைவர் டாக்டர் தண்டபாணி வரவேற்றுப் பேசினர்.
ராஜன் நடராஜன்
தமிழகத்திலிருந்து அமெரிக்கா சென்று உயர்ந்த அரசியல் பதவி பெற்ற முதல் தமிழரான, மேரிலாண்ட் மாகாண திட்ட மற்றும் வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் (அமைச்சர்) ராஜன் நடராஜன், கவர்னர் மார� ��டின் ஓ'மலே அவர்களின் மாநாட்டு பிரகடனத்தை அறிவித்தார்.
கவர்னர் குறிப்பிடுகையில் தமிழ்ச் சமுதாயத்தின் அறிவுத்திறனையும் கடின உழைப்பையும் பாராட்டியிருந்தார். தமிழர் உள்ளிட்ட பல்வேறு இன மக்களின் பங்களிப்பு அமெரிக்காவின் முக்கிய அங்கமாகிவிட்டது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மெஜாரிட்டி லீடர் குமார் பார்கவே, பேரவையின் வெள்ளி விழா மாநாட்டில் கலந்து கொள்வது தனக� ��கு கிடைத்த கௌரவம் என்று குறிப்பிட்டார். மேலும் மேரிலாண்டில் தமிழ்ச் சமுதாயத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றார்.
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் பேசுகையில், "இலங்கையில் தமிழர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளுக்காக, அடக்குமுறையை கண்டித்து உலக நாடுகள் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும்" என்றார்.
ருத்திரகுமாரன்
'லட்சக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை கொ� �்று குவித்ததன் மூலம், உலகெங்கும் உள்ள ஐம்பது மில்லியன் தமிழர்களையும் போராளிகளாக இலங்கை அரசு மாற்றிவிட்டது. உலகெங்கும் உள்ள தமிழர்களின் உரிமைக்காக 'நாடுகடந்த தமீழீழ அரசாங்கம்' போராடும் என அதன் பிரதமர் ருத்திரகுமாரன் தெரிவித்தார்.
இலக்கிய நேரம்
மு.வரதராசனார் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் தமிழறிஞர் மறைமலை இலக்குவனார் சிறப்புரை ஆற்றினார்.
'இதயங்கள் இ ணையட்டும்' என்ற தலைப்பில் அமெரிக்கத்தமிழர்கள் படைத்த கவிதைகளை, கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் திறனாய்வு செய்ய கவியரங்கம் நடைபெற்றது.
நடிகர் சிவகார்த்திகேயன் தலைமையேற்று, 'நேற்று இன்று நாளை' என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சியை நடத்தினார்.
டி.கே.எஸ். கலைவாணன் மற்றும் குழுவினரின் தமிழிசை அரங்கம் என்ற பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடந்தது.
நாற்பதுக்கும் மேற்பட்ட அமெ� �ிக்கத்தமிழர்கள் பங்கேற்ற இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு தமிழ் இலக்கிய கேள்விகளுக்கு எந்த தடுமாற்றமும் இல்லாமல் சரளமான பதில்களால், பார்வையாளார்களை அதிசயப்படுத்தினர்.
'Spelling Bee' என்ற ஆங்கில வார்த்தை விளையாட்டுக்கு நிகராக தமிழ்த்தேனீ என்ற சிறப்பு வினாடி வினாவும் நடைபெற்றது.
அமெரிக்காவில் உள்ள தமிழ்ப்பள்ளிகளை ஒருங்கிணைத்து ஒரே பாடத் திட்டத்� ��ின் கீழ் கொண்டு வரும் பணியை அமெரிக்க தமிழ்க் கல்வி கழகம் எவ்வாறு செய்து வருகிறது என்பதை செந்தில் சேரன், சிவானந்தன் ஆகியோர் எடுத்துரைத்தார்கள்.
வாசிங்டன் தமிழ்ச்சங்கம், பனைநில தமிழ்ச் சங்கம், சிலம்ப அரசி நகர தமிழ்ச்சங்கம், அட்லாண்டா பெரு நகர தமிழ்ச் சங்கம், நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம், பாஸ்டன் தமிழ்ச் சங்கம், நியூயார்க் தமிழ்ச் சங்கம், கரோலைனா தமிழ்ச் சங்கம� �, டெலவர் பெருநிலத் தமிழ்ச்சங்கம் மற்றும் கனேடிய தமிழர் பேரவை சார்பாக, இசை, நடனம், நாடகங்கள் இடம் பெற்றன.
எஸ் ராமகிருஷ்ணனின் கதை நேரம்
எழுத்தாளார் எஸ். ராமகிருஷ்ணன் பல்வேறு கதைகளைக்கூறி, நாம் சொல்லும் வார்த்தைகள் எவ்வளவு முக்கியம் வாய்ந்தவைகள் என்று விவரித்தார். யாரிடமாவது எதையாவது கேட்கும் போது 'ஒன்னும் இல்லை' என்ற பதில்கள் எரிச்சலை உண்டாக்கும். ஆனால், மருத்த� �� பரிசோதனைகள் முடிந்து டாக்டர் 'ஒன்னும் இல்லை' என்று சொல்லும் போது ரொம்பவும் மகிழ்ச்சியடைகிறோம். அன்றாட வாழ்வில் வார்த்தைகளை சரியாக கையாழும் போது, ஒருவருக்கு ஏற்றத்தை தரும் என்பதை ஒரு பிச்சைக்காரர் கதை மூலம் சொன்ன போது பார்வையாளர்கள் மெய்சிலிர்த்தனர்.
சாதாரண மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் எழுத்தாளார்களுக்கும் வார்த்தைகளை சரியாக கையாழ்வது மிகவும் முக்கியமான வ ிஷயம் என்று எஸ். ராமகிருஷ்ணன் விளக்கமாகக் கூறினார்.
வேலு நாச்சியார்
சென்னை ஸ்ரீராம் சர்மா குழுவினரின் வேலு நாச்சியார் நாட்டிய நாடகம் நடந்தது. மணிமேகலை சர்மா, ஓ.ஏ.கே.சுந்தர், சின்னத்திரை ப்ரியதர்ஷினி, ஜான் ஜாக்சன் ஆகியோருடன் பெருவாரியான அமெரிக்கத் தமிழர்களும் பங்கேற்றனர்.
மதுரை முத்துவும் மல்லிகையும்
ஒரு பக்கம் மதுரை முத்து அவ்வப்போது தோன்றி அரங்கத்தை சி� �ிப்பொலியால் ஆர்ப்பரிக்க செய்தார். இன்னொரு பக்கம் பாரம்பரிய உடையுடன் தமிழ்ப்பெண்கள் நிஜமான மதுரை மல்லிகைப்பூவை சரம் சரமாக தலையில் சூடிக்கொண்டு, அழகுக்கு அழகு சேர்த்து பால்டிமோர் நகரை மதுரையாக்கி விட்டார்கள்.
நடிகர்கள் பரத், அமலா பால், சிவகார்த்திகேயன் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நேர்முக நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. பரத் தாடியுடன் வித்த� �யாசமான தோற்றத்தில் வந்திருந்தார். துபாய் நிகழ்ச்சியை போலில்லாமல், நாகரீகமான உடையில் அமலா பால் இருந்தார்.
எளிமை, நேர்மைக்கு பாராட்டு
நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட எளிமையான அரசியல்வாதியான இந்திய கம்யூனிஸ்ட் முக்கிய தலைவர் நல்லகண்ணு மற்றும் நேர்மைக்கு பெயர் பெற்ற மாவட்ட கலெக்டர் சகாயம் ஐஏஎஸ் ஆகிய இருவரும் தான் விழாவின் நாயகர்கள் ஆக அலங்கரித்தார்கள். திரை நட்ச� �த்திரங்களை விட இவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள அதிகம் பேர் முண்டியடித்துக் கொண்டிருந்தனர் என்றால் அவர்களின் எளிமைக்கும் நேர்மைக்கும், பார்வையாளர்கள் கொடுத்த முக்கியத்துவம் புரிகிறதல்லவா?
மனுதாரர்கள், அரசு அதிகாரிகளிடம் வலியுத்தி அவர்களை எவ்வாறு தமிழில் கையெழுத்து போட வைக்கிறார் என்பதை பல சுவாராஸ்யமான தகவலகளுடன் பகிர்ந்து கொண்டார்.
சின்னக்குயில� � சித்ரா
விழாவின் முக்கிய பகுதியாக பிண்ணனி பாடகி சித்ரா பங்கேற்ற ஐங்கரன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. குழலூதும் கண்ணனுக்கு என்று ஆரம்பித்த் அவரது குயிலோசை நள்ளிரவு தாண்டினாலும் கட்டுக்கடங்காத கூட்டத்தினரின் கரவோசையுடன் தொடர்ந்தது.
மாநாட்டிற்காக உழைத்த வாசிங்டன் வட்டார தமிழ்சங்கத்தை சார்ந்த 120 குடும்ப உறுப்பினர்களையும் மேடைக்கு வரவழைத்து நன்றி � �ெலுத்தியது நெகிழ்ச்சியாக இருந்தது.

0 comments:

Post a Comment

POPULAR POSTS